காரைதீவின் மறக்கமுடியாத மனிதர்

வைத்தியகலாநிதி.மா.பரசுராமன் அவர்கள்.

மட்டக்களப்பு காரைதீவுமண்ணில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த மாணிக்கப்பிள்ளை தங்கமுத்து தம்பதியருக்கு மகனாக 1929 ஏப்ரல் முதலாந்திகதி பரசுராமன் அவர்கள் பிறந்தார். இவருக்கு அமரர் வைரமுத்து (முன்னாள்புகையிரதநிலைய பொறுப்பதிகாரி) அவர்கள் மூத்தசகோதரர் பிரித்தானி யாவில் வாழும் தெய்வானைப்பிள்ளை (முன்னாள் புனித மைக்கல்கல்லூரி ஆசிரியை) இளையசகோதரி இவர்கள் இருவரும் உடன்பிறந்தவர்களாகும். முன்னாள் காரைதீவின் சேர்மனும் ஓவசியருமான பொன்னையா தம்பதியரின் மகளான லெட்சுமியை மணம்முடித்த பரசுராமன்லெட்சுமி தம்பதியருக்கு சிவசக்கி (கனடா), ஜெயரமணி (டென்மார்க்) மற்றும் அமரர் செந்தில்வாசன் என்னும் மூன்றுபிள்ளைகள்.

பரசுராமன் அவர்கள் கல்விபயின்று வைத்தியகலாநிதியாகப்பட்டம் பெற்றவர். ஒருஅரசமருத்துவராக இணைந்து கடமைசெய்ய விரும்பாது தான்பிறந்து வளர்ந்த ஊரிலேயே தனியான வைத்தியசாலையினை அமைத்து காரைதீவிற்கும் அதனைச்சூழவுள்ள ஊர்களில் வாழ்ந்த மக்களுக்காகவும் தனது வைத்திய சேவையினை செய்தவர். மூஸ்லீம்மக்கள் மத்தியில் கறுத்தடாகுத்தர் என அன்பாக அழைக்கப்பட்ட பரசுராமன் அவர்கள் தனது வெள்ளைமனமுள்ள அன்பான சுபாவத்தால் பலரின் மனதில் நிறைந்தவர். மகப்பேற்று மருத்துவத்திற்கான வைத்தியசேவையில் மிகச்சிறந்த கைராசிக்காரடாகுத்தர் எனப்பெயர்பெற்ற இவரை கல்முனை, காரைதீவு. சம்மாந்துறை, சாய்ந்தமருது, நிந்தவூர் மற்றும் அதனைச்சார்ந்த பிரதேசங்களிலிருந்து மக்கள் அவரது வைத்தியசேவையை நாடினர். தனது வீட்டில் வைத்தியசேவையைச் செய்து வந்த டாக்கடர். பரசுராமன் அவர்கள் பின் இப்பிரதேசத்தில் ஏற்பட்ட சிலஅசம்பாவிதங்களால் தற்போது இராணுவமுகாமுள்ள தனது கட்டிடத்தில் ‘வாசன் கிளினிக்’ நடத்தி வந்து அதன் பின்னர் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலையினால் மீண்டும் தனது வீடமைந்துள்ள வளவினுள் தனியான கட்டிடத்தில் ‘வாசன் கிளினிக்’கை இடம்மாற்றி இறக்கும்வரை தனது மருத்துவசேவையயை 50 வருடங்கள் செய்தவர்.

கண்ணகி அம்மன் ஆலயதர்மகர்த்தாவாகவும் பணியாற்றிய டாக்டர்.பரசுராமன் அவர்கள் சகவண்ணக்கர்களை அரவணைத்து அவர்களின் கருத்துக்களையும் மதித்து சகலருக்கும் கண்ணகித்தாயின் அருள்கிடைக்க அக்கோயிலை அழகுற புனருத்தாரணம் செய்வித்தவர். ஊரின் எல்லையில் எதிர்காலத்தில் காரைதீவிற்கு ஏற்படக்கூடிய தீமைகளை முன்கூட்டியே அறிந்து தான் ஆலையவண்ணக்கராக இருந்தகாலத்தில் ஊரின் எல்லைப்பகுதி நிலங்களை கோயிலின்சொத்தாக வாங்கி ஊரை ஒருபாதுகாப்பு வளையத்துள் கொண்டுவந்த பெருமகன். எந்தவித குளறுபடிகளுமில்லாமல் தனது நேர்மையான>சாதுரியமாக பிரச்சனைகளை கையாளும் திறமையாலும் சிறந்தஅறிவாற்றலாலும் காரைதீவுஊரையும் 25வருடங்கள் கண்ணகிஅம்மன் ஆலையத்தையும் தர்மகர்த்தாவாக இருந்து நிருவகித்தவர்.

15வருடங்கள் கிராமாட்சி மன்றத்தலைவராக காரைதீவில் பல அபிவிருத்தித் திட்டங்களைச் செய்து கிராமத்தை மெருகூட்டியவர். கிராமசபையில் சேர்மனாக பதவிவகித்த காலத்தில் காரைதீவிற்கான கூட்டுறவுச்சங்கத்தை ஸ்தாபித்து அதற்கான கட்டிடத்தையும் நிறுவி அதன் தலைவராகவும் பணியாற்றியவர். மற்றும், இருளாக இருந்த கிராமத்திற்கு மின்சாரஇணைப்பினை ஏற்படுத்தி ஊரினை வெளிச்சத்திற்கு கொண்டுவந்து மெருகூட்டியவர். மேலும், வீதிஅபிவிருத்தி, பாடசாலைகளின் முன்னேற்றம் மற்றும் அரசகட்டிடங்கள் காரியாலயங்களை அதற்கென தனியாக அமைத்து ஊர்மக்களின் தேவைகளை காரைதீவின் கண்ணாக இருந்து இலகுபடுத்டுதியவர். தான் கிராமசபைத்தலைராக கடமையாற்றாத காலத்தில் தனது உறவினரும் காரைதீவின் மற்ரொரு கண்ணென போற்றப்பட்ட மதிப்பிற்குரிய சேர்மன் திரு.இ.விநாயகமூர்த்தி அவர்களும் காரைதீவின் நலன்கொண்டு உழைத்தவர். இவர்கள் இருவரும் காரைதீவின் இரண்டுகண்களாக இருந்து ஊரைச்சிறப்புறச்செய்த இருமாமனிதர்களாவர்.

தான் வாழ்ந்தகாலத்தில் உலகத்தமிழப்பேராசானும் முத்தமிழ்வித்தகரும் அதிசிறந்த கல்விமானுமான விபுலாநந்தருக்கு நினைவுப்பணிமன்றம் அமைத்து முழுதிருவுருவச்சிலைநிறுவி சுவாமிகளின் ஞாபகார்த்த நினைவுநாளினை மிகச்சிறப்பாக நடத்தியவர். இவ்விழா சிறப்பாக அமைவதற்காக விபுலாநந்த அடிகளாரின் மாணவரும் அவர்பால் அன்பும்>மரியாதையும் கொண்ட தவத்திரு குன்றக்குடிஅடிகளாரை காரைதீவு மண்ணிற்கு அழைத்து கௌரவம்செய்தவர். சுவாமிகளின் விழாசிறப்புற அமைவதற்காக பணிமன்றத்தின் தலைவராக டாக்டர் மா.பரசுராமன் அவர்கள் இருந்து தனது தலைமைத்துவ வழிநடத்தலில் உறுப்பினர்களான காரைதீவின் சிறந்தசமூகப்பற்றாளனும் அறிஞருமான அமரர் எம்.சற்குணம்,திரு.க.ஆறுமுகம்(முன்னாள்தலைமைஆசிரியர்), திரு.சே.பொன்னம்பலம் (முன்னாள் தலைமைஆசிரியர்), திரு.இரா.கிருஷ;ணப்பிள்ளை. திரு. சி.அருள்சிவம் (முன்னாள் உ.அ.அதிபர்) திரு.இ.வேல்நாயகம் (முன்னாள் தர்மகாத்தா கண்ணகி அம்மன்ஆலையம்),திரு.பூ.சுந்தரம்பிள்ளை(முன்னாள்ஆசிரியர்),கலாநிதி.இ.பாலசுந்தரம் (கனடா)ஆகியோரின் கூட்டுமுயற்சியாலும் அளப்பரிய தன்னலம் கருதாத சேவையினாலும் முதன் முதலாக சுவாமிகளின் பெருமை சொன்ன மிகச்சிறந்த பொக்கிசமான ‘அடிகளார் படிவமலர்’ வெளியீட்டுடன் சுவாமிகளின் 22வதுவருட நினைவுவிழா 1969ம் ஆண்டு மிகவிமர்சையாக ஒன்றாக இணைந்து நடத்தினர். மேலும் தனதுகனவான சுவாமிகளின் நினைவுப் பணிமண்டபத்தினை அமைப்பதற்காக பலநன்கொடையாளிகளிடமும் அரசிடமும் நிதியுதவிபெற்று பலகோடிரூபாய்செலவில் விபுலாநந்தர் பிறந்த வளவினுள் அந்தபெருமண்டபத்தினை அமைத்தபெருமை டாக்டர்.மா.பரசுராமன் அவர்களையே சாரும். சுனாமியின்போது இந்தமணிமண்டபம் தன்னகத்தே பலரை உள்வாங்கி அரவணைத்துக்கொண்டது. அதுமட்டுமன்றி இன்றும் அந்தக்கட்டிடம் பல தேவைகளுக்காக ஊர்மக்களால் பயன்படுத்தப்படுவதை நாம் காணலாம்.

கொழும்பு-வெள்ளவத்தை மற்றும் மட்டக்களப்பு-கல்லடியிலுள்ள இராமகிருஷ;ண மிசனுக்கு தன்னாலான உதவிகளை வழங்கிய டாக்டர் அவர்கள் அதற்கு பொறப்பாக இருந்த தனது ஊரவரான நடராஜானாந்தஜீ, பின்னர் சுவாமி ஜீவாநந்தஜீ ஆகியோருடன் மிக நெருங்கிய உறவைப்பேணிவந்தவர். காரைதீவில் சைவசமயத்தின் அறநெறிகளையும் நமது மதத்தின் மாண்பையும் இளைஞர்கள் அறிந்து அதன்பால் மனவிருப்புடன் செயலாற்றுவதற்காக முதன்முதலாக இந்துசமய அபிவிருத்திச்சங்கம் நிறுவி இளைஞர்களை சைவநெறியில் வாழவழிகாட்டியவர். இன்று அவரால் உருவாக்கப்பட்ட இந்துசமய அபிவிருத்திச்சங்கமானது தொடர்ச்சியான தங்களின் சிறந்தபணிகளுடன் காரைதீவுச்சந்தியில் சுவாமி விபுலாநந்தருக்கு பிரமாண்டமான சிலைநிறுவி சாதனை படைத்துள்ளனர்.

‘உள்ளக்கமலமடி உத்தமனார் வேண்டுவது’ என்னும் சுவாமிகளின் பாடலுக்கு பொருத்தமாக கறுப்புடாக்டர் எனஅன்புடன் அழைக்கப்பட்ட வைத்தியகலாநிதி மா.பரசுராமன் அவர்கள் கறைபடியாத பெருமகன். வெள்ளைச்சேட்டும் வெள்ளை வேட்டியுடன் காரைதீவுமண்ணில் வாழ்ந்து அம்மக்களுக்காக தன்னை அர்ப்பணித்த வெள்ளையுள்ளம் கொண்ட மறக்கமுடியாத மனிதன்.

கோடானுகோடி மக்களை மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டு அம்மா உயிர் பிரிந்தது: கண்ணீரில் மிதக்கிறது தமிழகம்

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 75 நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் திங்கட்கிழமை இரவு 11.30 மணிக்கு பிரிந்தது. அவருக்கு வயது 68. முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் பிரிந்த தகவல், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் நள்ளிரவில் அதிகாரபூர்வமாக வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஒட்டுமொத்தமே தமிழகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

(“கோடானுகோடி மக்களை மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டு அம்மா உயிர் பிரிந்தது: கண்ணீரில் மிதக்கிறது தமிழகம்” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F.C (பகுதி 82 )

யாழ்ப்பாண அரச நிர்வாகம் ஓரளவு அரசால் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருந்தது.பிரதான பிரச்சினையான உணவுப் பிரச்சினை தொடர்பாக அரச அதிபர் பஞ்சலிங்கம் எந்த அக்கறையும் காட்டவில்லை. தன் பதவியை இயக்கங்கள் அரசாங்கம் இரண்டுக்கும் நடுவே காப்பாற்ற நாடகமாடிக் கொண்டிருந்தார்.
பற்குணம் கொழும்பு யாழ்ப்பாணம் என பயணம் உணவுகள் கொண்டுவந்து சமாளித்தார் .ஆனாலும் கொழும்பில் பாதுகாப்பு அமைச்சிலுள்ள இனவாதிகள் கொஞ்சம் நெருக்கடிகள் கொடுத்தனர்.இதனிடையே ஒரு முறை உணவுகளை ரயில் மூலமாக கொண்டுவர ்மிகவும்சிரம்ப்பட்டு ஏற்பாடு செய்தார்.இந்த தகவலை சிலரிடம் பகிர்ந்து கொண்டார்.உணவுத் திணைக்களத்திலுள்ள ஊழல் பேர்வழிகள் புளொட் அமைப்புக்கு தகவல்களை வழங்கிவிட்டனர்.

(“பற்குணம் A.F.C (பகுதி 82 )” தொடர்ந்து வாசிக்க…)

தமிழர் அரசியலில் மாற்றுச் சிந்தனைகள்” நூல் வெளியீடு

‘தமிழர் அரசியலில் மாற்றுச் சிந்தனைகள’; என்ற எனது நூல் வெளியீட்டு நிகழ்விற்குச் சகல தமிழ் அரசியல் கட்சித்தலைவர்களையும் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை மாட்டச் சகல தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களையும் மாகாண சபை உறுப்பினர்களையும் அழைப்பு அதிதிகளாக அழைத்திருந்தேன். அவர்களுடன் பேசி அவர்களுடைய சம்மதத்துடனேயே அழைப்பிதழில் அவர்களுடைய பெயர்களையும் பதிவாக்கியிருந்தேன்.

(“தமிழர் அரசியலில் மாற்றுச் சிந்தனைகள்” நூல் வெளியீடு” தொடர்ந்து வாசிக்க…)

ஃபிடல் காஸ்ட்ரோ: வரலாற்றின் விடுதலை

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

வரலாற்றின் வழித்தடத்தில் தவிர்க்கவியலாத தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் வெகுசிலரே. அதிலும் வரலாற்றின் திசைவழியை மாற்றியவர்கள் மதிக்கத்தக்கவர்கள் மட்டுமன்றி மாண்புடையோருமாவர். உலகில் ஒடுக்கப்படும் மக்களுக்கான அயராத குரல்கள் எப்போதும் மெச்சத்தக்கன. அவ்வாறான குரல்கள் உலகெங்கும் போராடுவோருக்கு முன்உதாரணமாக, உந்துசக்தியாக இருக்கும். உலகை நேசித்த அக்குரல்கள் காலம்கடந்தும் நிலைக்கும். வரலாறு அவ்வாறான குரல்களை விடுதலை செய்யும்.

(“ஃபிடல் காஸ்ட்ரோ: வரலாற்றின் விடுதலை” தொடர்ந்து வாசிக்க…)

மட்டக்களப்பு தேரர் ஆர்ப்பாட்டத்துக்கு முஸ்தீபு

வெறுப்புணர்வைத் தூண்டும் சட்ட ரீதியற்ற ஒன்று கூடலைத் தடுக்கும் தடை உத்தரவு, மட்டக்களப்பு மாவட்டத்தில் பிறப்பிக்கப்பட்டிருக்கின்ற வேளையிலும் மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டம் நடத்த அங்குள்ள பிக்கு, இன்று சனிக்கிழமை (03) பிற்பகல் முயற்சி மேற்கொண்டதால் மட்டக்களப்பு நகரில் சற்று பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது (“மட்டக்களப்பு தேரர் ஆர்ப்பாட்டத்துக்கு முஸ்தீபு” தொடர்ந்து வாசிக்க…)

கனடாவிற்கு பிரதம விருந்தினராக அழைக்கப்படவிருந்த முதல்வர் விக்னேஸ்வரன் தடுக்கப்பட்டதெப்படி?

அண்மையிலே கனடாவில் இடம்பெற்ற ஒரு தமிழர் அமைப்பொன்றின் 25 வருட நினைவுக் கொண்டாட்டத்திற்கான பிரதம விருந்தினராக தமிழர்களின் தற்போதைய தலைவராகத் தற்போது பார்க்கப்படும் உயர்நீதமன்ற நீதியரசர் விக்னேஸ்வரனே அழைக்கப்படவிருந்தார்.

(“கனடாவிற்கு பிரதம விருந்தினராக அழைக்கப்படவிருந்த முதல்வர் விக்னேஸ்வரன் தடுக்கப்பட்டதெப்படி?” தொடர்ந்து வாசிக்க…)

தவறுகளை மறவுங்கள். மீண்டும் கிளறாதீர்கள்!

ஈழத்தமிழர் வரலாற்றில் தவறு செய்யாத தலைமைகள் என்று எவரும் இல்லை. அது மிதவாதம் தீவிரவாதம் பயங்கரவாதம் என எவ்வாறு அழைக்கப்பட்டாலும் அதன் தலைமைகள், “இடக்கன்னத்தில் அடித்தால் வலக்கன்னத்தையும் காட்டு” என்று சொன்ன யேசுபிரான்கள் அல்ல. எதோ வகையில் எதிர்ப்பை, வெறுப்பை விதைத்தவர்கள். அதனால் தான் தமிழ் காங்கிரஸ் பிளவுபட்டு தமிழ் அரசு கட்சி பின்பு அதுவும் பிளவுற்று சுயாட்சி கழகம் என தொடர்ந்தது.

(“தவறுகளை மறவுங்கள். மீண்டும் கிளறாதீர்கள்!” தொடர்ந்து வாசிக்க…)

பல ஆயிரம் மக்கள் வீதியெங்கும் குழுமியிருக்க பிடல் காஸ்ட்ரோ இன் இறுதி யாத்திரை

வெள்ளை றோஜா மலர்களினால் சோடிக்கப்பட்ட பச்சை நிற ரஷ்யத் தயாரிப்பான இராணுவ ஜீப் வாகனத்தில் நாலு நாட்கள் கியூபாவின் பட்டி தொட்டியெல்லாம் 800 கிலோ மீற்றர் பயணம் செய்த பிடல் காஸ்ட்ரோவின் அஸ்தி இறுதி அமைவிடமான சன்டியாகோவை இன்று அடைந்தது. வீதி எங்கும் பல ஆயிரத்தற்கு மேற்பட்ட மக்கள் குழுமி நின்ற தமது தலைவனுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். புரட்சிக்கு பின்னர் 50 வருட காலமாக கியூபாவின் ஆட்சிப் பொறுப்பில் நாட்டை வெற்றிப்பாதையில் கொண்டு சென்ற தமது தலைவனுக்கு தமது கண்ணீரை காணிக்கையாக்கி வழியனுப்பி வைத்தனர்.

(“பல ஆயிரம் மக்கள் வீதியெங்கும் குழுமியிருக்க பிடல் காஸ்ட்ரோ இன் இறுதி யாத்திரை” தொடர்ந்து வாசிக்க…)

நினைவுகளிலிருந்து சில …….

தோழர் நடேசலிங்கம் EPRLF இல் களப்பலியான முதலாவது தோழர். வன்னி மாவட்டத்தில் பெரிய தம்பனையில் பிறந்து சுன்னாகம் ஸ்கந்தவரோதய கல்லூரியில் கல்விகற்ற தோழர் நடேசலிங்கம் 28 -11-1981 அன்று ஸ்ரீ லங்கா இராணுவத்தினரது சுற்றி வளைப்பில் கொல்லப்பட்டார். அந்த வகையில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முதலாவது தியாகிகளில் ஒருவர் தோழர் நடேசலிங்கம் அவர்கள் ஆகும்.

(“நினைவுகளிலிருந்து சில …….” தொடர்ந்து வாசிக்க…)