சமூகநல அரசாங்கங்களின் முடிவு: ஸ்கன்டினேவிய அனுபங்கள்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான உறவு, தொடர்ச்சியாக மாற்றமடைந்து வருகிறது. மக்களின் நலன்களைக் காக்கும் அரசாங்கம், ஒருபோதும் இருந்ததில்லை. ஆனால், போராட்டங்களும் புரட்சிகளும் அரசாங்கத்தை, மக்கள் நலன் பேணும் ஒன்றாக மாற்றின. இப்போது நிலைமை மாறுகிறது. அரசாங்கங்கள் சமூக நலன்களைத் தவிர்ப்பனவாக உருமாறியுள்ளன. இம்மாற்றம், சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கி உள்ளது.

(“சமூகநல அரசாங்கங்களின் முடிவு: ஸ்கன்டினேவிய அனுபங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

திலீபனுக்கு மிக அமைதியாக செலுத்தப்பட்ட அஞ்சலி!

தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை தடுப்பதற்கு சிறிலங்கா பொலீஸ் தரப்பிலிருந்து போடப்பட்ட வழக்கினை சுமந்திரன் தலைமையிலான சட்டத்தரணிகள் மிக நிதானமாக கையாண்டு வெற்றிபெற்றிருக்கிறார்கள். இருந்தாலும், இந்த வழக்கை தங்களது தேசிய சதிராட்டத்துக்கு கிரீடமாக வைத்து எப்படியாவது தங்களது அணிக்காக ஒரு goal அடிக்கவேண்டும் என்று கடைசிவரை குறுக்காலும் மறுக்காலும் ஓடித்திரிந்த கோஷ்டிகள் தற்போது நீதிமன்றத்துக்கு வெளியில் வந்து நின்று வழக்கை வென்ற சுமந்திரனுக்கே வகுப்பெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

(“திலீபனுக்கு மிக அமைதியாக செலுத்தப்பட்ட அஞ்சலி!” தொடர்ந்து வாசிக்க…)

1990ம் ஆண்டு……………………

1990ம் ஆண்டு நான் ஒருவிபத்தாக வடக்குகிழக்குமாகாணசபை உறுப்பினராக இருந்த போது ஒரேநாளில் மூன்று பாடசாலைகளைத் திறந்தோம் .இதுமாவடிச்சேனை அல் இக்பால் வித்தியாலயம்…அதிபராக கணிதப்புலி அக்கரைப்பற்றைச்சேர்ந்த ஹயாத்து பாவா ஆசிரியரை நியமித்தோம் …

நண்பர் Y.அகமத் அவர்கள் கோட்டக்கல்வி அதிபராகவிருந்தார் அவரின் பங்களிப்பே அதிகம் ..நான் ஒரு டிரக்டரில் பிறைந்துரைச்சேனை அதிபரான SAS மகுமூத் அவர்களிடம் கதிரை மேசைகளை இரவலாக ஏற்றிவந்தேன் ..கோட்டக்கல்வி அதிகாரி அவர்களும் நானும் விருந்தினர் பதிவேட்டில் குறிப்புகளை எழுதி பாடசாலையை ஏழு மணிக்கெல்லாம்ஆரம்பித்து வைத்தோம்..
அன்று கற்குடா முஸ்லிம்களுக்கு ஒரேநாளில் மூன்று பாடசாலைகள் உருவாக ஒத்துழைத்த நல்ல உள்ளங்களை இந்தக்கணத்தில் நினைவுகொள்கிறேன்…
முதலமைச்சராகவும் கல்விஅமைச்சராகவுமிருந்த தோழர் வரதராஜப்பெருமாள் , செயலாளராகவிருந்த ஜனாப் மன்சூர் அவர்கள் மற்றும் மாகாண கல்விப்பணிப்பாளர் மறைந்த தியாகராசா அவர்கள்… பாடசாலைக்கான காணியைத்தந்துவிய அகமதுலெவ்வை அவர்கள் அனைவரையும் நினைவு கொள்வோம் நண்பர்களே

(Slm Hanifa)

‘தமிழர் தரப்பு நிராகரிக்கிறது’

போர்க் குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டவர்களை, அரசியல் கைதிகளுடன் இணைத்து, பொதுமன்னிப்பு என்ற யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகளில் முன்வைப்பாராயின், அந்த யோசனையை தமிழர் தரப்பு, அடியோடு நிராகரிப்பதாகத் தெரிவித்த, தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ), போர்க் குற்ற விசாரணை நடைபெற்று, நீதி வழங்கப்பட வேண்டும் என்பதே தங்களுடையதும் கூட்டமைப்பினதும் கோரிக்கையாகும் எனவும் தெரிவித்துள்ளது.

(“‘தமிழர் தரப்பு நிராகரிக்கிறது’” தொடர்ந்து வாசிக்க…)

‘மலையக மக்கள் அடிமைகள் அல்லர்’

நாட்டின் பொருளாதாரத்துக்குப் பாரிய பங்களிப்பு ஆற்றி வரும் மலையக மக்கள் அடிமைகள் அல்லர். இலங்கையின் ஆட்சியாளர்கள், மலையக மக்களை அடிமைகளாகப் பயன்படுத்தியுள்ளனரென, நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன மலையக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காகக் கொண்டுவரப்பட்டுள்ள அபிவிருத்தி அதிகார சபை சட்டமூலத்துக்கு அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அரசாங்கம் நிதி ஒதுக்கிடும் பட்சத்திலேயே, அதனை முழுமையாகப் பயன்படுத்த முடியும் என்றார்.

(“‘மலையக மக்கள் அடிமைகள் அல்லர்’” தொடர்ந்து வாசிக்க…)

‘நினைவு நாளில் உரையாற்ற இடமில்லை’

தியாகி திலீபனின் நினைவு நாள் நிகழ்வில், எவரது உரையும் அங்கு இடம்பொறாதென, முன்னாள் போராளி மனோகர் தெரிவித்துள்ளார்.

தியாகி திலீபனின் 31ஆவது ஆண்டு நினைவு நாள் ஏற்பாடுகள் குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 15ஆம் திகதி, தனது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்த திலீபன், செப்டெம்பர் 26ஆம் திகதி, தன்னுயிரை இழந்திருந்தார். இதை முன்னிட்டு, புதன்கிழமை (26), நினைவு நிகழ்வுகள் நடத்தப்பட ஏற்பாடாகியுள்ளன. (“‘நினைவு நாளில் உரையாற்ற இடமில்லை’” தொடர்ந்து வாசிக்க…)

கடந்து போன…… தினம்

ஒரு வாரத்தினுள் பத்திரிகைகளில் வந்து கொண்டிருக்கும் அகால மரணச் செய்திகள்… தற்கொலைகள்… கொலைகள்… மாரடைப்பு மரணங்கள்… புற்றுநோய் செய்திகளைப் பார்க்கும் பொழுது அதற்;காக மனம் வேதனைப்படும் பொழுது ஒன்றே ஒன்று தான் மனத்திற்கு தோன்றியது.

(“கடந்து போன…… தினம்” தொடர்ந்து வாசிக்க…)

ராஜபக்‌ஷர்களின் வெற்றிக் கருவியான சமூக ஊடகங்கள்

(புருஜோத்தமன் தங்கமயில்)

ராஜபக்‌ஷக்களின் 2015 காலத்து வீழ்ச்சியிலும் தற்போதைய மீள் எழுச்சியிலும், சமூக ஊடகங்களின் பங்கு கணிசமானது. ஒட்டுமொத்தமாக நோக்கும் போது, நாட்டுக்குள் சமூக ஊடகங்களை அதிகளவு கையாள்பவர்கள், அதன் வழி ஊடாடுபவர்கள் என்று பார்த்தால், ராஜபக்‌ஷக்களே முன்னிலையில் இருக்கிறார்கள். மஹிந்த ராஜபக்‌ஷ, நாமல் ராஜபக்‌ஷ, கோட்டாபய ராஜபக்‌ஷ ஆகியோரின் பேஸ்புக் கணக்கு உள்ளிட்ட சமூக ஊடக விடயங்களைக் கையாள்வதற்கென்று, நிபுணர்கள் அடங்கிய பெரிய அணிகளே பணியில் அமர்த்தப்பட்டிருக்கின்றன.

(“ராஜபக்‌ஷர்களின் வெற்றிக் கருவியான சமூக ஊடகங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ்நாடு அரசியல்: பா.ஜ.க தலைவர்களால் பறிபோன கூட்டணிக் களம்

(எம். காசிநாதன்)

தமிழக அரசியலில் பாரதிய ஜனதாக் கட்சி, திக்குத் தெரியாத காட்டில் நிற்பது போல், அரசியல் செய்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, அதன் தேசிய செயலாளர், எச். ராஜாவின் பேச்சுகள் அக்கட்சிக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் இருக்கும், குறைந்தபட்ச செல்வாக்கையும் சூறையாடுவது போல் அமைந்திருக்கிறது.

(“தமிழ்நாடு அரசியல்: பா.ஜ.க தலைவர்களால் பறிபோன கூட்டணிக் களம்” தொடர்ந்து வாசிக்க…)

Rajani’s Questions The Tamil Elite Have Refused To Answer

(By RajanHoole)

Rains and early gloom harbinger the dying year. Fields are ploughed and sown in readiness for the earth’s renewal and the yield of her bounty. It was at such a time that RajaniThiranagama was killed by the LTTE twenty-nine years ago. Her questions and aphorisms often challenged our assumptions at their core. The following Appeal authored by her in October 1988 appeared in Laying Aside Illusions signed by 50 academics in the common room of the University of Jaffna:

(“Rajani’s Questions The Tamil Elite Have Refused To Answer” தொடர்ந்து வாசிக்க…)