என் பார்வையில்… வட சென்னை (திரைப்பட விமர்சனம்)

(சாகரன்)

வெற்றி மாறன் மீண்டும் தான் ஒரு சிறந்த நெறியாள்கையாளன் என்று நிரூபித்திருக்கும் திரைப்படம் வட சென்னை. நூற்றுக்கு மேற்பட்ட கதாபாத்திரங்கள்… பல நூறு சம்பவங்கள்.. வசனங்கள்… பல கிளைக் கதைகள் எதிலும் சோடை போக விடாமல் நெறியாள்கை செய்வது என்பது மிகவும் கடினம் அது ஒரு கூட்டுழைப்பால் மாத்திரம் சர்த்தியம். இதற்காக உழைத்த அவரது குழுவினருக்;கு வாழ்த்து தெரிவித்தே ஆக வேண்டும். (“என் பார்வையில்… வட சென்னை (திரைப்பட விமர்சனம்)” தொடர்ந்து வாசிக்க…)

புலிகளினால் பலவந்தமாக சேகரிக்கப்பட்டு நீதியினால் வாங்கப்பட்ட சொத்து விவரங்கள் தற்போது வெளியாகி வருகின்றன

அந்தந்த நாடுகளில் வாழ்கின்ற புத்திஜீவிகள் சமூக செயற்பாட்டாளர்கள் சட்ட நிறுவனங்கள பத்திரிக்கையாளர்கள் ஆகியோர் அந்த நாட்டு அரசு நிறுவனங்களுடன் இணைநது அந்த சொத்துக்களை மீளவும் பெற்று யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு சென்று அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் ஈடுபடும் எவருக்கும் முழுமையான ஒத்துழைப்பு வழங்க நாம் தயாராக உள்ளோம்.

(“புலிகளினால் பலவந்தமாக சேகரிக்கப்பட்டு நீதியினால் வாங்கப்பட்ட சொத்து விவரங்கள் தற்போது வெளியாகி வருகின்றன” தொடர்ந்து வாசிக்க…)

‘புதிய அரசமைப்பில் நாட்டைப் பிளவுபடுத்தும் அ​திகாரங்கள் இருக்கின்றன’ – மஹிந்த ராஜபக்‌ஷ

தற்போதைய சூழலில், புதிய அரசமைப்பொன்று தேவையில்லையெனத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ, அதனை நிறைவேற்ற, தாங்கள் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் நாட்டுக்கு இப்போது அது அவசியமில்லை என்றும், அதில் காணப்படும் அதிகாரங்கள், நாட்டைப் பிளவுபடுத்தும் வகையில் தான் இருக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார். (“‘புதிய அரசமைப்பில் நாட்டைப் பிளவுபடுத்தும் அ​திகாரங்கள் இருக்கின்றன’ – மஹிந்த ராஜபக்‌ஷ” தொடர்ந்து வாசிக்க…)

‘தமிழீழ கனவு வேண்டாம்’ – சுமந்திரன்

புதிய அரசமைப்பினூடாக, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் நிறைவேற்றப்படும். தனி நாடு என்று காலத்துக்குக் காலம் கதைகள் வரும். ஒருமித்த நாட்டில் தமிழ் மக்களுக்கான தீர்வு வேண்டுமென்று தான் நாம் கேட்கிறோம். அதை விட்டு, தமிழீழக் கனவோடு இருக்கக் கூடாது. நான் சொல்வது, வெளியே போகும் போது, கல்லெறி விழுந்தாலும் விழும். ஆனால், நான் உண்மையான நிலைப்பாட்டைச் சொல்லியாக வேண்டும்” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழுவின் உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். (“‘தமிழீழ கனவு வேண்டாம்’ – சுமந்திரன்” தொடர்ந்து வாசிக்க…)

பிரான்ஸினதும் ஜேர்மனியினதும் மாறுபட்ட வெளிவிவகாரக் கொள்கைகள்

(ஜனகன் முத்துக்குமார்)

ஐரோப்பிய நாடுகள் மத்தியில், குறிப்பாக பிரான்ஸ், ஜேர்மன் ஆகிய நாடுகளின் தலைவர்கள் மத்தியில், ஐரோப்பிய ஒன்றியத்தை வலிமைப்படுத்துதல் தொடர்பிலான ஒத்துழைப்புக்கு முக்கியத்துவம் பெருமளவில் இருந்தபோதிலும், இரு நாடுகளுக்கும் இடையில் தனிப்பட்ட ரீதியாக, ஐரோப்பிய பொருளாதார விடயங்களைப் பொறுத்தவரையில், அத்தகைய ஒத்துழைப்பு நடைமுறையில் இல்லை என்பது, ஐரோப்பியத் தலைவர்களைக் கவலைக்கு உட்படச் செய்துள்ளது. (“பிரான்ஸினதும் ஜேர்மனியினதும் மாறுபட்ட வெளிவிவகாரக் கொள்கைகள்” தொடர்ந்து வாசிக்க…)

பொங்கலுக்குள் பொதி…..?

(சாகரன்)
 
பொங்கலுக்குள் பொதி என்பது இலங்கைத் தமிழர்களுக்கு ஆண்டாண்டு காலமாக தமிழ் மிதவாதத் தலமைகளினால் வழங்கப்படும் வாக்குறுதி இம்முறையும் வழங்கப்பட்டுள்ளது. என்ன இம்முறை அது மாசி 4 இற்குள் என்று இன்றைய புதிய தலமையினால் தேதி தள்ளி வழங்கப்பட்டிருக்கின்றது. ‘தை பிறந்தால் வழி பிறக்கும்” எனபதை மரபு வழியில் நம்பிய தமிழர்கள் இம்முறையும் இதனை நம்பியே? இருக்கின்றனர். ஆனால் யதார்த்தங்கள் வேறுவிதமாக இருக்கின்றன.

வடகொரியப் பக்கம் சாய்ந்தது சீனா

ஐக்கிய அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான அணுவாயுதப் பேச்சுவார்த்தையில், வடகொரியாவுக்கான முக்கியமான ஆதரவை, சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் வழங்கியுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது, இரண்டு தரப்புகளும், மத்திய பகுதியில் வைத்துச் சந்திக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். (“வடகொரியப் பக்கம் சாய்ந்தது சீனா” தொடர்ந்து வாசிக்க…)

பேரம்பேசல்களிலிருந்து வெளியேறினார் ட்ரம்ப்

ஐக்கிய அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள அரசாங்க முடக்கம், 20ஆவது நாளாக நேற்றும் (10) தொடர்ந்தது. அத்தோடு, பேரம்பேசல்களில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், இந்த முடக்கம், ஐ.அமெரிக்காவில் ஏற்பட்ட மீக நீண்ட அரசாங்க முடக்கமாக இது மாறுமென எதிர்பார்க்கப்படுகிறது. (“பேரம்பேசல்களிலிருந்து வெளியேறினார் ட்ரம்ப்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் – முஸ்லிம் உறவு: பிட்டும் தேங்காய்ப்பூவும்

(மொஹமட் பாதுஷா)

பல்லினங்களும் வாழ்கின்ற ஓர் ஆட்புலத்தில், எவ்வாறு சகிப்புத்தன்மையுடனும் பொறுமையுடனும் பரஸ்பரம் புரிந்துணர்வுடனும் நடந்து கொள்வது என்ற பாடத்தை, இலங்கையில் இனவாதிகள் மட்டுமன்றி, சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களில் சிலரும், இன்னும் பட்டறிந்து கொள்ளவில்லையோ என்ற வலுவான சந்தேகத்தை, அண்மைக்கால சம்பவங்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. (“தமிழ் – முஸ்லிம் உறவு: பிட்டும் தேங்காய்ப்பூவும்” தொடர்ந்து வாசிக்க…)

ஆளுநர் நியமனம்; ‘புதியதோர் அத்தியாயம்’

இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் நம்பிக்கையூட்டும் புதியதோர் அத்தியாயம் இணைக்கப்பட்டுள்ளதாகவே, சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளமையை, ஐக்கிய சமாதான கூட்டமைப்புக் கருதுவதாக, அக்கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும், முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹசன் அலி தெரிவித்தார். (“ஆளுநர் நியமனம்; ‘புதியதோர் அத்தியாயம்’” தொடர்ந்து வாசிக்க…)