தி.மு.கவுக்கு எதிராக ரஜினியைக் களமிறக்க பா.ஜ.க வியூகம்

(எம். காசிநாதன்)
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடர், மான்ய கோரிக்கைகள் மீதான விவாதத்துக்காக ஆரம்பிக்கும் நேரத்தில், அ.தி.மு.கவுக்குள் பூகம்பம் உருவாகி இருக்கிறது. மத்தியில், பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில், கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில், பா.ஜ.க இந்தமுறை இல்லை. ஆனாலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி என்று நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்ற காரணத்தால், ‘அடையாள நிமித்தமாக’க் கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றுக்கும், ஓர் அமைச்சர் பதவியை, மத்திய அமைச்சரவையில் வழங்க பா.ஜ.க முன் வந்தது.

பிணங்களுடன் கிடந்து மீண்டேன்

1983 கறுப்பு ஜூலையை ஒத்த “1987 மார்ச் 30 இல் ” கந்தன் கருணை படுகொலை”

இரவுகள் பொதுவாக ஒரே மாதிரித்தான் இருளும் மௌனமும் துயிலும். ஆனால் அன்றைய இரவு 1987 மார்ச் 30ம் திகதிய யாழ்ப்பாணத்து இரவு அப்படி இருக்கவில்லை. அது ஒரு கோர இரவு அது படு கோரமாகத் தமக்கு அமையப் போகின்றது என்பதை உணராமல், நாளாந்தம் கடந்து போகும் சாதாரண இரவு போலக்கருதி மறுநாளைத் தரிசிக்கத் துயில்வதற்காகத் தமது இரவு உணவைப் புசித்து கொண்டிருந்தார்கள்… அவர்கள் புலிகள் இயக்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ்க் கைதிகள்.

அல்லாஹ் அக்பர் – வெட்கத்தைவிட்டு ரொம்ப வேதனைகளுடன் – 3

(யஹியா வாஸித் )

மொத்த ஸ்ரீலங்கா சோனவர்களினதும் டேர்ணிங் பாயிண்ட் இது.

1983 ஜூலை கலவரம் முடிந்த பின்னும், 2009 புலிகளை அடக்கி, ஒடுக்கி ஊமை களாக்கிய
போதும் சிறிலங்காவில் உள்ள மொத்த சிறு பான்மையினருக்கும், ஒரு செய்தி
ரொம்ப தெளிவாகவும், கூர்மையாகவும் சொல்லாமல் சொல்லப் பட்டது.

தோழர் இராஜனின் 34வது ஆண்டு நினைவில்;………..

தோழர் இராஜன் (இரவீந்திரன்) யாழ் மாவட்டத்தில் கோப்பாயை பிறப்பிடமாகக் கொண்டவர். 1980ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியில் உயர்கல்வியைக் கற்றுக்கொண்டிருந்த காலத்தில் பொதுவாழ்க்கையில் தன்னை அற்பணிப்புடன் ஈடுபடுத்திக் கொண்டவர். ஈழமாணவர் பொதுமன்றதின் (GUES) நிர்வாகக்குழு உறுப்பினராக செயற்பட்டவர். போராடுவதிற்காக கற்றுக்கொள்ளவும் கற்றுக்கொள்வதிற்காக போராடவும் மாணவர்களை அணிதிரட்டினார். அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதில் பிரதான செயற்பாட்டாளராக விளங்கியவர். 1980களில் ஈழமாணவர் பொதுமன்றதினால் முன்னெடுக்கப்பட்ட அனைத்துவகையான போராட்டங்கள் மற்றும் செயற்பாடுகளிலும் களச்செயற்பாட்டாளராக இயங்கியவர். 

மோடியின் முதல் பயணமும் இலக்கும்

(கே. சஞ்சயன்)
இந்தியப் பிரதமராக மீண்டும் பதவியேற்றுள்ள நரேந்திர மோடி, தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை வரும், ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கவுள்ளார். முத‌ல் பயணமாக, மாலைதீவுக்குச் சென்று விட்டு, மறுநாள் அவர், இலங்கைக்கு வரப் போகிறார்.

பெர்முடா முக்கோணம் பகுதியில்…..

பெர்முடா முக்கோணம் பகுதியில்
மர்மமான முறையில் –
விமானங்களும் கப்பல்களும்
காணாமல் போகின்றன என்று
உலகத்தோடு சேர்ந்து நாமும் நம்பிக்கொண்டிருக்கிறோம்.

அரசியல் காரணங்களுக்காக பதற்ற நிலை மேலும் தொடரலாம்

(எம்.எஸ்.எம். ஐயூப்)

கிழக்கு மாகாண ஆளுநராக இருந்த எம்.எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ்வும் மேல் மாகாண ஆளுநராக இருந்த அஸாத் சாலியும் கடந்த திங்கட்கிழமை (ஜூன் 3) பதவி விலகாதிருந்தால் என்ன நடந்திருக்கும்?

மருதானையில் எதிர்ப்பு பேரணி

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இணைந்து மருதானையில் எதிர்ப்பு பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர். மட்டக்களப்பில் அமைந்துள்ள ஷரியா பல்கலைக்கழகத்தை மூடுமாறு வலியுறுத்தியே இந்த எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாணவர் ஒன்றியத்தால் தெரிவிக்கப்பட்டது. குறித்த இந்த பேரணியில் 500 மாணவர்கள் வரை கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம் முஸ்லிம் கல்லூரி வீதியும் நாவலர் வீதியும் இணையும் புதுப்பள்ளிச் சந்தியில் முஸ்லிம்களின் வெள்ளிக்கிழமை ஆராதனையின் பின்னர் யாழ் முஸ்லீம் சமூகத்தினால் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டமானது, யாழ் முஸ்லிம் சமூகத்தினால் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், அவ்வமைப்பால் மேற்கொள்ளப்பட்ட ஏப்ரல் 21 தாக்குதலுக்கு கண்டனம் வெளியிட்டும், குறித்த தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் அதே சமயம் குறித்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட அனைவர் மீதும் அரசை சட்டத்தின் மூலம் தண்டணையை வழங்கக் கோரியுமே, முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்படடத்தில் ஈடுபடடவர்கள், நாட்டில் தற்போது உருவாகியுள்ள ஐ.எஸ் தீவிரவாதம் முற்றாக அழிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்..

மேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக ஏ.ஜே.எம் முஸம்மில் நியமனம்

மேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக ஏ.ஜே.எம் முஸம்மில் சற்று முன்னர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.