பிரபாகரன் இறந்த செய்தியை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல்

(George RC)
அமிர்தலிங்கம் கொல்லப்பட்டபோது, ரொறன்ரோவில் நடந்த அஞ்சலிக் கூட்டத்தில் புலிக் காடையர்கள் பின்னால் நின்று தமிழ்ப் பட வில்லன்கள் மாதிரி பார்வை பார்த்து சீன் போட்டதை நேரில் காண நேர்ந்தது. அவர்களுக்குப் பயந்து, ‘என் தலைவன் இறந்து விட்டான். அவனை நினைத்து அழும் உரிமையைத் தாருங்கள்’ என்று யாசித்து நின்ற கணம் பற்றி எழுதியிருக்கிறேன்… பிரபாகரன் இறந்த செய்தியை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் விக்கித்துப் போய் நின்ற புலிக் கூட்டம் பற்றி எழுதிய போது!

பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியா நோக்கி பயணம் மேற்கொள்ள நடவடிக்கை

பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவிற்கு பயணத்தை மேற்கொள்வதற்கு இந்திய தனியார் நிறுவனம் ஒன்று விருப்பம் தெரிவித்துள்ளது. குறித்த விமான சேவைகளை எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளது.

விடுதலைச்சிறுத்தைகள் எதிர்கொள்ளும்

(Chinniah Rajeshkumar)
விடுதலைச்சிறுத்தைகள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பில் SOAS பல்கலைக்கழக மண்டபத்தில் திருமாவளவன் பேசும் போது சாதிய மன நிலை எவ்வாறு சமூகத்தில் வேரூன்றி இருக்கின்றது என்பதற்கு உதாரணம் காட்டினார். கருணா நிதி அண்ணா கட்சி தொடங்கினால் அது அனைவருக்குமான கட்சி. எம் ஜி ஆர் தொடங்கினால் அனைவருக்குமான கட்சி. விஜய காந்த், கமலகாசன் தொடங்கினால் அனைவருக்குமான கட்சி. ரஜனி காந்த் தொடங்கினாலும் அனைவருக்குமான கட்சி. ஆனால் திருமாவளவன் தலைமையில் தொடங்கினால் அது ஒரு தலித்துகளை பிரதினிதுத்துவப்படுத்தும் கட்சி.

மூன்றாவது வேட்பாளர்

(என்.கே. அஷோக்பரன்)
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல்கள் எப்போதுமே இருதரப்புப் போட்டிகளாகவே அமைந்திருக்கின்றன. பல கட்சி முறைமை நடைமுறையிலிருக்கும் நாடாக இருந்தாலும், பிரதான கட்சிகளாக இரண்டு கட்சிகளே எந்தக் காலகட்டத்திலும் இருந்து வந்த போக்கைக் காணலாம். ஏனைய கட்சிகள் ஒன்றில் ஏதோவொரு பிரதான கட்சியோடு கூட்டணி வைத்திருக்கும் அல்லது, தனித்து எதிர்த்தரப்பிலிருக்கும் அரசியல் பாணியே இங்கு காணப்படுகிறது.

இணைந்து செயற்படுவதற்கான கூட்டமே நாளை

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில், நாளை (27) காலை 10 மணியளவில், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷவின் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவித்த, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் ஜீ. எல் பீரிஸ், இக் கலந்துரையாடலானது ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் அல்லவென்றும் தெரிவித்தார்.

பொது வேட்பாளரை களமிறக்க முயற்சி

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை சாராத வேட்பாளர் ஒருவரையே களமிறக்க முயற்சிகள் இடம்பெறுவதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வின்போது, கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

நெடுந்தீவை தீவை சுற்றி வரலாம்…

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள சோழர் வம்சம், போர்த்துகீச, ஒல்லாந்த, பிரித்தானியர் காலனித்துவ காலத்திலிருந்து சிறந்த வரலாற்றைக் கொண்ட ஒரு அற்புதமான தீவு இந்த நெடுந்தீவாகும்.

‘இராஜினாமா செய்யப்போவதில்லை’

சபாநாயகர் பதவியை தான், இராஜினாமா செய்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி பொய்யானது என, சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்வது தொடர்பில் கரு ஜயசூரிய இதுவரை தீர்மானம் எதையும் எடுக்கவில்லை என்றும் அந்த அலுவலகம் கூறியுள்ளது.