முதலீடுகளுக்கு திறக்கப்படுகிறது கொழும்பு துறைமுக நகரம்

கொழும்பு துறைமுக நகரத்தின் கதவுகள் முதலீட்டாளர்களுக்காக இன்று முதல் திறக்கப்படவுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் இன்று (07) இரவு நடைபெறவிருக்கும் விஷேட நிகழ்வொன்றில் இதற்கான பகிரங்க அ​ழைப்பு விடுக்கப்படுமெனவும் அறிய முடிகிறது. குறித்த நிகழ்ச்சியின் நிறைவில் வான வேடிக்கை நிகழ்வொன்றும் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேட்டோவின் 70 ஆண்டுகள்: குருதி தோய்ந்த வரலாறு

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
உலக வரலாற்றின் பாதையில், சில அமைப்புகள், குறித்த காலத்தின் தேவைகருதி உருவாக்கப்படுபவை. அவை, காலம் கடந்து நிலைக்கும் போது, அதன் தேவையும் காலப் பொருத்தமும் தொடர்ச்சியாகக் கேள்விக்குட்படும்.

எதிர்க் கட்சித் தலைவராக சஜித்

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவை முன்மொழிய கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

பெண் மருத்துவர் கொலை : 4 சந்தேக நபர்களும் சுட்டுக்கொலை

தெலுங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் பொலிஸாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். கடந்த 27ஆம் திகதி தெலங்கானாவில் கால்நடை பெண் மருத்துவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு எரித்துக்கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

சந்திரிகா அரசியலுக்கு ‘குட்பாய்’

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, முன்னாள் அமைச்சர் சரத் அமுனுகம ஆகியோர், அரசியலிலிருந்து ஓய்வுபெறத் தீர்மானித்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின் பின்னர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, பெரும் அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளார் என்று, அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“13 ஆவது திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி இந்தியாவில் கூறிய கருத்து நம்பிக்கையளிக்கிறது”

13 ஆவது திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி இந்தியாவில் தெரிவித்திருந்த கருத்துக்கள் நம்பிக்கையை தருவதாக உள்ளது என தமிழ் சோசலி ஜனநாயக கட்சியின் தலைவரும் இணைந்த வடக்குகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான வரதராஜ பெருமாள் தெரிவித்தார்.

வெனிசுலா குழந்தைகளின் மரணத்துக்கு யார் பொறுப்பு?

வெனிசுலாவின் ஆட்சி மூர்க்கர்களால் நடத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. எண்ணெய் வளமிக்க வெனிசுலாவைப் பட்டினியால் வாடும் தோல்வியடைந்த நாடாக அவர்கள் மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். டேனியலா செரேனோ தனது பெண் குழந்தை டைஷாவுக்காக அழுகிறார் – அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைக்கும் இதில் பொறுப்புள்ளதா என்று என்னால் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை.

தொண்டைமானாறு கடல்நீரேரி வான் கதவுகள் திறப்பு

குடாநாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக, தொண்டைமானாறு கடல்நீரேரி வான் கதவுகள் இன்று திறக்கப்பட்டன. அச்சுவேலி – இடைக்காட்டு பகுதியூடாக தொண்டைமானாறு வீதியில் வெள்ளம் பாயலாம் எனும் அபாயத்தால் குறித்த வான்கதவுகள் திறந்து வைக்கப்பட்டன. வான் கதவை யாழ். மாவட்ட நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் சர்வ ராஜா உள்ளிட்ட குழுவினர் திறந்து வைத்தனர். அத்துடன், தொண்டைமானாறு கடற்பகுதியில் வெள்ளம் பாய்ந்து ஓடுவதற்கான முனை பிரதேசம் தொண்டைமானாறு அக்கறை பிரதேச மக்களால் கால்வாயாக வெட்டி விடப்பட்டது.

’13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது’

எதிர்வரும் பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தால் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை இரத்துச்செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.