பூச்சாண்டியாகப் போகும் எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு

(எம்.எஸ்.எம்.ஐயூப்)

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமையிட்டு, எதிர்க் கட்சிகளிடையே பெரும் அதிர்வலையை உருவாக்கி உள்ளமை காணக்கூடியதாக இருக்கிறது. அரசாங்கத்துக்கு எதிராகக் கூட்டணி அமைக்க அவை முன்வந்துள்ளமை அதனையே காட்டுகிறது.