இலக்க தகடற்ற காரில் ஹெரோயின் கடத்தியவர் கைது

யாழ்ப்பாணத்தில் இலக்க தகடற்ற புதிய காரில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திச் சென்ற ஒருவர் திங்கட்கிழமை (27) இரவு கைது செய்யப்பட்டார். யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது 11 கிராம் 600 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் கைப்பற்றப்பட்டுள்ளது.