மண்சரிவில் சிக்கிய குடும்பம்: அறுவர் மரணம்: மீண்டவர்களின் சோகக்கதை

“நவம்பர் 26 ஆம் திகதி இரவு, எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பத்து பேர் சாப்பிட்டுவிட்டு படுக்கைக்குச் சென்றோம். நானும், என் பேரனும் பேத்தியும் ஒரு அறையில் இருந்தோம். என் மகனும் என் மகனின் கர்ப்பிணி மனைவியும் மற்றொரு அறையில் தூங்கினார்கள், மற்றவர்கள் விறைந்தையில்  தூங்கினார்கள் திடீரென்று இடி சத்தம் கேட்டு விழித்தேன். அதே நேரத்தில், நாங்கள் ஒரு மண்ணுக்குள் புதையுண்டிருந்தோம்” என்று மடுசீம பூட்டாவத்த பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் இருந்து தப்பிய திருமதி எம். சந்திர காந்தி கூறினார்.