பேரிடர் மரணங்கள் 627 ஆக பதிவு

நாடு முழுவதும் சமீபத்திய நாட்களில் ஏற்பட்ட மிக மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627 ஆக உயர்ந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் (DMC) தெரிவித்துள்ளது. மீட்பு மற்றும் தேடுதல் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மேலும் 190 பேர் காணாமல் போயுள்ளனர்.