பண்ணை கடலில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – பண்ணை கடலில் மூழ்கி யாழ் நகர் பகுதியைச் சேர்ந்த 18 மற்றும் 20 வயதுடைய இரு இளைஞர்கள் ஞாயிற்றுக்கிழமை (07) உயிரிழந்துள்ளனர். பண்ணை கடலில் நீந்த சென்ற நால்வர் நீரில் மூழ்கியுள்ளதை கண்ட அப்பகுதி மக்கள் நால்வரையும் மீட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் அதில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.