யாழ்ப்பாணத்தில் நான்கு கிலோகிராம் கஞ்சாவுடன் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சங்கிலியன் பூங்கா அருகில் செவ்வாய்க்கிழமை (30) அன்று அதிகாலை குறித்த நபர் கைது செய்யப்பட்டார். வரணி பகுதியைச் சேர்ந்த நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.