4 கோடி ரூபாய் குஷ்ஷுடன் மைத்துனர்கள் கைது

டி.கே.ஜி.கபில ரூபாய் நான்கு கோடியே பத்து இலட்சத்து எண்பதினாயிரம் (ரூ. 41,080,000) பெறுமதியான “குஷ்” (Kush) ரக போதைப்பொருள் தொகையை இலங்கைக்குள் கடத்தி வந்து, அதனை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்ற இரண்டு இலங்கை விமானப் பயணிகள், இன்று (05/30) அதிகாலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.