ஜனாதிபதியின் அழைப்பை: தமிழ் முற்போக்குக் கூட்டணி நிராகரித்து

புதிய அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த அழைப்பை நிராகரித்துள்ள தமிழ் முற்போக்குக் கூட்டணி, அரசமைப்புக்கு விரோதமான செயற்பாட்டுக்குத் தம்மால் ஆதரவளிக்கமுடியாது என்றும் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பில், கொழும்பு-07லுள்ள, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில், தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஜனாதிபதியை நேற்று (07) சந்தித்தது.

(“ஜனாதிபதியின் அழைப்பை: தமிழ் முற்போக்குக் கூட்டணி நிராகரித்து” தொடர்ந்து வாசிக்க…)

‘நாடாளுமன்றத்தைக் கூட்டினால் சபாநாயகருக்கு சிறைதண்டனை’

புதிய அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்து, கொழும்பில் நேற்று(05) நடத்தப்பட்ட “ஜன மஹிமய” கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் முன்வைத்தனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மீறி நாடாளுமன்றத்தை சபாநாயகர் கூட்டினால் அவருக்கு சிறைதண்டனை வழங்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

(“‘நாடாளுமன்றத்தைக் கூட்டினால் சபாநாயகருக்கு சிறைதண்டனை’” தொடர்ந்து வாசிக்க…)

விடுதலை செய்

அரசியல் கைதிகளை முடிந்தால் இன்றைக்கே விடுதலை செய்யட்டும். தாம் அவர்களுக்கு ஆதரவளிப்பது பற்றிப் பரிசீலிப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.  (“விடுதலை செய்” தொடர்ந்து வாசிக்க…)

யாழ்., முல்லைத்தீவு, கிளிநொச்சியில் 690 பேருக்கு இழப்பீட்டு கொடுப்பனவு

யுத்தம் மற்றும் வன்செயல்கள் காரணமாகப் பாதிப்புக்களையும், இழப்புக்களையும் சந்தித்த மக்களுக்கு இழப்பீட்டுக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கான பணிகளை துரிதப்படுத்துமாறு புனர்வாழ்வு அதிகார சபையின் அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்துள்ளார். மீள்குடியேற்ற, புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி, இந்துசமய அலுவல்கள் அமைச்சின் கீழியங்கும் புனர்வாழ்வு அதிகாரசபைக்கே அமைச்சர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார். (“யாழ்., முல்லைத்தீவு, கிளிநொச்சியில் 690 பேருக்கு இழப்பீட்டு கொடுப்பனவு” தொடர்ந்து வாசிக்க…)

7 உணவகங்களுக்கு சீல்

யாழ்ப்பாணத்தில், சுகாதாரச் சீர்கேட்டுடன் இயங்கிய ஏழு உணவகங்களுக்கு, 8 இலட்சத்து 26 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ள அதேவேளை, அவ்வுணவகங்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. (“7 உணவகங்களுக்கு சீல்” தொடர்ந்து வாசிக்க…)

பாகிஸ்தானில் கடும்போக்கு இஸ்லாமியவாதிகளின் போராட்டங்கள் தொடர்கின்றன

பாகிஸ்தானில், மதநிந்தனைக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, தண்டனை அனுபவித்து வந்த கிறிஸ்தவப் பெண்ணை விடுதலை செய்வதற்கு, அந்நாட்டு உச்சநீதிமன்றம் எடுத்த முடிவைத் தொடர்ந்து, இரண்டாவது நாளாக நேற்றும் (01), போராட்டங்கள் தொடர்ந்தன. கடும்போக்கு இஸ்லாமியவாதிகள், வீதிகளை மறித்து, போராட்டங்களில் ஈடுபட்டனர். (“பாகிஸ்தானில் கடும்போக்கு இஸ்லாமியவாதிகளின் போராட்டங்கள் தொடர்கின்றன” தொடர்ந்து வாசிக்க…)

வலிய வந்த எம்.பீயை விரட்டியடித்த மகிந்த!

(எஸ். ஹமீத்)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினரான வீ.சி. இஸ்மாயில் பிரதியமைச்சர் பதவி தனக்குத் தருவதாக இருந்தால் மகிந்த-மைத்திரி தரப்புக்கு ஆதரவு வழங்கத் தான் தயார் என்று கூறி, மகிந்த தரப்பினரைத் தொடர்பு கொண்டுள்ளார். இந்தத் தொடர்பை ஏற்படுத்துவதில் பெரும்பான்மையின அமைச்சர் ஒருவரும் மற்றுமொரு முஸ்லிம் இராஜாங்க அமைச்சரும் செயற்பட்டுள்ளனர்.

(“வலிய வந்த எம்.பீயை விரட்டியடித்த மகிந்த!” தொடர்ந்து வாசிக்க…)

‘வியாழேந்திரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்’

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், புதிய அரசாங்கத்தில் பிரதியமைச்சர் பதவியை ஏற்றுள்ளமைக்கு கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அவருக்கு எதிரான உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சித் தலைவர்களின் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம், நேற்று (02) பிற்பகல் நடைபெற்றது. இது தொடர்பில் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

(“‘வியாழேந்திரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்’” தொடர்ந்து வாசிக்க…)

மலையகத் தொழிலாளர்களின் கூலி உயர்வுக்கான போராட்டத்துக்கு எமது பூரண – SDPT

பத்திரிகைகளுக்காக வெளியிடப்படும் அறிக்கை – 29-10-2018

மலையகத் தொழிலாளர்களின் கூலி உயர்வுக்கான போராட்டத்துக்கு
எமது பூரண ஆதரவைத் தெரிவிக்கிறோம்
மலையக தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஆயிரம் ரூபா நாளாந்தக் கூலி கேட்டுப் போராடி வருகிறார்கள். மலையகத்தில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர்.  மேலும், கொழும்பு காலி முகத் திடலில் பல்லாயிரக்கணக்கில் அணி திரண்டு தமது கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்கள். தேயிலைத் தொழிலாளர் சங்கங்களுக்;கும் தேயிலைப் பெருந்தோட்ட கம்பனிகளுக்கும் இடையே தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு தொடர்பான ஒப்பந்தம் ஏற்படும் வரை அவர்களின் போராட்டம் மேலும் வீறு கொண்டதாகத் தொடரும் என்பதில் சந்தேகமில்லை.
தோட்டத் தொழிலாளர்களின் தொழிற்சங்கள் தத்தமது அரசியல் வேறுபாடுகளுக்கு ஏற்ப  தனியாகவும், வௌ;வேறாக கூட்டிணைந்தும் தொழிலாளர்களைத் திரட்டி வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். தேயிலைத் தோட்டத்தொழிலாளர்களின் கூலி உயர்வுப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதிலுமுள்ள பல்வேறு அரசியல் சமூக அமைப்புக்களும் தலைவர்களும் குரலெழுப்பி வருகின்றனர். இருந்தும் இந்த விடயத்தில் அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களின் கூலி உயர்வுக்கான முன்னெடுப்பு எதனையும் இதுவரை மேற்கொள்ளாதது கவலையைத் தருகின்றது. மத்திய அரசாங்கத்தின் ஆட்சி அதிகாரம் தொடர்பாக தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகள் தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கை மீது அரசாங்கத்தின் அக்கறையை காலதாமதாக்கி விடுமோ என்ற அச்சம் பரவலாக ஏற்பட்டுள்ளது.

(“மலையகத் தொழிலாளர்களின் கூலி உயர்வுக்கான போராட்டத்துக்கு எமது பூரண – SDPT” தொடர்ந்து வாசிக்க…)

அனைவரும் ஆதரவுக் குரல் எழுப்ப வேண்டும். கற்பதற்கும் கடைப்பிடிப்பதற்கும் இங்கு நிறைய உண்டு -VRP

இலங்கையில் செய்யப்பட்ட முதல் தரப் போராட்டம்

இன்று காலிமுகத்திடலில் இடம்பெற்ற போராட்டம் வெகு காலத்திற்குப் பிறகு இலங்கையின் தலை நகரில் நடந்த தூய எழுச்சியாகும்.

அரசியல் கட்சிகளின் பின்புலமில்லை, ஒழுங்கமைக்கப்பட்ட பிரச்சார முறைமையில்லை, வாகனங்களில் மக்கள் இறக்குமதி செய்யப்படவில்லை, மது வழங்கி சனக்கூட்டம் திரட்டப்படவில்லை, உணவுப் பொதிகள் கைகளிலும்- “சந்தோசம்” சட்டைப் பைகளிலும் திணிக்கப்படவில்லை, கவர்ச்சிகரமான தலைவர்களில்லை, மேடையில்லை, அலறும் ஓலிபெருக்கியில்லை, ஆட்டமில்லை, பாட்டு இல்லை, நட்சத்திரப் பட்டாளத்தின் மேக்கப் முகங்களில்லை. கருப்புச் சட்டை எனும் முற்போக்கு அடையாளமும் , கனத்த மனங்களும் தைரியமான நெஞ்சுகளும் மட்டுமே இருந்தன. (“அனைவரும் ஆதரவுக் குரல் எழுப்ப வேண்டும். கற்பதற்கும் கடைப்பிடிப்பதற்கும் இங்கு நிறைய உண்டு -VRP” தொடர்ந்து வாசிக்க…)