Iconic Physicist Stephen Hawking Dies At 76

Reactions Like Reblog on Tumblr Share Tweet Email
Stephen Hawking was diagnosed with a debilitating motor neuron disease when he was 21. He went on to become one of the world’s most prominent scientists.
Stephen Hawking died Wednesday after complications due to amyotrophic lateral sclerosis, a progressive neurodegenerative disease. He was 76.

(“Iconic Physicist Stephen Hawking Dies At 76” தொடர்ந்து வாசிக்க…)

மார்ச் 14 ம் நாள்: அறிவியலை பொதுவுடமையாக்கிய…..

(Saakaran)

அறிவியல் வளர்சியை பொதுவுடமையாக்கி எல்லோருக்கும் இலகுவில் கிடைக்கக் கூடிய மாதிரியாக செய்திருந்தால் இன்று உலகம் இன்னும் முன்னேற்றகரமான பாதையை நோக்கி சென்றிருக்கும். சிறப்பாக மருத்துவத்துறை இன்னும் சதாரண அடிமட்ட மக்களை சென்றடைந்து ஒரு பலமான ஆரோக்கியமான நிறைவான சமூக அமைப்பை நாம் உருவாக்கியிருக்க முடியும். மாறாக இவ் அறிவியல் தற்போது மேலும் மேலும் தனி உடமையாக்கப்பட்டு ஒரு மிகக் குறுகிய மக்களுக்கு மட்டும் முழுமையாக கிடைக்கும் வகையில் சந்தைப் பொருளாகி லாபம் ஒன்றே நோக்கான பண்டமாக மாறி இருக்கின்றது.

(“மார்ச் 14 ம் நாள்: அறிவியலை பொதுவுடமையாக்கிய…..” தொடர்ந்து வாசிக்க…)

VPN தொழில்நுட்பம்

(தங்கராஜா தவரூபன்)

கண்டியில் கடந்த வாரம் எழுந்த இன ரீதியிலான பிரச்சினைகளின் பின்னணியில், ஒரு கட்டத்தில் கண்டியில் 3G, 4G இணைய சேவையில் மட்டுப்படுத்தலை செய்தது மட்டுமல்லாது நாடுமுழுவதிலும் சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வைபர், வட்ஸ்அப் ஆகிய வலைப்பின்னல்களை அரசாங்கம் தடை செய்தது.

(“VPN தொழில்நுட்பம்” தொடர்ந்து வாசிக்க…)

இனவாதத் தீயை அணைக்க முன்வருவோம்!

கடந்த சில நாட்களாக அம்பாறையில் மற்றும் பண்டாரவளையில் ஏற்படவிருந்த சம்பவங்களின் சூடு தனிவதற்கு முன்பே தெல்தெனிய பற்றி எரிகின்றது. இதற்கு முன்பு கின்தோட்டையிலும், அதற்கும் முன்பு அளுத்கமவிலும் இனவாதத் தீப்பிளம்புகள் கிளர்ந்தெழுந்தன. இந்த மோதல்களின் சமீபத்திய சம்பவமானது பெற்றோல் நிலையமொன்றிற்கு அருகாமையில் நடந்த கருத்து மோதலின்போது ஒருவர் தாக்கப்பட்டு மரணமடைந்துதான். இறந்த இளைஞர் சிங்களவர் என்பதனாலும் தாக்கியவர்கள் முஸ்லிம்களாக இருப்பதாலும் பிரச்சினை இனவாதத் தீயாக பற்றி எரியத் தொடங்கியது. சில தசாப்தங்களாக இனவாதத் தீப்பொறி அடிக்கடி தோன்றுவது தற்செயலானதல்ல. அது பல தலைமுறைகளுக்கு பகைமையின் தீப்பொறியை எடுத்துச் செல்லக் கூடியதும் அதனால் மீண்டும் மீண்டும் அவலங்கள் நிர்மாணிக்கப்படக் கூடியதுமான நிலைமையின் வெளிப்பாடுதான். (“இனவாதத் தீயை அணைக்க முன்வருவோம்!” தொடர்ந்து வாசிக்க…)

சிலையை தகர்க்கலாம், சித்தாந்தத்தை அல்ல! – பிருந்தா காரத்

திரிபுராவில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பாஜக அரசாங்கம் லெனினின் சிலையைச் சரிசெய்து, அதனை அகற்றிய இடத்திலேயே திரும்பவும் வைக்க வேண்டும். இடதுசாரி ஆதரவாளர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

(“சிலையை தகர்க்கலாம், சித்தாந்தத்தை அல்ல! – பிருந்தா காரத்” தொடர்ந்து வாசிக்க…)

அவர்கள் சேற்றில் கால்வைத்தால் தான் சோற்றில் கை வைக்க முடியும்.

அவர்கள் தானே (Thane) பகுதிக்குள் நுழைந்தவுடன்
இப்பெருநகரம் அதிர்ச்சியில் உறைந்துப்போனது.
அவர்கள் கால்களில் செருப்புகள் இல்லை.
அவர்கள் கைகளில் செங்கொடிகள் பறக்கின்றன.
சிபிஎம் விவசாய சங்கங்கள் அவர்களை வழிநடத்துகின்றன.

(“அவர்கள் சேற்றில் கால்வைத்தால் தான் சோற்றில் கை வைக்க முடியும்.” தொடர்ந்து வாசிக்க…)

இன ஜக்கியத்திற்கான முன்னுதாரணமான செயற்பாடு

குரு­ணாகல் – புத்­தளம் பிர­தான வீதியில் ஆன­ம­டுவ நகரில் அமைந்­துள்ள முஸ்லிம் ஹோட்டல் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் மேற்கொண்டதில் ஹோட்டல் முற்றாக சேதமடைந்த நிலையில் பெரும்பான்மையின சமூகத்தினர் சுமார் 200 பேர் இணைந்து குறித்த ஹோட்டலை 12 மணி நேரத்திற்குள் மீள் நிர்மாணம் செய்து பாதிக்கப்பட் தரப்பினரிடம் ஒப்படைத்த சம்பவம் இலங்கையர் என்ற ரீதியில் அனைவரையும் பெருமையடைய வைத்துள்ளது.

(“இன ஜக்கியத்திற்கான முன்னுதாரணமான செயற்பாடு” தொடர்ந்து வாசிக்க…)

மும்பை சிவந்தது ! விவசாயிகளின் செங்கடல் பேரணி !
in News, சி.பி.ஐ – சி.பி.எம், விவசாயிகள் by வினவு, March 12, 2018
திரிபுராவில் “கம்யூனிசம்” தோற்கடிக்கப்பட்டு விட்டதாக வலதுசாரி அறிஞர் பெருமக்கள் இறுமாந்திருந்த நேரத்தில் அவர்களின் தலையில் இடியாய் இறங்கியுள்ளது மகாராஷ்டிர விவசாயிகள் போர்க்கோலம் பூண்டு நடத்தும் இந்த “செங்கடல்” பேரணி.

(தொடர்ந்து வாசிக்க…)

மனோவின் கூற்று முஸ்லிம் சமூகத்தின் உள்ளக விவாதத்துக்கான தலைப்பு

‘நாங்கள் சட்டக் கல்லூரியில் படித்த காலத்தில் எங்களோடு படித்த முஸ்லிம் பெண்கள் சாதாரணமாக சல்வாரும் முக்காடும் அணிந்துதான் படித்தார்கள். இப்படிக் கறுப்பால் மூடிக்கொண்டு, முழுமையாக மறைத்துக் கொண்டு யாருமே இருக்கவில்லை. இப்போது ஏன் திடீரென்று இப்படி மாறி விட்டார்கள் என்ற அச்சமும், மத்திய கிழக்குக் கலாச்சாரம் இங்கு ஏன் இறக்குமதி செய்யப்பட வேண்டும் என்ற சந்தேகமும் ஏற்படுவது நியாயம்தானே?’

(“மனோவின் கூற்று முஸ்லிம் சமூகத்தின் உள்ளக விவாதத்துக்கான தலைப்பு” தொடர்ந்து வாசிக்க…)

சக்தி கதற கதற கற்பழித்த அந்த சோகக்காட்சியை பார்த்து……

(ப. தெய்வீகன்)

எயார்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் அடுத்த சாகுபடி ஆரம்பமாகிவிட்டது. அடுத்த வருடமளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி தொடங்கிவிடும். நாங்களும் எத்தனை லட்சம் கொடுத்தாவது கொள்முதல் செய்வதற்கு தயாராகிவிடுவோம். ஒவ்வொரு தடவையும் தொலைக்காட்சி நிர்வாகம் ஒரு போட்டியாளரை வெற்றிபெற வைப்பது என்று போட்டி ஆரம்பத்திலேயே தீர்மானித்துவிடுவார்கள். அதைச்சுற்றித்தான் அனைத்து பஜனை நிகழ்வுகளும் நடைபெறும். இவ்வாறு அவர்களால் முன்கூட்டியயே முதல் பரிசு கொடுப்பதாக முடிவெடுக்கப்பட்டவர்களைவிட அந்த போட்டியில் கலந்துகொண்ட ஏனையவர்கள் திரையிசை களத்தில் பிற்காலத்தில் தூள் கிளப்பிக்கொண்டிருப்பதிலேயே தொலைக்காட்சிக்கு தங்களது சீத்துவம் விளங்கியிருக்கவேண்டும். ஆனால், அவர்களோ விடுவதாக இல்லை.

(“சக்தி கதற கதற கற்பழித்த அந்த சோகக்காட்சியை பார்த்து……” தொடர்ந்து வாசிக்க…)