கடவுச்சீட்டை தயாரிப்பதற்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் மற்றும் இரண்டு புகைப்படக் கலைஞர்களை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி, வௌ்ளிக்கிழமை (06) உத்தரவிட்டார்.
ஒவ்வொரு சந்தேக நபருக்கும் தலா 1 மில்லியன் ரூபாய் இரண்டு தனிப்பட்ட பிணைகளை விதித்த பிரதான நீதவான், சந்தேக நபர்களின் வெளிநாட்டு பயணத்தையும் தடை செய்தார்.
புகைப்படக் கலைஞர்களான சந்தேக நபர்கள் இருவரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் 13 ஆம் திகதி வாக்குமூலம் அளிக்க உத்தரவிடப்பட்டது.