யாழ்ப்பாணம் பொது நூலகம்: டிஜிட்டல் மயமாக்கல் செயல் திட்டம் விரைவில்

வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.

நூலக நிறுவனம் இதுவரை முன்னெடுத்துள்ள செயல்பாடுகள் மற்றும் எதிர்கொண்டுள்ள சவால்கள் தொடர்பில் அதில் பேசப்பட்டன. அத்துடன், டிஜிட்டல் மயமாக்கல் செயல்திட்டத்தை இணைந்து செயல்படுத்துவதன் ஊடாக கிடைக்கும் நன்மைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

இது தொடர்பில் யாழ். மாநகர சபையின் ஆலோசனை குழு, மாநகர சபையின் மக்கள் பிரதிநிதிகளிடம் எதிர்காலத்தில் கலந்துரையாடி தொடர் நடவடிக்கையை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.