பயங்கரவாதத் தடைச்சட்டம்:நீக்கம் பற்றிய பேச்சு உள் நோக்கமற்றதா?

(லக்ஸ்மன்)

தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் ஆரம்பிக்கப்பட்டமை முதல் நடைபெற்று வருகின்ற அனைத்து விதமான முயற்சிகளும் வீணானவைகளாகவே போய்க் கொண்டிருக்கின்றன.ஆனால், போராட்டத்தை ஆரம்பித்த தமிழ் மக்களையும் போராட்ட குணம் கொண்டவர்களையும் அடக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் இப்போதும் நீக்கப்படவில்லை.