மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் வீரதீர மீட்பு

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில், ஐக்கிய நாடுகளின் அமைதிப்படைத் திட்டத்தின் (MINUSCA) கீழ் கடமையாற்றும் இலங்கை விமானப்படைப் பிரிவு, கடந்த ஜூன் 30, 2026 அன்று, மிகவும் அபாயகரமான சூழலில் ஒரு மீட்பு நடவடிக்கையை (CASEVAC) வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இலங்கை விமானப்படை வீரர்களின் இணையற்ற தொழில்முறைத் திறனையும், துணிச்சலையும் இந்தச் செயல் உலகிற்கு மீண்டும் ஒருமுறை பறைசாற்றியுள்ளது.

அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படாது

‘டிட்வா’ (Cyclone Ditwah) சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்தத்தைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த அவசரகாலச் சட்டம், இம்மாதத்துடன் நிறைவுக்கு வரவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இந்திய அரசின் 10,000 வீட்டுத் திட்டம்: இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அறிவிப்பு

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மலையகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் 10,000 வீடுகளைக் கொண்ட வீட்டுத் திட்டத்தின் முதற்கட்டப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக, இந்திய உதவி உயர்ஸ்தானிகர் வி. எஸ். சரண்யா தெரிவித்துள்ளார்.

11 வயது சிறுவன் ஓட்டிவந்த வாகனம் மோதி 8 பிக்குகள் பலி

தாய்லாந்தின் முக்தாஹான் (Mukdahan) மாகாணத்தில், யாத்திரை மேற்கொண்டிருந்த பிக்குகள் குழுவின் மீது 11 வயது சிறுவன் ஓட்டிவந்த பிக்கப் வாகனம் மோதியதில், 8 பிக்குகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.