இதையும் கேளுங்கள்

ராகுல்காந்தியை பிரதமராக்க பாகிஸ்தான் விரும்புகிறது.. – மோடி

அழையா விருந்தாளியாக… திடீர்னு பாகிஸ்தான் போயி… பாகிஸ்தான் பிரதமரை கட்டிபுடிச்சு… கல்யாணத்தில் ஓசி பிரியாணி தின்னுட்டு… ஊருக்கு ஓடி வந்ததும்… மோடி சென்ற இந்திய விமான படை விமானத்துக்கு அவன் போட்டான் பாருங்க அபராதம் 2.86 லட்சம் ரூபாய்…. அதை இந்திய மக்களாகிய நாம் கட்டினோம்.

உலகின் வேறு எந்த நாட்டின் பிரதமரும் செய்யாத ஒரு மோசமான பாதுகாப்பு விதிமீறல் குற்றத்தை செய்த ஒரே பிரதமர் மோடி மட்டுமே. அதிகாரப்பூர்வ அரசாங்க பயணத்தை முடித்துவிட்டு…

ஆப்கானிஸ்தானில் இருந்து நேராய் டில்லி வர இருந்த இந்திய விமானப்படை விமானத்தை, இந்திய அரசின் தரப்பில் இருந்து எவ்வித பாதுகாப்பு முன் ஏற்பாடும் இன்றி, இந்திய வெளியுறவுத்துறை அரசு அதிகாரிகளுக்கோ இந்திய விமானப்படை தலைமைக்கோ கூட முறைப்படி தெரியப்படுத்தாமல்… சிம்பிளாக ஒரு ட்வீட்டை போட்டுவிட்டு… பாகிஸ்தான் நோக்கி விமானத்தை திருப்பி, லாகூரில் விமானத்தை தரை இறக்கி, நவாஸ் ஷரீஃப் வீட்டுக்கு சென்று… அவரை கட்டிப்பிடிச்சு கொஞ்சி குலாவி போட்டோவுக்கு போஸ் கொடுத்து… அவரின் பேத்தி கல்யாணத்தில் கலந்துகொண்டு, கல்யாண பிரியாணி தின்றுவிட்டு டில்லி வந்து… இந்தியாவை…. பாகிஸ்தானுக்கு அபராதம் கட்ட வைத்த ஒரே இந்திய பிரதமர்… மோடி மட்டுமே..!

இதை… அன்றைக்கு…. தேசப்பாதுகாப்பில் அக்கறை இல்லாத மோடியின் அபத்தமான செயல் என்று அன்றைக்கே காங்கிரஸ் கடுமையாக விமர்சித்து இருந்தது. இப்படிப்பட்ட மோடி, இன்று ராகுல் காந்தி பிரதமர் ஆவதை பாகிஸ்தான் விரும்புவதாக கொஞ்சமும் வெட்கமே இன்றி… கற்பனையில் அவதூறாக பேசுவது வன்மம்… அசிங்கம்… மட்டுமின்றி… அருகதையற்றவரின் அர்த்தமற்ற உளறல்..!