2025 நவம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவுகள் காரணமாக பல குடியிருப்புகள், வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகள் பெரும் சேதமடைந்துள்ளன. இதையடுத்து,அவற்றால் பாதிக்கப்பட்ட வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்காக 2025 டிசம்பர் மாதத்திற்குரிய மின்சாரம் மற்றும் நீர் கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடியை வழங்குமாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் , பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.