‘உக்ரேனில் போரை நிறுத்துவதற்கான தமது நிலை மாறாது’ – புட்டின்

உக்ரேனில் போரை முடிவுக்கு கொண்டு வர கடந்தாண்டு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் விதித்த நிபந்தனைகள் மாறவில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது. முக்கிய உக்ரேனியப் பிராந்தியங்களிலிருந்து உக்ரேனியப் படைகள் முழுமையாக வெளியேறல், நேட்டோவில் உக்ரேன் சேருவதற்கான முன்னெடுப்புக்களை கைவிடுதலே அந்நிபந்தனைகளாகும். உக்ரேனின் 19 சதவீதமான நிலப்பகுதிகளை ரஷ்யா கட்டுப்படுத்துகிறது. நிபந்தைகளின்படி மேலதிகமாக 21,000 சதுர கிலோ மீற்றர்களை உக்ரேன் தாரை வார்க்க வேண்டும்.