காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு

மன்னார் தீவு பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும்,தற்போது மன்னார்-மதவாச்சி பிரதான வீதியூடாக  கொண்டு வரப்பட்டு கொண்டு இருக்கும் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பொருட்களை மன்னார் நகருக்குள் கொண்டு வருவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து மன்னார் மக்கள் திங்கட்கிழமை (4) அன்று காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஒன்று கூடினர்.