உலக சந்தையில் கரிம சீனிக்கு அதிக தேவை இருப்பதாகவும், இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் சிவப்பு சீனியில் கரிம சதவீதம் அதிகமாக இருப்பதாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கேள்விக்கு பதிலளித்த அவர், சீனித் தொழிற்சாலைகளின் வருவாயை உயர்த்துவதற்கான ஒரு வழி சிவப்பு சீனியை ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கை என்று கூறினார்.