சுரேஷ் இன் எழுக தமிழும் பிரபாகரனின் பொங்கு தமிழும்

ஆகா…திருவாய் மலர்த்தருளியிருக்கிறார் சுரேஷ் அவர்கள். அதாவது 2006 தமது தலைவர் பிரபாகரன் அவர்கள் எடுத்த பொங்கு தமிழை இன்று தாம் அதாவது மக்கள் பேரவை எழுக தமிழாக எடுத்திருப்பதாக தனது தலைவர் யார் என்பதை மீண்டும் திருவாய் மலர்த்திருக்கிறார். அது சரி டக்கிளஸ் அவர்களுடைய அணியினரும் இப்பேரணிக்கு விளம்பரங்கள் கொடுத்திருந்தார்கள் ஆனால் இங்கே சுரேஷ் அவர்கள் டக்கிலஸையும் சாடுகிறார். எழுக தமிழை உரிமை கோருவதில் பிரச்சனை போல. கடந்த தேர்தலில் மக்களால் நிராகரிக்க பட்ட சுரேஷ் போன்றவர்களுக்கு இது போன்ற பேரணி கையில் கிடைத்த துரும்புதான். தனது கட்சியின் தலைவர் பத்மநாபா மற்றும் இவரின் முக்கிய முன்னணி தோழர்கள் சங்கரி, கிருபா, சுபத்திரன், கேதீஸ் போன்றவர்களோடு நூற்று கணக்கான தனது கட்சி தோழர்களாய் கொன்றவரை தனது தலைவர் என்று புகழுரைக்கிறார் என்றால் இது எங்கேயோ இடிக்கிது. பத்மநாபாவின் கொலையாளியும், சுபத்திரன் கொலையின் சூத்திரதாரியும் தான் என்பதை நிறுவி நிற்கின்றார்(காணொளி…..)

(Paul)