புதுக்குடியிருப்பில் ’சௌபாக்கிய உற்பத்தி கிராமம்’

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில், வேணாவில், கைவேலி ஆகிய கிராமங்களை இணைத்து, சௌபாக்கிய உற்பத்தி கிராமத்துக்கான ஆரம்ப பணிகள், இன்று (05) முன்னெடுக்கப்பட்டன. இதற்கமைய, தோல்பொருள்கள், பற்றிக் உற்பத்திகள், ஆடை உற்பத்திகளை மேற்கொள்வதற்காக பொதுகட்டடம் அமைப்பதற்கான அடிக்கல்லை, புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந்த் நாட்டிவைத்தார்.