வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக ‘பேராறு’ குளத்தின் வான் கதவு ஒன்று புதன்கிழமை (26) திறக்கப்பட்டுள்ளது.எனவே குறித்த வான் நீரானது மன்னார் மாவட்டத்தின் பறங்கி ஆறு ஊடாக பெருக்கெடுக்க வாய்ப்புள்ளது என மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.