காலங்காலமாகத் தொடரும் மீனவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல், நாளுக்கு நாள் அதன் தீவிரம் அதிகரித்துச் செல்வதாக ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் கவலை வெளியிட்டுள்ளார். கடந்த மே முதலாம் திகதி ‘ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணி’ ஏற்பாடு செய்திருந்த தொழிலாளர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.