உலகத் தொழிலாளர் தினத்தை (மே தினம்) முன்னிட்டு, உக்குவளை வாசிப்போர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான விசேட நிகழ்வுகள் அண்மையில் நடைபெற்றன. தலகொட்டுவ எனும் இடத்தில் கடந்த முதலாம் திகதி நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதேசத்தைச் சேர்ந்த மாணவச் சிறுவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இதன்போது மாணவர்களின் கலைத்திறன்களை வெளிப்படுத்தும் வகையில் ‘திறமையின் களம்’ ஒலிப்பதிவு நிகழ்ச்சியும், சூழலைப் பாதுகாக்கும் நோக்கிலான மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றன.