2026 உ/த பரீட்சை : ஏப்ரல் 24 வரை விண்ணப்பிக்க அவகாசம்

2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர (A/L) பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் செவ்வாய்க்கிழமை (24) முதல் ஏப்ரல் 24, வரை இணையதளம் ஊடாக மாத்திரமே தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.