உதிர்த்த ஞாயிறுக் குண்டுவெடிப்பும் பிள்ளையானும்(பாகம்-4)


இந்தக் காலப்பகுதில் ஐப்பசி 15,2021 தேதி சுரேஸ் சாலை என்னைத் தொலைபேசியில் அழைத்தார். காலை 10 மணிக்கு போனேன். அன்றைக்கு என்னுடைய கைப்பேசியைப் பாது காப்பாளர் வாங்கி விட்டே உள்ளே அனுமதித்தாங்கள். சுரேஸ் சாலை தனது அறைக்குள் வைத்துத் தனது லாப் ரொப்பை ஓன் பண்ணினார். முதலாவதாக பாராளமன்றத்தில் ஹரிம் பெர்னாண்டோ பேசிய வீடியோவை என்னைப் பர்க்கும்படி சொன்னார்.

ஈஸ்ரர் தாக்குதல் ஜனாதிபதி கோதாபாயாவை அதிகாரத்துக்குக் கொண்டுவர நடந்த தாக்குதல். அது சரியாக ஆராயப்படவில்லை. அதற்;கு இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முக்கிய பங்களிப்பு உண்டு. சஹிரான் இராணுவப் புலனாய்வுப் பிரிவோடு தொடர்பில் இருந்தார்.


அதற்குப் பிறகு கத்தோலிக்க ஆயர்மாரின் சூம் மீற்றிங்கின் வீடியோ. ஆயர் சிறில்காமினி, மல்கம் ரன்ஜித் இருவரும் இந்தக் குண்டுத்தாக்குதல் கோதபாயாவை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்காக செய்த சதித் தாக்குதல் என்றார்கள். இதில் இப்ப பாதுகாப்பு புலனாய்வு சேவை இயக்குனர் சுரேஸ் சாலை சம்பந்தப் பட்டிருக்கிறார். இதைப்பூரணமாக ஆராய வேண்டும் என்று சொல்கின்றனர்.


3 வது வீடியோவில் நளின் பண்டார பாரளமன்ற உறுப்பினர் சொல்கிறார்:’சகரான் குழுவுக்கும் இராணுவப்புலனாய்வுப் பிரிவுக்கும் தொடர்பு இருக்கு. ஆரம்பத்தில் இராணுவப் புலனாய்வுப் பிரிவு பாதுகாப்பும் காசும் கொடுத்தார்கள். இந்தத்தாக்குதல் கோதபாயாவை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கான சதி முயற்சி. லப்ரொப்பை சுpரேஸ் சாலை ஓவ் பண்ணிப் போட்hர்.


இது பற்றி உனக்கு ஏதும் தெரியுமோ என்று என்னிடம் சுரேஸ் சாலை கேட்டார். கரின்; பெர்னான்டோ பேசியது பேப்பரில் வந்தது. மற்றயவை எனக்குத் தெரியாது என்று சொன்னேன்.


நான் சஹிரானைச் சந்தித்தது எனக்கும் உனக்கும் பிள்ளையானுக்கும் தான் தெரியும். பிள்ளையானுக்கு எல்லாம் தெரியாது. நீதான் சொல்லியிருக்க வேண்டும்.


அதுக்குப்பிறகு என்னைக் கடுமையாக விசாரித்தார். நான் அதுபற்றி யாரோடும் கதைக்கவில்லை. என்னுடைய கைத்தொலைபேசியை வாங்கினார். நான் பாஸ் சொல்லைச் சொன்னேன். என்னுடைய கைத்தொலைபேசியைப் பூரணமாகச் சோதனை செய்தார்.


2007 இல் இருந்து அவரை எனக்குத்தெரியும். அவர் மிகக் கடுமையாக இருந்தது இம்முறைதான். 10 மணிக்குப் போனேன். 1 மணிக்குத்தான் வெளியே விட்டார்.


இவர் என்னைக் கடுமையாகச் சந்தேகிக்கிறார் என்று எனக்கு விளங்கி விட்டது. வெளியே வந்து பிள்ளையர்னுக்குத் தொலைபேசி எடுத்தேன். சுரேஸ் சாலை என்னைக் கூப்பிட்டுக் கடுமையாக விசாரித்தார். சந்தேகப் படுகிறார். எனக்குப் பயமாகக் கிடக்கு.


பிள்ளையான் கேட்டார் நீ யாரோடையும் இதைப்பற்றிக் கதைச்சனியோ வென்று.


இரவுக்கு கொழும்புக்கு வாறன் என்றார். வழமையாகக் கொழும்புக்கு வந்தால் எந்த மீற்றிங்குக்கும் நான்தான் அவரோடு போவது.
ஒக்டோபர் 16 ஆம் தேதி என்னைத் தொலைபேசியில் அழைத்து காலையில் ஒரு மீற்றிங்கும் போடத் தேவையில்லை. நீங்கள் 2 மணிக்கு வந்தால்;போதும் என்று சொன்னார்.


பிள்ளையான் கதைக்கும் பொழுது 8 மணி இருக்கும். 9.30 க்கு பிள்ளையான்ரை சாரதி அமலன் எனக்குத் தொலைபேசி எடுத்தார்.

அண்ணன் மீற்றிங்குக்கு வெளிக்கிட்டிட்டார். நீங்கள் வரவில்லையா என்று கேட்டார். அப்பொழுது நான் சொன்னேன், அண்ணன் மீற்றிங் ஒன்றும் இல்லை என்று சொன்னவரே. அப்பொழுது போனைக் கட்பண்ணி விட்டார்.
ஒரே குழப்பம். பிள்ளையானைத் தொலைபேசியில் மீற்றிங் இருக்கோ என்று கேட்க அப்படி ஒன்றும் இல்லை என்றார்.


2 மணிக்குப் பிள்ளையானைப்பார்க்க அவர் வீட்டுக்குப் போனேன். பிள்ளையானைச் சந்திப்பதற்கு முன், பிள்ளையான்ரை சாரதியிடம் கேட்டேன:; „அண்ணன் காலையில் எங்கே போனவர்’ என்று கேட்க அவர் சுரேஸ் சாலையட்டைப் போனவர் என்று சொன்னார்.


10 மணிக்கப் போய் 1 மணிக்குத்தான் வந்தவர். பிள்ளையான் வீட்டுக்குள்போய் கதைக்கும் பொழுது சுரேஸ் சாலையிடம் போனதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. சுரேஸ்சாலை உன்னைப் பற்றி சந்தேகப் படுகிறார். பிள்ளையான் இதைப்பற்றி ஆரோடையும் கதைச்சியோ என்று கேட்டார்.


சுரேஸ்; சாலை செர்னார்: பாதுகாப்பு கவுன்சிலில் ஜனாதபதி இதைப்பற்றி கேட்டவர். தகவல் எப்படி வெளியானது என்று விசாரிச்சுச் சொல்லவேண்டும் என்று கட்டளை இட்டுள்ளார். பிள்ளையானும் அப்படித்தான் கதைக்கிறார். யோசெப் பரராஜசிங்கம் வழக்கில் சீ.ஐ.டி 6 மாதத்துக்குப் பிறகுதான் இராணுவப் புலனாய்வு உத்தியோகத்தரைக்கைது செய்தது. அந்த ஆமிக் காறனின் தகவலை ஆர் சீ.ஐ.டி க்கு சொன்னது. நீதான் சொல்லியிருக்க வேண்டும் என்று சுரேஸ் சந்தேகப்படுகிறார்.


சுரேஸ் சாலை கேட்டிருக்கக் கூடும். அதே நிலைப்பாடுதான் பிள்ளையானதும். ஆமியையும் நீதான் காட்டிக் கொடுத்தது. அந்த இராணுவம் கைது செய்யப்பட்டபின்புதான் பிள்ளையான்ரை வழக்கு கடுமையானது.


பின்பு வீட்டுக்கு வந்து யோசிச்சன். நான் கடுமையான ஆபத்தில் சிக்கி இருக்கிறன். இந்த தாக்குதல் நடாத்தப்பட்ட பிறகு நிறைய அப்பாவி இளைஞர்கள் பிடிபட்டாங்கள். செய்தவர்கள் ஆரோ. செய்விச்சவர் ஆரோ. இதனால் பலன் அடந்தவர் யாரோ. ஸ்கொட்லண்ட்யாட் ஆய்வின் படி இப்படியான செய்கையால் ஆர் பயன் அடைவர்கள் என்று யோசிக்க வேண்டும். இதில் ஆளும் கோதபாயகும்பலைத் தவிர ஒருத்தருக்கும் ஒரு லாபமும் இல்லை. இதனால் பெரிய இழப்பை அடைந்தது தற்காலிகமாக என்றாலும் முஸ்லீம் சமூகம். மற்றயது கத்தோலிக்கச் சமூகம்.

உல்லாசத்துறை முற்றாக இழந்ததால் நாட்டுக்கு 5 பில்லியன் டொலர்கள் நட்டம். எனக்கு ஓர் உண்மையான வைராக்கியம் வந்தது. ஆயிரம் குற்றவாளி தப்பலாம். ஒரு நிரபராதி பாதிக்கப் படக் கூடாது. இவர்கள் என்னை விசாரிக்க முன்னரே என்மனதில் அந்த எண்ணம் உதித்திருந்தது.

சந்தர்ப்பத்தின் கைதியாகி இவர்களிடமிருந்து மீழ வழிதெரியாமல் இருந்த எனக்கு இது உண்மையில் ஒரு பாக்கியமாகும். அன்றேல் இவர்களோடு சேர்ந்து மேலும் பெரிய பிழைகளை விட்டு மீளா நரகத்துக்கு ஆளாக வேண்டி வந்திருக்கும்.


ஈஸ்டர் குண்டு வெடித்தது, வெடிப்பித்ததும் யாரென்று சொல்லவேண்டு மென்று நான் முடிவெடித்துப் பல காலம்.

நாட்டில் இருந்தால் உயிருக்கு ஆபத்து என்பதும் நான் எடுத்த முடிவு சரி என்பதை இப்பொழுது வரும் பயமுறத்தல்களும் என்னுடைய முழுக் குடும்பமும் பாதிக்கப் படுவதும் ஒவ்வொரு நாளும் நிரூபின்கின்றது.
19.10.2021 இந்தியாவுக்குப் பேனேன்.


29.10.2021 என்மனைவியும் பிள்ளைகளும் இந்தியாவுக்கு வந்தர்கள். அவர்களை எனது சக்திக்கு அப்பால் பிரியவேண்டிய துர்ப்பாக்கியம் வந்து விட்தே என்றதே என்ற வேதனை. என்னுடைய தந்தையாரும் எனக்கு ஏழு வயதாகி இருக்கும்பொழுது முழுக் குடும்பபாரத்தையையும் ஏற்கும்படி விட்டார். தவிர்க்க முடியாததைத் தைலைநிமிர்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றொரு ஆங்கிலப் பழமொழியுண்டு.


நான் மனைவிக்குச் சொன்னேன். ரி.எம்.வி.பிக்கு வெளியாலை போறன். எனக்கும் பிள்ளையானுக்கும் பிரச்சனையாய் விட்டது. „நெல்லின் உமி சிறிது நீங்கிப் பழமைபோல் புல்லினும் திண்மை நிலைபோம’;. என்று தமிழ்மொழியில் ஒரு பழமொழியுண்டு. நெல்லிலே உமியின் ஒரு சிறு பகுதி ஒடிந்தாலும் அதை எப்படிக் கவனமாக ஒட்டினாலும் அது மீண்டும் முளையாது. நம்பிக்கையோடு இருந்த நட்புக்கும் தலைவிதி இப்படித்தான்.


„தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.’-குறள்-510.
ஒருவனை ஆராயாமல் நண்பனாக்குவதும் ஆராய்ந்து தெளிந்த நண்பன் மேல் ஐயப்படுதலும் ஆகிய இவை நீங்காதத் துன்பத்தைக் கொடுக்கும். இதைப் பிள்ளையானுக்கென்றே வள்ளுவர் எழுதியுள்ளார்.


நான் உடனடியாகவே இந்தியாவுக்குப் போய்விட்டேன்.
இந்தியாவில் இறங்கிய எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. மனச் சோர்வினால் பாதிக்கப் பட்டேன். அரசியல் வாழ்வு என்பது முன்னுக்கு உயர்த்தி பின்னுக்குத் தாழ்த்திவிடும். இது மீண்டும் மீண்டும் நிறுவப்பட்ட சமூகவியல் உண்மை. இடையில் இறந்த அரசியல்வாதிகள் அவமானத்திலிருந்து தப்பினார்.


எனது நண்பரான வைத்தியகலாநிதி எம்.இசட்.சப்றாட் ஐ தொலைபேசியில் அழைத்தேன். அவர் அப்பொழுது பாகிஸ்தானில் வசித்து வந்தார். அவர் ஒரு யு.என்.எச்.ஆர் புகலிடக் கோரிக்கையாளர். சுவிட்சர்லாந்து அரசாங்கம் மற்றும் யு.என்.எச்.ஆர் உடன் உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு அவர் எனக்கு அறிவுறுத்தினார். நான் இந்தியாவில் இருந்தபோது, புதுதில்லியில் உள்ள சுவிஸ் தூதரகத்தை தொடர்பு கொண்டேன். கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்தைத் தொடர்பு கொண்டேன். ஜெனிவாவில் சுவிஸ் வெளியுறவு அமைச்சகத்தைத் தொடர்பு கொண்டேன்.

சுவிஸ் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச அகதிகள் கவுன்சில் ஆகியவற்றை மின்னஞ்சல் மூலமாகவும் பதிவு அஞ்சல் மூலமாவும் 02.12.2022 தொடர்பு கொண்டேன். இந்தியாவில் சர்வதேச பாதுகாப்பிற்கு பொறுப்பான அதிகாரம் யு.என்.எச்.ஆர் என்பதை நான் கண்டுபிடித்தேன். நான் யு.என்எச்.ஆர் சென்னைக்கு மின்னஞ்சல் செய்தேன், பதில் இல்லை. சர்வதேச பாதுகாப்பு கேட்டு 06.12.2021 அன்று யு.என்.எச்.ஆர் சென்னைக்கு சென்றேன். அவர்கள் தங்கள் உயர் அதிகாரிகளுடன்; விவாதித்து, எனது புகலிட விண்ணப்பத்தைத் தொடர முடியாது என்று எனக்குப் பதிலளித்தனர்.

சர்வதேச பாதுகாப்பை எவ்வாறு பெறுவது என்பது குறித்து யு.என்எச்.ஆர் இந்தியா எனக்கு ஒரு வழியைக் காட்டவில்லை. நான் மீண்டும் இருளால் சூழப்பட்டேன். 1951 ஜெனிவா அகதிகள் மாநாட்டில் இந்திய அரசாங்கம் ஒரு உறுப்பினர் அல்ல. இந்திய அதிகாரிகள் ஏற்கனவே என்னை தேடி வருகின்றனர். இலங்கை அதிகாரிகளுக்கு இந்தியாவில் நெருங்கிய தொடர்புகள் உள்ளன. அதனால் ஒவ்வொரு நொடியும் என் உயிருக்கு ஆபத்து உள்ளது என உணர்ந்தேன்.

இந்தியாவிலுள்ள அகதிகள் ஆணையம் (யு.என்எச்.ஆர்) சர்வதேச பாதுகாப்புக்கான என்; கோரிக்கையை தொடராததால் நான் அகதிகள் முகாம்களுக்கு செல்லவில்லை. சுவிஸ் செஞ்சிலுவைச் சங்கம் மூன்றாம் நாட்டிலிருந்து மனிதாபிமான விசா வழங்கப்படாது என்று எனக்குப் பதிலளித்தது. சுவிற்சலாந்துக்கு விசா வேண்டுமானால் சொந்த நாட்டிலிருந்துதான் விண்ணப்பிக்க வேண்டும்.

சுவிட்சர்லாந்திற்கு புகலிடம் கோரி விண்ணப்பிக்க வேண்டும் என்றால் சுவிட்சர்லாந்தில் விண்ணப்பிக்க வேண்டும். நீங்கள் சுவிட்சர்லாந்திற்குச் சென்ற பின்னரே நீங்கள் அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பிக்க முடியும். சுவிட்சர்லாந்துக்கு எப்படி போக முடியும். சுவிட்சர்லாந்து ஐரோப்பிய நாடுகளால் சூழப்பட்ட ஒரு தீவு. சுவிட்சர்லாந்திற்கு நீர் எல்லைகள் இல்லை. நீங்கள் சுவிட்சர்லாந்திற்கு விமானம் மூலம் மாத்திரம் செல்வதற்கு ஒரேயொரு வழி உண்டு.


நான் எனது வழமையான பயண முகவர் மூலமாக ஐரோப்பாவுக்கு ஒரு விமான ரிக்கட் வாங்கி உடனயாக ஐரோப்பாவுக்கு வந்துவிட்டேன்.

2019 ஏபபில் 21 உதிர்த்த ஞாயிறுக் குண்டுகள் எல்லாம் காலை 8:15 மணிக்கு வெடித்தன: ஆனால் இந்திய தூதரக ஹோட்டேலான தாஜ் சமுத்ரா ஹொட்டேலுக்கான குண்டு 4 மணிததியாலங்கள் பிந்தியே வெடித்தது. அந்தத் தற்கொலைக் குண்டுதாரி அவுஸ்திரேலியா மற்றும் பிரித்தானியாவில் கல்வி பயின்ற அப்துல் லத்தீப் மொஹமட் ஜமீல், என்ற ஓர் இஸ்லாம் இளைஞர். கொழும்பின் கடற்பரப்பில் உள்ள ஆடம்பர ஹோட்டலான தாஜ் சமுத்ராவில் காலை உணவு பஃபே அவரது இலக்காக இருந்தது. அதற்கு பதிலாக, நகரின் மிருகக்காட்சிசாலையில் உள்ள ஒரு மலிவான மோட்டலில் அவர் தனது வெடிக்கும் சாதனத்தை வெடிக்கச் செய்தார். ஒருங்கிணைக்கப்பட்ட குண்டுவெடிப்புகள் ஆடம்பர ஹோட்டல்கள் மற்றும் தேவாலயங்களைத் தாக்கியதால், கொழும்பு பூட்டப்பட்டது. ஆனால் ஜமீலின் வெடிகுண்டு வெடிக்கத் தவறியது.


8.10 மணியளவில் அவருக்கு ஒரு தொலைபேசி வந்தது. அவர் பதட்டத்துடன்வெளியே வந்தார். அவரைப் பக்கத்திலுள்ள மசூதியில் தொழுதுபோட்டு வரச் சொன்னார் ஓர் இராணுவ உளவாளி. இது சீ.சீ.ரி.வி கமறாவில் பதிவாகியிருந்தது. இதுவே இந்தக் குண்டுவெடிப்பின் முடிச்சை அவிழ்த்தது. தாஜ் சமுத்ரா ஹொட்டேலுக்கான குண்டு வெடிக்காதினால் இராணுவ உளவுத்தறையின் சில பிரிவுகள் ஜமாலின் தாய் வீட்டிற்குச் சென்று எங்கே உன் மகன் போய்விட்டார் என்று மூன்றுதடவைகளுக்கு மேல் அடிக்கடி இராணுவ வாகனங்களில் சென்று விசாரித்துப் போனதை அயலவர்கள் கவனித்துள்ளார்கள். இதற்கிடையில் குண்டுவெடித்த செய்திகள் பரவவே ஜாமாலின் தாய்வீட்டிற்கு அருகாமையிலிருந்த மக்கள் இந்த இராணுவ வாகனத்தினர் வந்து போன செய்தியைக் கத்தோலிக்கக் கார்டினல் றன்ஜித்துக்கும் மற்றும் ஆயர்களுக்கும் சொல்லியிருந்தார்கள்.

கார்டினல்; றன்ஜித்தும், கத்தோலிக்க ஆயர்களும்; தங்களைத் தாங்களே எச்சரித்துக் கொண்டனர். இதிலே இராணுவ உளவுத்துறையின் சம்பந்தம் உள்ளது என்பதைச், சிதறிய வெடிகுண்டுகளின் அதிநவீனப் பாகங்களிலிருந்து புரிந்து கொண்டார்கள்.


டெஹிவளைக் குண்டு றிமோட் கொன்றோலால் வெடிக்கப் பண்ணியது என்பதையும் ஊர்ஜிதம் செய்தார்கள். வெடிகுண்டு வெடித்தது டைம்பாம்ப் மூலம் அல்ல என்பதைக் கண்டுபிடித்தார்கள்.


ஜமாலின் குண்டு டைம்பாம் என்றால் 8:15 வெடித்திருக்க வேண்டும். ஆயர்கள் எல்லாக் குண்டுகளும் றிமோட் கொன்றாலால் வெடிக்கப்பட்டது என்பதைச் சந்தேகம் அறத் தெரிந்து கொண்டார்கள். ஆகவே 8 இடங்களிலும் குண்டுகளை றிமோட் கொன்றோலர் மூலம் வெடிக்கச் செய்வதற்கு 8 இராணுவ உளவு உத்யோகஸ்தர் பங்குபற்றியிருக்க வேண்டும்.


ஏன் தாஜ் சமுத்ரா ஹொட்டேல் குண்டுவெடிப்பதை மாத்திரம் கடைசி நேரத்தில் மாற்றிக் கொண்டார்கள். ஏனெனில் தாஜ் சமுத்ரா ஹொட்டேலில் இந்தியத் தூதரகத்தில் தொழில் புரியும் அதிகாரிகளும் இருப்பதால் ஏதும் பிரதி விளைவுகள் இந்திய அரசினால் ஏற்படும் என்பதால் மாற்றிக் கொண்டார்கள். இந்திய உளவுத் துறையினர் ஏற்கனவே இப்படியொரு பயங்கரவாதக் குண்டுகள் வெடிக்கப் போகிறது என்பதை இலங்கை அரசாங்கத்துக்குச் சொல்லி எச்சரித்திருந்தார்கள். சதி செய்பவர்கள் நூற்றுக்கு நூறு சதவீதம் சரியாகச் செய்வதில்லை.

இந்த இந்திய உளவுத்துறையின் எச்சரிக்கையை ஏன் இலங்கை அரசாங்கம் கரிசனையாக எடுக்கவில்லை என்பதே இன்றுவரைக்குமான சர்ச்சையாக இருக்கின்றது. உதிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பில் இந்திய உளவுத்துறை செயற்பட்டதற்கான தரவுகளும் சான்றுகளும்; பின்னாளில் வெளிவந்தன.
இந்த அறியாமை நிறைந்த முஸ்லீம் வெறி ஜெஹார்டிஸ்ட்டுகளால் இந்த அதிநவீன- மிகப்; பெருத்த சேதம் விளைவிக்கக்கூடிய இப்படியான வெடிகுண்டுகளை உருவாக்கியிருக்க முடியாது என்று ஆயர்கள் ஒரு முடிவுக்கு வந்தார்கள்.


இது பற்றிய விழிப்புணர்வு பெற்ற ஹார்டினல் றன்ஜித் நாட்டிற்கு அமைதியாக இருக்கும்படியும் இனக் கலவரத்தைத் தூண்டவேண்டாம் என்றும் மீண்டும் மீண்டும் வேண்டிக் கொண்டார். நாடும் அமைதியாகவே இருந்தது. அந்நாட்களில் ஹார்டினல் றன்ஜித் கத்தோலிக்கர்களுக்கு மாத்திரமல்ல இலங்கைத் திருநாட்டினர் அனைவருக்குமான தலைவர் என்று சில ஊடகங்கள் மெச்சின.


25 ஏப்பிறில், 2019 இல் ஹோதபாய றாயபக்ஸ்ச அமெரிக்காவிலிருந்து வந்தார். தான் ஜனாதிபதியாகத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். தான் ஜனாதிபதியாக வந்து இஸ்லாமியப் பயங்கரவாதத்திலிருந்து இலங்கை நாட்டைப் பர்துகாப்பேன் என்று சூழுரைக்கு மட்டும் முஸ்லீம் விரோத இனக்கலவரம் வரவிடாமல் பாதுகாக்கக் கத்தோலிக்கத் திருச்சபையால் முடிந்தது.


அப்பாவி முஸ்லீங்களுக்கு எதிரான சிங்கள வெறியர்களின் நரபலிவேட்டை தங்கு தடையின்றிக் கங்கு கரையின்றித் தொடங்கியது. குருநாகல், கேகாலை, புத்தளம் நீர்கொழும்பு குருசேத்திரமாகியது. மது ஆறுகள் பெருக்கெடுத்தன. முஸ்லீம் மசூதிகளின் அருகிலுள்ள கிணறுகளிலிருந்து மீன்வெட்டும் கத்திகளும் சில தட்டுமுடடுச் சாமான்களும் கண்டெடுக்கப்பட்டன. இவைகள் ஆணுகுண்டிலும் பார்க்கப் பெரிய போர் ஆயுதங்கள் என்று சிங்கள பௌத்த ஊடகங்கள் அலறின.

அரசாங்கமும் ஆயுதப் படைகளும் முஸ்லீம் நரபலிவேட்டைக் கோரத் தாண்டவம் ஆடின. எல்லா முஸ்லீம் கிராமங்களும் நகரங்களும் பௌத்த சிங்கள கிராமங்களால் சூளப் பட்ட தீவுகள். தெய்வம்; பகைத்தால் உய்வுண்டோ?


முறை செய்து கோலோச்சும் மன்னன்
இறையென்று வைக்கப் படும்.


தெய்வமே கொலைகளுக்குத் தலைமை கொடுத்தது. இலங்கை அரசாட்சி தலைமைத்துவ நெருக்கடியால் தத்தளித்தது. இன்றுவரை தத்துளிக்கிறது. வீடுகொழுத்திற ராசாவுக்கு மந்திரிகள் எல்லாம் நெருப்பெடுத்துக் கொடுத்தார்கள்.


கத்தோலிக்கத் திருச்சபை இன்றுவரைக்கும் உதிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்கு நீதிகிடைக்கவில்லை என்பதில் உறுதியாக உள்ளனர். இந்தக் குண்டுவெடிப்பில் இறந்த இரண்டு பிள்ளைகளுக்குத் தாயான ஒரு பெண்மணியின் கணவர் இரவில் தனது மனைவி புதைக்கப் பட்ட இடுகாட்டு இடத்தில் போய் அடிக்கடி அதிலே கிடந்த படுக்கும் அளவக்கு இந்தக் குண்டுவெடிப்பு இலங்கை சமூகத்தில் அதிர்ச்சிகரமான உளவியல் விளைவை ஏற்படுத்தியுள்ளது. உதிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு சிலுவை யுத்தத்துக்கு அடுத்ததாக வரலாற்றில் கத்தோலிக்க உலகத்துக்கு எதிரான போர் என்றே இன்றுவரை கத்தோலிக்க உலகம் பிரகடனப் படுத்தி வருகிறது. உதிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு முழுக் கிறீஸ்தவ உலகத்திலிருந்தும் முழு இஸ்லாமிய உலகத்திலிருந்தும் இலங்கையை இன்றுவரை தனிமைப் படுத்தியுள்ளது.


„எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய் „- குறள்-429.
வரப்போவதை முன்பே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்களுக்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றுமில்லை. அரசியலிலே நேற்றுச் சரியாக இருப்பது மட்டும் போதுமானதல்ல. இன்றும் நாளையும் சரியானதாக இருக்க வேண்டும். ஒரு நாட்டின் எதிர்காலத்தை அதுவே நிர்ணயிக்கிறது.


நாடு முஸ்லீம் விரோதத்தால் நிரம்பி வழிந்தது. மேலேயிருந்து கடவுள் பார்த்தக் கொண்டிருந்தார். ஜீவகாருண்ணியத்தை உலகுக்குப் போதித்த புத்த மதத்தை அரசமதமாகக் கொண்டதென்று பெருமை பேசிம் நாட்டில் மானிடக் கொலைகள் நித்திய நிரந்தர வரமாகியது. பெய்யும் ஒவ்வொரு மழைத்துளிகளிலும் பௌத்த சிங்களக் கொலைஞர்களின் முகங்களே சிறுபான்மை இன மக்களுக்குத் தெரிந்தன.


„பார்க்கும் இடங்களெல்லாம் நந்தலாலா
பௌத்த முகம் தோன்றுதையா நந்தலா
சோற்றில் விரலை வைத்தால் நந்தலாலா
தீச்சுடர்கள் சுட்டதையா நந்தலாலா.’


16 நவம்பர் 2019 அன்று இலங்கையில் ஜனாதிபதி; தேர்தல் நடைபெற்றது. இலங்கையில் ஜனாதிபதி, பிரதமர் அல்லது எதிர்க்கட்சித் தலைவர் யாரும் ஜனாதிபதிக்கு போட்டியிடாத முதல் ஜனாதிபதித் தேர்தல் இதுவாகும். இந்த தேர்தலில் சஜித் பிரேமதாசவை தோற்கடித்து கோதபாய ராஜபக்ச 69 லட்சம் வாக்குகள் பெற்று அமேக பெரும்பான்மையால் வெற்றி பெற்றார். அவர் தனது சத்தியப் பிரமாணத்தையும் சிம்மாசனப் பிரசங்கத்தையும் அனுராதபுரத்திலுள்ள துட்டகைமுனு விகாரையான
றூவான்வலை விகாரையில் நிறைவேற்றினர்.


கொழும்பு மாநகரமும் பாரளமன்றமும் தமது பெருமைகளையும் பெறுமதிகளையும் இழந்து சோகத்தில் ஆழ்ந்தன. நகரம் நாட்டை ஆதிக்கம் செய்ததை இழந்து தனது அநாகரீக முகத்தைக் காட்டியது. பின்னடைவு திரம்ப மீட்கப்பட்டது. அது அரசாட்சியில் பௌத்தமல்லாதார்க்குப் பங்கில்லை என்று பிரகடனப் படுத்தியது.


இலங்கையில் இனவாதமில்லாமல் எந்தப் பொதுத் தேர்தலிலும் வெல்ல முடியாது என்பது இலங்கை அரசியலுக்கான அழித்தெழுத முடியாத தாரக மந்திரம்.


இலங்கையில் வரலாற்று ரீதியாக ஒவ்வொரு அரசாங்க எதிர்ப்புப் போராட்டமும் ஒரு சிறிய இனவாத தூண்டுதலால் வெறுமனே முடிவுக்குக் கொண்டுவர முடியும். சுதந்திரம் அடைந்ததில் இருந்து இது ஒரு நீண்ட வரலாறு. 2019 தேர்தல் நாட்களில் சிங்கள மக்கள் சொன்னார்கள், நாங்கள் பட்டினியாற் செத்தாலும் பரவாயில்லை, முஸ்லீம் பயங்கரவாதம் பூண்டோடு அழிக்கப்பட வேண்டும். கோட்டாபயாவுக்குக் கிடைத்த 69 லட்சம் வாக்குகளின் சாராம்சம் இதுதான்.


„அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று.’
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.
மக்களை வாழ விடவேண்டும்.
அப்பொழுதுதான் ஆளவிடுவர்கள்.
முற்றும்.