பாராளுமன்றத் தேர்தலில் மாற்றத்தால் தோல்வியை தழுவியவர்கள் பலரும் இந்த உள்ளுர் ஆட்சித் தேர்தல் சில இடங்களை பெற்றாக வேண்டும் அன்றேல் ஏதும் அற்றவர்கள் என்று ஆகிவிடுவோம் என்ற நிலையில் தேர்தலைச் சந்தித்தனர்.
இது தமிழ் பிரதேசங்களில் மட்டும் அல்ல சிங்களப் பிரதேசங்களுக்கும் பொருந்தி இருக்கும் அரசியல் கட்சிகளின் மனநிலையில் இருந்து உருவான உணர்வலைதான். இது இயல்பானதுதான்.
ஆனால் பாராளுமன்றத் தேர்தலில் நாம் ஏன் தோற்றும் என்பதற்கான சுய மீள் ஆய்வு அடிப்படையில் பாராளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் இந்த தேர்தலை தோற்றவர்கள் தரப்பு அணுகியதா என்றால் இல்லை என்பதே பதில்.
அதற்கான கால அவகாசம் இல்லாத போது அது எப்படிச் சாத்தியம். கூடவே கட்சிகள் தேர்தலில் முன்வைத்த கோசங்களும் அதனைப் பிரதி பலிக்கவில்லை.
ஆட்சியில் இருக்கும் தேசிய மக்கள் சக்தியிற்கு தமது ஆதரவுத் தளத்தை தாம் இழக்வில்லை என்பதை நிரூபிக்க வேண்டி கட்டாயம்.
அதற்கு மிகக் குறுகிய காலத்தில் முக்கிய பிரச்சனைகளையும் தீர்த்து விட்டு தேர்தலில் கலந்து கொள்வதற்கான அவகாசம் அவர்களுக்கும் இல்லை.
அப்படித் தேர்தலை தள்ளப் போடும் அரசியலையும் அவரகள் ஆட்சியில் இருக்கும் போது செய்ய விரும்பவில்லை.
ஆனால் இதுவரை ஆட்சியில் நடைபெற்றவை நம்பிக்கை தரும் பல அம்சங்களை கொண்டிருந்தன. சில விமர்சனங்கள் குறைபாடுகள் இருந்தன. ஆட்சியில் அதுவம் பல புதுமுகங்களுடனான ஆட்சியல் இது சற்று எதிர்பார்ப்பிற்கு அதிகமாக இருந்திருக்கலாம்..?
இதையெல்லாம் சீர் தூக்கிப் பார்க்கும் மனப்பக்குவம் வருவதற்கு மக்கள் இன்னும் அதிகளவு அரசியல் மயப்பட்டாக வேண்டும்.
இப்பவும் உசுப்பேத்தும் உணர்ச்சி அரசியலே பல இடங்கள் முதன்மை பெறுகின்றது.
அதனால் அதிக கவனத்தைப் பெறும் ‘தமிழர் உரிமை’ ‘சிங்களவர்களின் மேலாதிக்கம்’ ‘ஆக்கிரமிப்பு’ என்ற இரு தரப்பு விடயங்களையும் அரசால் அவை சரியான கோரிக்ரிக்கையா இல்லையா என்பதற்கு அப்பால் செய்து முடிப்பதற்கும் கால அவகாசங்கள் தேவை என்பது உணரப்படவில்லை.
அது ஆளும் அரசின் பாராளுமன்றத் தேர்தல் வாக்குறுதிகள் இதுவரை நிறை வேற்றவில்லை என்ற அரசின் மீதான விரும்பம் இன்மைகளை ஏற்படுத்தி இருக்க வாய்ப்புகள் உண்டு. இது அதிகம் வடக்கு கிழக்காக பரவியும் உள்ளது.
‘காணியை குறிப்பிட்ட காலத்திற்குள் உரிமை கோர வேண்டும் அல்லாவிட்டால்…’ என்பதை மறைத்து ‘காணியைப் புடுங்கி விடுவார்கள்’ ஆக்கரமித்துவிடுவார்கள் சிங்கள் அரசாங்கம்’ என்று இறுதி 10 நாளில் தமிழர் தரப்பில் முன் வைத்த பிரசசாரமும் எடுபட்டுள்ளதோ என்ற பார்வையை கடந்து போக முடியாது.
சிங்களக் கட்சிக்கு தமிழ் பகுதியில் இடம் இல்லை என்பதுவும் இளங்குமரனும், சந்திரசேகரனும் சிங்களவர்களாக பார்க்கப்படும் புலிகள் காலத்து கோசமாக இன்னமும் ஒரு பகுதி மக்களால் ஆய்வுரையாளர்களால் கருத்துரைப்பவர்களால் நம்பப்பட வைக்கப்பட்டது. இது தேசிய மக்கள் கட்சியிற்கு தமிழ் பிரதேசங்களில் உள்ளுர் ஆட்சி சபையில் அறுதிப் பெரும்பான்மை கிடைப்பதற்கான வாய்ப்பை தடுத்து நிறுத்தி உள்ளது.
இதுவரை காலமும் இந் ஆட்சிக்கு முன்னர் அதிகாரத்தில் இருந்து நிர்வாகப் பிரினரில் ஒரு பகுதியனரின் முறைகேடான நிர்வாகம், நிதிக் கையாடல், இலஞ்ச இலாவண்ணம் என்றாக செயற்பட்ட உத்தியோகஸ்தர்கள் என்றான பகுதி எமது சமூகத்தில் உள்ளது. கடந்த சில மாதங்களாக தேசிய மக்கள் கட்சியின் ஆட்சியில் இது போன்றவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டுவரும் விசாரணைகள் கைதுகள் இந்தப் பகுதியினரை தற்போதைய ஆட்சியின் தொடர்ச்சியை நிச்சயம் விரும்ப மாட்டார்கள்.
இவர்கள் அதிகம் இந்த புதிய அரசை வசைபாடுபவர்கள். இவர்களும் தாமும் தம்மைச் சுற்றி இருப்பவர்களையும் தேசிய மக்கள் சக்தியிற்கு எதிராக வாக்களை உருவாக்கியும் இருப்பர். அது மணல் கொள்ளை என்றாக வடக்கு கிழக்காகவும் நிர்வாத்துறை, தவறனைச் சலுகை என்றாக இந்த வாக்குகளும் இம்முறை தேசியம் பெரும் தேசியம் குறும் தேசியம் பேசியவர்கள் பக்கம் நிச்சயம் சென்றிருக்கும் இதன் தாக்கங்களும் இந்த தேர்தலில் பிரதி பலித்துள்ளது.
இதில் ‘போலித் தேசியம்’ இப்போது புரிந்து கொள்ளப்படாமல் ‘மக்களுக்கான தேசியம்’ அடிபட்டுத்தான் போய்விட்டது. அதனை முன்னிறுத்தக் கூடிய முற்போக்கு தமிழ் கட்சிகள் இந்த தேர்தலில் யாரும் இல்லை.
இந்தக் கூற்றை சற்று ஆழமாக பார்த்தால் புரியும். இது அவர்கள் பற்றிய விமர்சனமும் கூட.
தமிழ் பிரதேசங்களில் அறுதிப் பெரும்பான்மை இன்றி ‘தேசியம்’ பேசுபவர்கள் இணைந்து (கவனிக்க ஐக்கியப்பட்டு அல்ல) ஆட்சியை அமைக்க இனி அதிகம் இழுபடுவர்.
இனி வரும் நாட்களின் காட்சிகள் இவைதான்.
அப்படி ஆட்சி அமைத்தாலும் கடந்த கால வரலாறு போல் நிதி ஒதுக்கீடு(பஜட்) என்று வரும் காலங்களில் அதனை நிறைவேற்ற முடியாது பெரும்பான்மை இல்லையால் ஆட்சி மாற்றம் அடிக்கடி நடைபெறும்.
இந்த களேபாரத்தில் உள்ளுர் ஆட்சி சபைகளால் மக்களுக்கு ஆற்ற வேண்டி பணிகள் அதிகம் தடைப்படும்.
இது இல்லாவிட்டால் மட்டும் உள்ளுர் ஆட்சி சிறப்பாக நடைபெறாது என்பதற்கு கடந்த காலத்து முழு பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்த வடக்கு மாகாணசபை ஆட்சிக் காலம் சாட்சி.
யாழ் மாநகரத்தின் ஆட்சியில் கடந்த காலத்தில் நடைபெற்ற இணைந்த ஆட்சிகள் நல்ல சாட்சி
புதிய தேர்தல் முறை நேரடித் தெரிவு விகிதாசாரத் தெரிவு என்றான 60 இற்கு 40 என்ற முறை நேரடித் தெரிவிற்கு அப்பாலும் கட்சி பெற்ற வாக்குகள் அடிப்படையில் விகிதாசாரப் பிரநிதித்துவம் என்றாக தேசிய மக்கள் கட்சியும் ஏனையவர்களும் இடங்களை அதிகமாக பெறுதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
இது தமிழ் பிரதேசங்களில் தேசிய மக்கள் சக்தியிற்கு பரந்து பட்ட ஆதரவுத் தளம் இன்னமும் ‘சிங்களக் கட்சி’ ‘தமிழன் ஆள வேண்டும்’ என்ற வெறுப்பு பரப்புரையை மீறி கிடைத்திருப்பதாக உணர வைக்கின்றது.
ஆனாலும் தமிழர்களின் காணிகளைப் பறித்தல், உரிமைகளை வழங்குதல் இங்கு ஆட்ட பரம்பரைக்குத்தான் ஆளும் உரிமையை உண்டு என்ற உணர்ச்சிப் பேச்சில் இருந்து மக்கள் விடுபடமுடியாத அளவிற்கான அரசியல் வறுமை நிலவுவதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
இதன் அடிப்படையில் மத்தியில் ஆட்சி செயற்பாடுகளை நகர்த்த வேண்டி தேவையை இத்தேர்தல் சுட்டிக் காட்டியும் உள்ளது.
வடக்கில் பேசிய குறும் தேசியவாதம் தெற்கில் பேரினவாதத் சக்திகள் மீள் எழுந்து வருவதற்கான உரமூட்டலையும் சிறிய அளவில் மொட்டு இடம் செய்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகளும தெரிவிகின்றன.
இதில் உள்ள ஆபத்து வடக்கில் கிழக்கில் உள்ள குறும் தேசியவாதிகளால் கிஞ்சிதமும்உணரப்பட்டதாக சீர்தூக்கப் பார்கப்பட்டதாக அறிய முடிவில்லை. மிகவும் குறுகிய அரசியல் வெற்றிக்கு கொழுத்திப் போடும் வேலைகளை தமிழ் குறும் தேசியம் பேசுபவர்கள் செய்தும் இருக்கின்றர். இதன் தாக்கம் இனி வரும் காலத்தில் அதிகம் உணரப்படலாம். இது ஒரு மிகவும் ஆபத்தான சமிக்கைகள்தான்.
இதற்கும் அப்பால் அர்தம் உள்ள அதிகாரப் பரவலாக்கம் என்ற அரசியல் விடயம் சரியாக உணரப்பட்டு அதற்கான அரசியல் அமைப்பு மாற்த்தின் அவசரத்தையும் இத்தேர்தல் முடிவுகள் காட்டி நிற்கின்றது.
அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத இடங்களில் மற்றவர்களின் இணைப்புடன் ஐக்கியம் என்று அமையாமல் அமையும் ஆட்சிகள் அடிக்கடி ‘மாற்றம் ஒன்றோ மாறாது’ என்றாக தொடரப் போகின்றது அடுத்த 5 வருடங்களுக்கும்.
இந்த அனுபவம் தேர்தல் முறமையில் மாற்றம் ஒன்றை கொண்டு வரவேண்டும் என்பதை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆளும் அரசிற்கு உணர்த்தலாம்.
நாடு தழுவிய அளவில் சதவித அளவில் தேசிய மக்கள் சக்தி மற்றைய எந்தக் கட்சிகளையும் விட இரண்டு மடங்கிற்கு மேலான வாக்களை அது 50 சதவிகிதத்திற்கு அண்மையாக மொத்தமாக தனக்குள் வைத்திருக்கும் பலம் மக்களால் உணரப்பட வேண்டும்.
இது ஆட்சியாளர்களுக்கு மமதையை ஏற்படுத்துவதற்கு பதிலாக அதிக பொறுப்புக்களை அவர்களுக்கு உணர்த்துவதாகவும் அமைய வேண்டும்..