உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தலில் பெரு வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தி

சில ஆய்வாளர்கள் பாராளுமன்றத் தேர்தலுடன் இதனை ஒப்பிட்டு வாக்கு சதவீதம் குறைந்ததாக கணக்கு காட்டி கடந்த ஆட்சியாளர்களின் ஊழல் அரசுக்கு சாமரம் வீசுகின்றனர்.வாக்களிப்பு வீதம் குறைகிற போது வாக்கு சத வீதமும் குறையும் அத்தோடு உள்ளூராட்சி தேர்தல்களில் சொந்தம் உறவு என்பவையும் வேலை செய்திருக்கும் .

தேசிய மக்கள் சக்தியின் செல்வாக்கு எந்த வகையிலும் குறையவில்லை என்பதையே புள்ளி விபரங்கள் குறிப்பிடுகின்றன.

வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் சென்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் சில நூறு வாக்குகளையே பெற்ற தேசிய மக்கள் சக்தி இம்முறை.கிடத்தட்ட மூன்று லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்றுள்ளது.முன்னூற்றுக்கு மேற்பட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்களைப் பெற்றுள்ளது.

மலையகத்திலும் தேசிய மக்கள் சக்தி தன் வெற்றி முத்திரையை பதிவு செய்துள்ளது.

இவையெல்லாம் சாதாரணமான வெற்றியல்ல தேசிய மக்கள் சக்தியின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் வெளிப்பாடு.ஊழலுக்கும் லஞ்சத்துக்கும் எதிரான மக்களின் குரல்.

இன்று தென்னிலங்கையில் பாரம்பரியமான கட்சிகள் மிகப் பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளன.

கடந்த காலத்தில் ஊழலிலும் லஞ்சத்திலும் திளைத்து கொழுத்த கட்சிகள் சில கொஞ்சம் வாக்கு சத வீதத்தில் ஏறு முகம் கண்டுள்ளதை பார்த்து பெரு மகிழ்வு கொள்கின்றனர் இவர்கள் லஞ்சத்தையும் ஊழலையும் ஆதரிக்கின்றனரா.ஆனால் மக்கள் தெளிவாக உள்ளனர் கறை படிந்த கடந்த காலம் இனி எப்போதும் வரக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர் என்பதை உணர முடிகிறது.

மக்களுக்கு விளங்கும் ஐந்து மாதத்தில் எவையெவற்றை செய்ய முடியும் ஐந்து ஆண்டுகளில் எவற்றை நிறைவேற்ற முடியும் என்பது எழுந்த மானத்தில் எதையும் தீர்மானித்து விட முடியாது எல்லாவற்றுக்கும் ஒரு கால அவகாசம் உண்டு.

காலம் நிச்சயமாக தேசிய மக்கள் சக்த்தியோடு உள்ளது.அனுர எனும் அறிவார்ந்த தலமையின் வழிகாட்டலுடன்.

மூதூர் பிரதேச சபைமூதூர் பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறாவிட்டாலும் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்று மூன்று உறுப்பினர்களையும் தனதாக்கிக் கொண்டுள்ளது.

இது ஒரு மிகப் பெரிய பாச்சல் .பாரம்பரியமான தமிழரசுக் கட்சியை விட எழுநூறு வாக்குகளே குறைவாகப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெருகல் பிரதேச சபையிலும் தேசிய மக்கள் சக்தி மூன்று உறுப்பினர்களை தனதாக்கிக் கொண்டுள்ளது.

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்ஊழலற்ற லஞ்சமற்ற வீண் விரையமற்ற முற்போக்கு அரசியலை முன்பெடுப்போம்.வருங்காலம் நமக்கானது.