எனது மகனின் படுகொலைக்கு ஶ்ரீலங்காவில் நீதி கிடைக்கும் என நான் ஒருபோதும் நம்பவில்லை

எனது மகனின் படுகொலைக்கு ஶ்ரீலங்காவில் நீதி கிடைக்கும் என நான் ஒருபோதும் நம்பவில்லை என திருகோணமலையில் 2006 இல் சுட்டுக்கொல்லப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரான ரஜிகரின் தந்தை காசிப்பிள்ளை மனோகரன் தெரிவித்துள்ளார்

அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு வழங்கியபேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

எனது மகன் 2006 ம் ஆண்டு ஜனவரி 2 ம் திகதி கொலை செய்யப்பட்டார்

அவர் மிகவும் அமைதியானவர். அவர் மேசைபந்து பயிற்றுவிப்பாளர், அவர் மருத்துவராகவரவிரும்பினார்.
ஆனால் அனைத்தும் தற்போது அழிக்கப்பட்டுவிட்டது.

திருகோணமலை கடற்கரையில் அன்றைய தினம் அந்த மாணவர்கள் எங்களை காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என சத்தமிட்டார்கள்

அதன் பின்னர் திடீரென படையினர் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர்.

அதன் பின்னர் இரு மாணவர்கள் உயிருடன் உள்ளனர் எனவும் ஐந்துபேர் கொல்லப்பட்டுவிட்டனர் எனவும் எனக்கு தகவல் கிடைத்தது.

நான் மருத்துவமனைக்கு சென்றவேளை அவர்களின் உடல்கள் பிரேதஅறையில் வைக்கப்பட்டிருந்தன.

நான் பிரதே அறையின் உடலை திறந்தேன் .முதலில் இருந்தது எனது மகனின் உடல்.

ஶ்ரீலங்காவில் உரிய நீதி கிடைக்காது.நான் கலப்பு நீதிமன்றமொன்றையே விரும்புகின்றேன் அல்லது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை எதிர்பார்க்கின்றேன் , நான் ஒருபோதும் ஶ்ரீலங்கா சேர்ந்த சில நீதிபதிகளை நம்புவதில்லை.

நான் பணமோ, வேறு எதனையுமோ கேட்கவில்லை, நான் நீதியையே கேட்கின்றேன்.

நான் எனது மகனிற்கு சர்வதேசநீதியை கேட்டுநிற்கின்றேன், அதனை கோராவிட்டால் நான் ரஜிகரின் தந்தையில்லை.