ஒரு உண்மையான அக்கறை

கருணாநிதி சுகவீனமுற்ற நிலையில் அவரை துரோகியாக்கி அரசியல் ஆதாயம் தேட சிலர் முனைந்தனர்.சிலர் அறிவீனம் காரணமாக அவரை துரோகி என்று எழுதினார்கள்.இதனைத் தொடர்ந்து நண்பர் ராஜ் செல்வபதி வடக்கு கிழக்கு மாகாண சபையின் இறுதிக்காலம் தொடர்பான ஒரு பதிவினை எழுதிவருகிறார்.இது தொடர்பாக நண்பர் யோகா வளவனும் ஏற்கனவே சில தகவல்களை பதிவு செய்திருந்தார்.

இந்தப் பதிவுகளைப் படிக்கும்போது எனக்கு ஈ.பி.ஆர்.எல்.எப் என்ற அமைப்பின்மீது ஒரு மரியாதையை உண்டாக்கியிருக்கிறது.வட கிழக்கு மாகாண சபை உருவானபோது அதை புலிகள் தங்களிடம் மட்டுமே தரவேண்டும் என்ற நிபந்தனையை வைத்தனர்.அதில் தமிழர் விடுதலைக் கூட்டணி,ஈ.பி.ஆர்.எல்.எப் பங்கேற்பதை விரும்பவில்லை.இதன் காரணமாக இந்த மாகாண சபை ஈ.பி.ஆர்.எல்.எப் கைகளுக்குள் தானாகவே வந்தது.புலிகளின் எதிர்ப் பிரச்சாரத்துக்கு அஞ்சி புளொட்,தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவை ஒதுங்கி நின்றன.

இந்த வடகிழக்கு மாகாண சபை நிர்வாகத்துக்கு வடக்கே புலிகளின் பயம் காரணமாக ஆதரவுகள் குறைவாக இருந்தன.ஆனால் கிழக்கு மாகாணத்தில் இனவெறியர்களின் கொடுமைக்கும் இராணுவத்தின் கெடுபிடிக்கும் மக்கள் முகம் கொடுத்து பெரியளவிலான இழப்புகளை சந்தித்திருந்தார்கள்.இதன் காரணமாக இந்த வட கிழக்கு மாகாண நிர்வாகத்துக்கும் இந்திய இராணவத்துக்கும் தார்மீக ஆதரவு இருந்தது.

பிரமேதாசா புலிகள் உறவைத் தொடர்ந்து இந்த மாகாணசபையை நிர்மூலமாக்க இரண்டு தரப்பும் முயன்றது.இது தமிழர்களுக்கு ஒரு நல்ல தீர்வாக இருந்தபோதும் இதைப் பொறுப்பேற்றால் இது ஈ.பி.ஆர்.எல்.எப் மூமலாக கிடைத்த ஒன்றாகவே கருதப்படும்.அது புலிகளுக்கு தாழ்வு மனப்பானமையை உருவாக்கி இருக்கிறது.

இங்கே நான் குறிப்பிட விரும்புவது இதுதான்.

இந்திய இராணுவம் வெளியேறிய பிறகு அரசும் புலிகளும் ஒரே அணியில் இயங்கியதால் ஈ.பி.ஆர.எல்.எப் நிர்வாகத்தை வைத்திருப்பது சுலபமானதல்ல.எனவே அவர்களும் வடகிழக்கு மாகாண சபையை தாங்களாகவே கைவிட வேண்டிய நிலை உருவாகியது.அப்படியான ஒரு சூழல் உருவாகியபோதும் இந்த வடகிழக்கு மாகாண சபை தமிழர்களின் கைகளை விட்டுப் போய்விடக்கூடாது என மிக அக்கறையோடு செயற்பட்டு இருக்கிறார்கள்.

புலிகள் பரம எதிரியாக இருந்தபோதும் அவர்கள் இந்த மாகாண சபை நிர்வாகத்தை கையில் எடுக்கவேண்டும் என விரும்பியிருக்கிறார்கள்.அதற்காக பகீரதப் பிரயத்தனம் செய்திருக்கிறார்கள்.கருணாநிதி மூலமாக முயன்றிருக்கிறார்கள்.உண்மையாகவே அவர்களுக்கு இருந்த மக்கள் அக்கறையை ராஜ்செல்வபதி,வளவன் ஆகியோரின் பதிவுகள் தெளவாக காட்டுகின்றன.இங்கே வரதராஜபெருமாள் அவர்களின் முயற்சியும் பாராட்டுதலுக்கு உரியது.

தங்கள் உயிரை தற்காத்துக்கொள்ள வேண்டிய நேரத்திலும் பத்மநாபா தலைமையிலான ஈ.பி.ஆர.எல.எப் தோழர்கள் உயிரைப் தற்காத்துக்கொள்ளும் நெருக்கடியான சூழலிலும் எந்த மக்களுக்காக போராட வந்தார்களோ அவர்களது நலனில் அக்கறை கொண்டு பணியாற்றியதற்கு ராஜ் செல்வபதியின் பதிவுகள் ஒரு சாட்சி.ஆவணம்.

அதே நேரம் மக்கள்மீதான புலிகளின் அக்கறையின்மை,வரட்டுத்தனம் எல்லாம் ராஜ்செல்வபதியின் பதிவுகள் தெளிவாக்குகிறது.இங்கே கருணாநிதி மாறன் குடும்பத்தின் வேசமும் வெளிச்சமாகிறது.

இருக்கிறதை விட்டு பறக்கிறதை பிடிக்க நினைப்பவன் தமிழன் என புலிப்பாடகர் தேனிசை செல்லப்பா ப புலிகளின் மேடையில் சொன்னார்.அதையே புலிகள் செய்திருக்கிறார்கள்.இப்போது தமிழினம் அவலப்படுகிற்து.

ஈ.பி.ஆர.எல.எப். ற்றிய உண்மைகளை பதிவிட காரணமான ராஜ்செல்வபதிக்கு நன்றி

அந்த மாகாண சபை தங்கள் கைகளைவிட்டு போகின்ற நிலையிலும் மக்கள் கைகளை விட்டு போய்விடக்கூடாது என்று உழைத்த அந்த ஈ.பி.ஆர.எல்.எப் அமைப்பை பாராட்டியே ஆகவேண்டும்.

(Vijay Baskaran)