சம்பந்தர் விளையாடப் போகும் காய் நகர்த்தல் விளையாட்டு! திவாலாகவுள்ள இலங்கை?

அதன்படி அடுத்த சில வாரங்களில் சர்வதேச சமூகம் இலங்கையை குறிவைத்து பல தீவிரமான காட்சிகளை வெளியிடும் என்பதை உணர்ந்தே மோடியுடனான சந்திப்பை இன்னும் சில வாரங்களுக்கு ஒத்திவைக்க சம்பந்தன் திட்டமிட்டிருந்தார்.

அதன் முதல் குண்டு கடந்த வாரம் அமெரிக்காவில் இருந்து வீசப்பட்டது. அது அமெரிக்காவில் நடைபெறும் ஜனநாயக மாநாட்டில் இருந்து இலங்கை நீக்கப்பட்டது எனும் செய்தியோடு ……. இந்தியா, மாலைதீவு, நேபாளம், பாகிஸ்தான் போன்ற பிராந்திய நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் அழைப்பு விடுத்திருந்த போதிலும், பிடன் அரசு , இலங்கைக்கு அழைப்பு விடுக்கவில்லை.

உச்சி மாநாட்டில் இருந்து இலங்கையை மட்டுமல்ல, சீனாவையும் நீக்க பிடன் முயன்றார். அமெரிக்காவிலிருந்து பல தாக்குதல்களின் அறிகுறிகள்! அத்தோடு, சுமந்திரன் மற்றும் சானக்கியன் ஆகியோர் கடந்த மாதம் அமெரிக்காவிற்கு மேற்கொண்ட விஜயங்கள் மற்றும் அந்நாட்டு இராஜாங்க திணைக்கள அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் முடிவுகள் அடுத்த சில வாரங்களில் வெளியாகும்.

டிசம்பர் இறுதி வாரத்திற்குள் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இலங்கையை இலக்கு வைத்து தீவிர அறிக்கையை வெளியிடும் எனவும் சம்பந்தனுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இலங்கையின் மனித உரிமை நிலைமையை அடிப்படையாகக் கொண்டது. இந்த அறிவிப்பின் மூலம் தமிழ் மக்களுக்கான தீர்வும், போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்களும் வலுவாக வெளிப்படுத்தப்படும் என அறியமுடிகின்றது.

இந்த அறிவிப்பு வெளியாகும் வரை மோடியை சந்திப்பதை சம்பந்தன் தாமதப்படுத்துகிறார். குறித்த அறிவிப்பின் உள்ளடக்கங்களை கையில் வைத்துக்கொண்டு மோடியை சந்திக்க சம்பந்தன் தயாராகி வருவதாக தெரியவருகிறது. அமெரிக்காவின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஏனைய மேற்குலக மற்றும் ஐரோப்பிய நாடுகளும் அதன் அடிப்படையில் இலங்கை தொடர்பான கடுமையான தீர்மானங்களை அமுல்படுத்த தயாராகி வருவதாக அறியமுடிகின்றது.

அதன்படி எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் நாடு திவாலாகும் அபாயம் மட்டுமன்றி சர்வதேச ரீதியாக ஓரங்கட்டப்படும் அபாயமும் உள்ளது. இன்னும் வரும் …..

 (ஜீவன்)