தமிழக மாநில சட்டமன்ற தேர்தல் ஒரு கண்ணோட்டம்!

தமிழகத்தை பொறுத்த மட்டில் தென்தமிழகத்தில் தென்கிழக்கு மாவட்ட மக்களின் தெளிவான முடிவு! தெளிவான தொலைநோக்குப்பார்வை! பணத்திற்காக விலைபோகாமல்! எதிர்காலத்தை எண்ணி வாக்களித்த விதத்தை நான் வெகுவாக பாராட்டுகிறேன்! வாழ்த்துகிறேன்! வணங்குகிறேன்! இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் தஞ்சை மாவட்ட மக்களின் சிந்தனைகள் மிகத்தெளிவு!

அதைப்போல தமிழகத்தில் மத்தியப்பகுதி மாவட்டங்களான திருச்சி கடலூர் அரியலூர் பெரம்பலூர் மக்கள் இன்னும் தெளிவாகவே முடிவினை தீர்ப்பாகவே கொடுத்துள்ளார்கள்! இங்கே சுயமரியாதைக்கு மிகமுக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள்! பாதமலர்களை! தொட்டு வணங்கி பாராட்டி மகிழ்கிறேன்! அண்ணன் கே.என். நேரு போன்று பல முன்மாதிரி தலைவர்களை திமுக இன்னும் பல்வேறு மாவட்டங்களில் அடையாளப்படுத்தி ஆக்கத்திற்கு உருவாக்கிடும் நேரம் வந்துவிட்டது என்றுதான் நான் கருதுகிறேன்! இதில் புதுக்கோட்டை மாவட்ட மக்களும் தெளிவாக இருந்திருக்கிறார்கள்! ஆனால் விஜயபாஸ்கர் என்கிற தீயவிஷத்தால் அதிகாரிகளின் துணைவேஷங்கள் அதற்கு துணைபோயிருக்கின்றன! இருந்தாலும் மக்களின் நிலை பாராட்டுக்குரியது!

கடலோர நாகை மாவட்டத்தில் சிலவற்றை நாம் ஆராய்வை செயல்படுத்தி தவறவிட்ட சிலவெற்றிவாய்ப்புகளை பற்றி விவாதித்து கட்சிமட்டத்தில் மாற்றத்தை கொண்டுவந்தே ஆகவேண்டும்!

திருவாரூர் மாவட்டத்தின் மக்களை பற்றிச்சொல்லவா வேண்டும்! அத்தனைபேருமே சுயமரியாதை கொண்ட மாமனிதர்களை கொண்ட மாவட்டமென்று மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறது! பூண்டி கலைவாணன் நட்சத்திர நாயகன்தான்! பாராட்டுக்கள்! தெளிவான பார்வைமட்டுமல்ல! நல்ல சிந்தனை! தன்னம்பிக்கை உடையவர்கள்!

கடலூர் மாவட்டத்தில் அங்குமிங்கும் அலைபாய்ந்த எண்ணங்களோடு! சில தொகுதிகள்! சிலவற்றில் சுயமரியாதை மாமானித தங்கங்கள்! சிலவற்றை நம்மாலேயே ஜீரணிக்க முடியவில்லை! MRK பன்னீர்செல்வத்தின் திறன் கட்டுக்கோப்பை சற்றே தளர்வுடன் காப்பாற்றியிருக்கிறது பாராட்டுக்கள் அண்ணே!

வடமாவட்டதின் மத்திய வடல்பகுதி நாமக்கல் மாவட்டத்தை அபகரிக்கத்துடித்தது பாசிசக்கும்பல்கள்! அவர்களை துரத்தியடித்திருக்கிறது இந்த மாவட்டம்! கரூர் மாவட்டத்திலும் இதே நிலையை ஊன்றிப்பார்த்துவிடத்துடித்தது பாசிசக்குரங்குகள்! ஆனால் செந்தில்பாலாஜி என்கிற மகாசக்தியால் அவர்களை ஓடவைத்திருக்கிறது மக்களின் அன்பைப்பெற்ற செந்தில்பாலாஜியின் திராவிடப்பேராயுதம்! வாழ்த்துக்கள் செந்தில்பாலாஜி அவர்களே!

மதுரை மாவட்டம்! தன்மானத்திற்கு பெயர்பட்ட மண்! இங்கேயும் அங்குமிங்கும் தள்ளாடித்தான் அசைந்து தத்தளித்து பிழைத்திருக்கிறது! சிலவற்றில்! எதிரேயுள்ள கோமாளிளைக்கூட கரைசேர்த்திருக்கிறது! ஒருவேளை அஞ்சாநெஞ்சனின் கருணைப்பார்வை கழகத்தின் மீது படவில்லையோ! என்னவோ! களகர்த்தாவை களத்தில் கொண்டுவந்திருக்க வேண்டும்!

திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல்லும் சாய்ந்திருக்கிறது! ஆத்தூராரின் அருமையான வெற்றியும் இங்கேசான்று! ஆனாலும் சோழவந்தான் பழனி ஒட்டன்சத்திரம் ஆறுதலைத்தந்திருக்கிறது!

காஞ்சியும் கரைசேர்த்திருக்கிறது கழகத்தை! செங்கல்பட்டும் சிவக்கவைத்திருக்கிறது! காலைமுதலே தொடர் முன்னிலை! ஆறுதலை தந்து ஆசுவாசப்படுத்தியிருக்கிறது!

சென்னையில் வாக்குப்பதிவு விகிதம் மந்தமென்று இருந்தாலும்! சென்னைதான் திமுகவுக்கு பெருமைக்குரிய இடத்திற்கு கொண்டுசேர்த்திருக்கிறது! திமுகவுக்கு மகுடம் சூட்ட காரணமாக இருந்திருக்கிறது! தெளிவுள்ள சென்னைவாழ் மக்களை எவ்வளவும் பாராட்டினாலும் தகும்! நாளைய வாழ்வாதாரத்தை பற்றி சிந்தித்து முடிவெடுத்துவிட்டவர்கள்! வாழ்த்துகிறேன்! வணங்குகிறேன்! திமுகவின் ஒவ்வொரு நிர்வாகிகளின் கடின உழைப்பு இங்கே மிகப்பிரம்மாதம்! பிரதானம்!

திருவள்ளூர் மாவட்ட திமுக பணியாற்றல் மிகச்சிறப்பு! அத்தனையும் சொக்கத்தங்கங்களாக உழைத்திருக்கிறார்கள்! பாராட்ட கடமைப்ட்டிருக்கிறோம்! வாழ்த்துக்கள்!

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மிகப்பெரும்பான்மையான தொகுதிகளை வெற்றியை நோக்கி அடைந்திருக்கிறது! சாதிய வளைகளை அறுத்தெறிந்து! சாதித்திருக்கிறது மக்களின் ஏகோபித்த எண்ணம்!

வேலூர் மாவட்டத்தில் கட்சியினரிடையே இனக்கமில்லை! கூட்டுமுயற்சியில்லை! இங்கே உட்பூசலால் கட்சியின் அடித்தளமே ஆட்டங்கண்டிருக்கிறது! ஆராயவேண்டிய விஷயம்! சீர்படுத்த ஆயத்தப்படுவேண்டும் ! திமுகவின் பொதுச்செயலாளரே தப்பித்து பிழைத்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்!

தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இன்னும் சாதியும் பணமும் மட்டுமே முன்னுரிமைக்கு இடங்கொடுத்து முட்டுச்சந்திலே முட்டிக்கொண்டு தொலைத்திருக்கிறது! நிமர்த்தமுடியாதுபோல! மக்களை மடமையாக்கி வைத்திருக்கிறது சாதியம்! இங்கே கல்வியை கட்டமைப்பு ரீதியாக உயரமைக்க வழிவகையை செய்யவேண்டும்!

கோவை ஈரோடு திருப்பூரை அடக்கிய கொங்கு மண்டலத்தில் இன்னும் சாதியவாசமும் பணவாசமும் ஒழியவழியில்லை! இன்னும் ஆயிரம் பெரியார்கள் அம்மண்ணிலே பிறந்தாலும் திருந்திட வழியில்லைபோலும்! இந்தநிலையால்தான் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்பட்ட கோவைப்பெருநகரம் இன்று அதையே இழந்து நிற்கிறது! அங்கே சாதியால் சமூகத்தொலைநோக்கம் வீழ்ந்திருக்கிறது! மக்களே முன்னெடுத்து தொலைத்துவிட காரணமாகிவிட்டார்கள்

பொள்ளாச்சி கற்பழிப்புச்சம்பவங்களே எங்களுக்கு பெரிதில்லை! சாதியப்பெருமையும் கொடுக்கும் காசுமே முக்கியமென்று முடிவெடுத்துவிட்டார்கள் போலும்! இனிமேல் கற்பழிப்புகளை அங்கீகாரப்படுத்தி கௌரவித்தாலும்! பாராட்டுப்பத்திரம் வாசித்தாலும் ஆச்சரியம் படுவதற்கில்லை

கோவையையும் திருப்பூரையும் வடமாநிலத்தவர்களுக்கே!தாரைவார்க்க முடிவுசெய்துவிட்டார்கள்! மற்றுமொரு உத்தரபிரதேசத்தின் நகலாக மாறிப்போன கொங்குமண்டலம்! அதன் சிந்தனைத்திறன்! படுபாதாளத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது! பரிதாபப்படுவதைத்தவிர வேறில்லை! ஆக்கம் வேண்டாம்! அழிவு ஒன்றே போதுமென்று முடிவெடுத்துவிட்டபிறகு! நாம் மற்றதின்மீது கவனத்தை செலுத்துவதே நல்லது!

கொங்குமண்டலம் காவிகளையும்! சாதிகளையும்! தழுவிப்போய் வீழ்ந்துவிட்டாலும்! மற்றைய மாவட்டங்கள் தமிழகத்தின் எதிர்கால கனவை! வாழ்வாதாரத்தை! காப்பாற்றியிருக்கிறது!

இதுவொன்றே நமக்கெல்லாம் கிடைத்த மிகப்பெரிய ஆறுதல்! அளவில்லா மகிழ்ச்சி இல்லையென்றாலும்! தப்பித்துவிட்டோம்! என்று ஆறுதலை தந்திருக்கிறது தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள்!

திமுக தலைவர் தளபதி அவர்களுக்கும்! அவரோடு இனைந்து களத்திலே கூட்டணியாக பயணித்த கூட்டணிக்கட்சியினர்களுக்கும்! வாழ்த்துக்களையும்! பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்!

திராவிடத்தின் அறம்! அரணாக நின்று காப்பாற்றியிருக்கிறது!

இனிமேல் உச்சத்தைத்தவிர வேறில்லை! திமுகவுக்கு! தொடரட்டும் தொடர்வெற்றிகள்!