தாயக தேர்தல் கள நிலமை

தமிழ் வாக்காளர்கள் பெரும்பாலானோரின் நிலை – தமிழ்த் தேசியம், பலமான அரசியல் சக்திகள் (ஏக பிரதிநித்துவம்) என்பதாக உள்ளது.
வடக்கில் தமிழ் தேசியத்திற்கு எதிர்ப்பு அல்லது வேறு காரணங்களால் தமிழ் தேசியத்திற்கு அப்பாலன ஆதரவும் இருந்தே வருகிறது(டக்ளஸ்,விஷயகலா,அங்கஜன்)
கிழக்கில் தமிழ்த் தேசியம் என்பது முஸ்லிம் எதிர்ப்பையும் கொண்டது… சில இடங்களில் இதுவே பிரதான நிலைப்பாடு.
தீவிர தமிழ் தேசியவாதம் ஏன் மக்கள் ஆதரவைப் பெறவில்லை என்பது முக்கியமான விடயம்.

மக்கள் பிரதான கட்சியான கூட்டமைப்பின் பின் நிற்க விரும்பினார்கள்… ஐக்கியப்பட்டு நிற்கிறோம் என்பதைக் காட்ட விரும்பினார்கள் என்றே கருத வேண்டியுள்ளது. இதன் பின்னால் பழமை வாதிகளின் ஆதரவுத்தளமும் த. அரசுக் கட்சிக்கு இருக்கிறது.
புதிய – மாற்று அணி ஒன்று சரியான முறையில் மக்கள் அபிமானம் பெறும் வகையில் அல்லது தடுமாற்றத்திற்கும் குழப்பத்திற்கும் உள்ளாகி உள்ள மக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் உருவாக்கப்படவில்லை.

சில இடங்களில் பழைய கோட்பாட்டுடன் மக்கள் வாகாகளிக்க முனைவர். அம்பாறை-கல்முனையில் இப்போதே “வாக்கைச் சிதைக்காதீர்கள்” என்ற கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. முஸ்லிம்கள் தொடர்பில் இவ்வாறு அபிப்பிராயம் உருவாக்கப்படுகிறது.

சைக்கிள் காரர் ஒரு வெகுசனத்தன்மை பெற்ற அமைப்பாக நோக்கப்படவில்லை! மாற்று அணி இயக்கங்களுக்கு கடந்த கால கசப்பான வரலாறு ஒரு தடையாகவே இருந்து வருகிறது..இதனை இரு பகுதியாரும் உணரவில்லை. தந்திரோபாய முறையில் கூட கையாள முடியவில்லை.. வெகுஜனக் கவர்ச்சி உள்ளவரை /களை இணைத்துக் கொள்ள முயலவில்லை அல்லது முடியாதுள்ளது..
இம்முறை மாற்றத்தை விரும்புவோர் குழம்பிப் போவார்கள்… அங்க இரு அணி இருக்கிறது.

தேசியக்கட்சிகள் பலமான ஆட்களை இணைத்துக் கொள்ள முடியாமல் உள்ளார்கள் என்பது நிம்மதியும் சாபமும்.
டக்களஸ் மாற்று அணியின் மக்கள் செல்வாக்கு எப்படி எனத்தெரியவில்லை.

தொடர்ந்து அவதானத்துடன் இருப்போம்… அப்படி தொடர்ந்து இருக்க முடியுமா?

(Vijayaretthna Edwin)