நடிகர் பாக்யராஜ் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி..!

உங்கள் மனம் கவர்ந்த மற்றொரு மகாத்மா யார்?

ஒரு மாட்டு வண்டிக்காரன் ஒரு சிறுவனை ஏற்றிக் கொண்டு போகிறான்.அவன் பேச்சோட வட்டார வழக்கிலிருந்து அவன் தீண்டத்தகாத சிறுவன் னு தெரிஞ்சதும் மாட்டை கழட்டி விட்டு வண்டியை குடை சாய்க்கிறான் வண்டிக்காரன்.
தாகத்துக்கு அந்த சிறுவன் தண்ணீர் கேட்கிறான்; அதோ அதுதான் உனக்கான தண்ணீர் னு சாலையோரப் பள்ளத்தில் தேங்கிக் கிடந்த மழைத் தண்ணீரை காட்டினாங்க..
உயர்சாதிக்காரர்கள்.அவன் மட்டுமல்ல அவன் எழுதிய தாளும் தீண்டத்தகாததுன்னு நோட்டுப் புத்தகத்தை திருத்த மறுக்கிறார் ஆசிரியர்.
முடி வெட்டி முடிந்தபின் அவன் தீண்டத்தகாதவன் என்று தெரிந்து கொண்ட ஒரு சவரத்தொழிலாளி கத்தியை எங்கே கழுவுவேன் என்று கத்துகிறான்.அன்று முதல் தன் சகோதரியிடம் முடிவெட்டிக்கொண்டு பள்ளிக்கு செல்கிறான்.வடமொழியைப் பாடமாய் எடுத்து படிக்க விரும்பினப்போ இந்து தர்மம்– கல்விச்சட்டம் இரண்டுமே இடம் தரவில்லை அவனுக்கு.

பதினாறு வயதில் திருமணம் நடக்குது; தீண்டத்தகாதவர்கள் பகலில் திருமணம் புரியக் கூடாதுன்னு ஒரு விதிக்குட்பட்டு ஒரு மீன் அங்காடியில் சாக்கடை மூடிய கற்பலகையே மேடையாய் இரவில் நடக்குது அந்த ஏழையின் திருமணம்.இத்தனை அவமானததையும் தன் கொள்கைக்கு உரமாயிட்டு வளர்ந்த கோபுரத் தலைவன் அம்பேத்கார் தான் இந்திய அரசமைப்பை வடிவமைத்திருக்கிறார்.இந்தியாவில் வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கெதிராகவும்,சுதந்திர இந்தியாவில் இந்து ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் இரண்டு யுத்தங்கள் நிகழ்த்தியிருக்கிறார்.பட்டொளி வீசி பாரதத்தின் அடையாளமாய் விளங்கும் தேசியக் கொடியை வடிவமைத்திருக்கிறார்.
சேறும் சகதியும் சுவரை அழுக்காக்கலாம்; சூரியனை அழுக்காக்குமா?
அழுக்குப்படுத்த முடியாத அறிவுச் சூரியன்
அண்ணல்”அம்பேத்கர்”!!
ஆதாரம் டிச 23 பாக்யா..