பாசிசம் மூழ்கடிக்கத் துடிக்கும் இலட்சத்தீவுகள்

இதன்
மக்கள் தொகை –
2011ன் படி 64,473.ஆகும்.
இவர்கள்
மலையாளம், ஆங்கிலம், ஜெசேரி, திவேஹி மொழி பேசுபவர்கள்
90%க்கும் மேல் இஸ்லாமியர்கள்
மாட்டிறைச்சி தான் பிரதான உணவு
மீன் பிடித்தல்,
மீன் பதப்படுத்துதல்,
மீன் ஏற்றுமதி
தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் வர்த்தகம் மற்றும்
சுற்றுலா தொழில்கள் நிறைந்த பகுதி.
மத்திய அரசின் நேரடி ஆட்சியின் கீழ் வரும் இலட்சத்தீவுகளில் துணைநிலை ஆளுநர் கிடையாது.
மாறாக
நிர்வாக அதிகாரிதான்
அதிகாரம் மிக்கவர்
கடந்த ஜனவரி முதல் குஜராத்தை சேர்ந்த பிரபுல் கோடா படேல் தான் நிர்வாக அதிகாரியாக இருந்து வருகிறார்,
இவர்
மோடியின் குஜராத் அமைச்சரவையில் பொறுப்பு வகித்த தீவிர இந்துத்வ வாதி.
தான் நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றவுடன்
LDAR (Lakshadweep Development Authority Regulations) லட்சத்தீவு மேம்பாடு ஆணைய விதிமுறைகள் -என்ற
சட்டத்தைக் கொண்டு வந்தார்.
இச்சட்டத்தின் மூலம்
இலட்சத்தீவு மக்கள்
யாரை வேண்டுமானாலும்
அங்கிருந்து வெளியேற்றலாம் .
யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம்,
தொழில் துவங்கலாம்.
என்ற நிலையை உருவாக்கினார்.
இதுவரை இலட்சத்தீவுகளின் தனித்தன்மை மற்றும்
சுற்றுச் சூழல் பாதுகாப்பு கருதி இங்கு யாரும் நிலம் வாங்கவோ
விற்கவோ முடியாத நிலை இருந்து வந்தது.
மேலும் இச்சட்டம் மூலம்
யாரை வேண்டுமானாலும் கைதுசெய்து ஓராண்டு சிறையில் அடைக்கலாம்
2 குழந்தைக்கு மேல் பெற்றால் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற நிலை,
மேலும்
லட்சத்தீவு கால்நடைப் பாதுகாப்பு விதிமுறைகள் என்ற சட்டம் மாட்டிறைச்சியை நேரடியாகவோ மறைமுகமாகவோ வைத்திருப்பதற்கும் கொண்டு செல்வதற்கும் தடை விதிக்கிறது.
மீறுபவர்களுக்கு
10 ஆண்டுகள் வரை சிறை – ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்க முடியும்!
சுற்றுலாவை மேம்படுத்தும் நடவடிக்கை என்ற பெயரில் இதுவரை மதுவில்லாத இத்தீவுகளில்
மதுக் கடை, மதுபானக் கூடங்கள் திறக்க
இச்சட்டம் வகை செய்கிறது
பாசிச மக்கள் விரோத
இச்சட்டங்களால்
கோபமுற்ற
லட்சத்தீவு மக்கள் தங்களது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்: போராடி வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் Save Laksadweep என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகிவருகிறது,
தமிழக முதலமைச்சர்
மு. க. ஸ்டாலின், சோனியா காந்தி உட்பட
பல்வேறு ஜனநாயக சமூக இயக்கங்களும்
இடதுசாரிக் கட்சிகளும்
நிர்வாக அதிகாரி பிரபுல்ல கோடா பட்டேலை திரும்பப் பெறக் குரல் கொடுத்து வருகின்றனர்,
கேரள சட்டமன்றமும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.