பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஐநாவில் குரல்கொடுகின்றது கியூபா

கியூபா வெனிசுவலா ஆகிய தென்னமரிக்க நாடுகள் இஸ்ரேலின் மனித உரிமை மீறல்களை ஐ நா தீர்மானங்களை அலட்சியப் படுத்தும் அகங்காரத்தை , மனித இணைத்துக் கெதிரான இஸ்ரேலின் குற்றங்களை கடுமையாக கண்டித்தே பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் வெனிசுலாவின் பிரதிநிதி ஜோர்ஜ் வலேரோ பிரிசினோ (JORGE VALERO BRICEÑO ) தனது உரையில் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் என்ற நாடு ஒரு தலைப்பட்சமாக உருவாக்கப்பட்டு அங்கு ஏழு லட்சம் பாலஸ்தீனியர்கள் வெளியேற்றப்பட்ட “ நகப் “ என அழைக்கப்படும் பேரழிவு வரலாற்றை , அதே அரபுச் சொல்லை குறிப்பிட்டதன் மூலம் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு வரலாற்றை பிரித்தானியாவின் வரலாற்றுத் துரோகத்தை தனது உரையில் மறைமுகமாக சுட்டிக்காடியிருந்தார்.

பல ஆதரவு நாட்டின் பிரதிநிகளும் தங்களின் ஆதரவு உரையில் பாலஸ்தீன மக்களின் வரலாற்று சோகங்களை இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு அடாவடித்தனங்களை சுட்டிக் காட்டினர். கியூபா , வெனிசுவேலாவின் ஆதரவுக் குரல்கள் மிகவும் காட்டமாகவே இருந்தன அமெரிக்க யூத சமவுடமைவாதியும் பாலஸ்தீன உரிமைகள் குறித்து மிக நீண்டகாலமாக குரல்கொடுக்கும் செயற்பாட்டாளருமான பேராசிரியர் நோம் சொம்ஸ்கி ( Noam Chomsky ) காஸா நிலப்பரப்பு உலகின் மிகப் பெரும் திறந்த சிறைச்சாலை (The Gaza Strip was the “largest open air prison in the world”,.) என்று குறிப்பிட்டதை மேற்கோள்காட்டி தனது உரையை ஜோர்ஜ் வலேரோ பிரிசினோ முடித்தது இங்கு குறிப்பிடத்தக்கது. “பாலஸ்தீனம் என்ற யதார்த்தம் சகல மனித இனத்தினதும் மனட்சாட்சியில் இரத்தம் பொசியும் ஒரு ரணமாகும்” என்று துருக்கிய வெளிவிவகார அமைச்சர் அஹமத் டவூட்டகுலு (Ahmet Davutoğlu ) ஐ. நா தீர்மானத்துக்கு அதாரவளித்து ஆற்றிய உரையில் குறிப்பிட்டதும இங்கு நினைவு கூரத்தக்கது (The reality of Palestine is a bleeding wound in the conscience of all humanity,” ),

அகதி முகாமிலேயே அகதியாகும் அவலம் பாலஸ்தீனத்திலேயே நடைபெற்று வருகின்றது. அகதியாக பிறந்து அகதியாக தன்வாழ்வை இயற்கையாக முடித்துக்கொள்ளும் ஒரு சமூகம் என்றால் அது பாலஸ்தீனமாகவாகத்தான் இருக்க முடடியம் இஸ்ரேல் என்ற சியோனிஸ்ட்டுகளின் இருப்பை தக்க வைப்பதற்காகவே மத்திய கிழக்கில் முடிவுறாத யுத்தம் நடத்தப்படுகின்றது…. இதனை அமெரிக்காவே முன்னின்று செய்கின்றது. இது மனித குலத்திற்கே வெக்கக்கேடான விடயம். 1980களின் நடுப்பகுதியல் பாலஸ்தீன மாணவர்களுடன் இணைந்து அவர்களின் விடிவிற்காக தமிழ்நாட்டில் போராட்டம் நடத்தியது நினைவில் வந்து போகின்றது. இவர்கள் இலங்கையில் உள்ள சிறுபான்மையினரின் உரிமைப் போராட்டததை நன்கு உணர்ந்து ஆதரவளித்தும் வந்தனர்

(Bazeer Seyed and Saakaran)