பின்னப்பட்ட சதி வலை

திட்டமிட்டப்படியே புலிகள் அழித்தொழிக்கப்பட்டு Plan B இலங்கையில் நிறைவேற்றப்பட்டது. உண்மையில் இதுதான் அமெரிக்காவின் திட்டமாக இருந்தாலும் புலிகள் சாதுரியமான செயற்பட்டு சமாதானபேச்சுக்களில் தம்மை வலிந்து இணைத்துக்கொண்டு சமாதான பேச்சுக்கள் என்ற Plan A ஐ அமெரிக்காவிடம் வலுகட்டாயமாக திணித்துவிட்டனர். தனது நோக்கில் உறுதியாக இருந்த அமெரிக்க Plan A ஐ விருப்பமின்றி நகர்த்தி சென்ற அதே வேளை அதற்கு சமாந்தரமாக Plan Bஐ இரகசியமாக இந்தியாவுடன் கூட்டு சேர்ந்து நடைமுறைப்படுத்தவும் தொடங்கியது. மீண்டும் ஒரு யுத்ததை புலிகள் தொடக்கும் போது அவர்களை கூண்டோடு அழித்தொழிக்கும் Plan Bதான் அப்போது மிக பரவலாக பேசப்பட்ட ” புலிகளுக்கெதிரான சர்வதேச வலைப்பின்னல்” இதனை பிரதமர் ரணில விக்ரமசிங்கவே செய்வதாகவும் ஒரு இராஜதந்திர தோற்றம் கொடுக்கப்பட்டது.

இலங்கையை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தடையாக இருந்த புலிகள் அழிக்கப்பட்டவுடன் மகிந்த ராஜபக்சவை அப்புறப்படுத்திவிட்டு தமது நலன்சாந்த ரணில் விக்ரமசிஙகவின் தலைமைத்துவத்தை ஏற்படுத்துகின்ற திட்டத்தில் எதிர்பாராத விதமாக மகிந்த ராஜபக்ச சீனாவுடன் சேரந்துகொண்டு தடையாக மாறியதும் யுத்த வெற்ரிக்கு முழுமையாக உரிமை கொண்டாடி இலங்கையில் தன்னை ஒரு அசைக்கமுடியாத சக்தியாக மாற்றிக்கொண்டதும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகையும் இந்தியாவையும எரிச்சலைடைய செய்தது.

யுத்தம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டவுடன் மகிந்தவை அகற்றிவிட நினைத்தவர்களுக்கு தலையிடியாக மாறிய அவரை அப்புறப்படுத்தும் வேலை 2010ல் அந்த யுத்ததை நடத்திய சரத்பொன்சேகாவை கொண்டு செய்யமுயன்றனர். ஆனாலும் மகிந்த ராஜபக்ச சாதுரியமாக செயற்பட்டுஅந்த முயற்சியை தோல்வியடையச்செய்தார். இந்த விடையத்தில் இந்தியா மகிந்த ராஜபக்சவுக்கு மறைமுகமாக உதவியதையும் இந்தியாவின் இந்த இரட்டை நிலையை அறிந்துகொண்ட அமெரிக்க தமிழ்நாட்டை பயன்படுத்தி மீண்டும் இந்தியாவை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததும் இதனுடன் சம்மந்தப்பட்ட விடயமாகவே பார்க்கலாம்.

எனினும் மீண்டும் இந்தியாவின் நெருக்கமான ஒத்துழைப்புடன் அமெரிக்காவின் தொடர்முயற்சியின் விளைவாக 2015ல மகிந்த ராஜபக்ச வெளியேற்றப்பட்டு இலங்கை முழுமையாக அமெரிக்க-இந்திய ஆதிக்கத்தின் கீழ வந்துள்ளது.

இவ்வாறு ஒரு தொடர் காய்நகர்த்தல்களை செய்து இலங்கை மீது அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் ஏன் தமது ஆதிக்கத்தை தக்கவைத்துக்கொள்ள முயல்கின்றன?

2000களின் சீனாவின் உலகலாவிய பெரும் எழுச்சியும் தென் சீனக்கடலில் அதிகரித்த அதன் தலையீடும் அமெரிக்காவுக்கு சவாலாகிமையே இலங்கை மீது அமெரிக்க- இந்திய கூட்டு தமது ஆதிக்கத்தை அதிகரிக்க காரணமாகியது.

1.ஆபிரிக்க-மத்தியகிழக்கு பிராந்தியங்களுக்குள் பரவும் சீன செல்லவாக்கை தடுத்தல்.

2.இந்துமகா சமுத்திரத்தில் அதிகரிக்கும் சீனாவின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தல்.

3.தென்சீனக்கடலில் சீனா தனது ஆதிக்கத்தை விரிவாக்கிகொள்வதை தடுத்தல்.

4.மிக வேகமாக வளரும் சீனாவுக்கு தேவையான எண்ணெய் வழங்கல்களில் இடையூறை ஏற்படுத்தல்.

போன்றவற்றிகாக அமெரிக்க- இந்திய கூட்டு இந்து சமுத்திரத்தின் கட்டுப்பாட்டை தொடர்ந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகின்றது. இலங்கையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர்களே இந்துசமுத்திரத்தை ஆட்சி செய்ய முடியும் என்பதாலேயே அமெரிக்காவும் இந்தியாவும் இலங்கை மீது அதிகளவு ஆர்வம் காட்டுகின்றனர்.

இப்போது கூறுங்கள் மகிந்த மட்டுமல்ல புலிகள் கூட அமெரிக்காவையும் இந்தியாவையும் மீறி மீண்டும் இலங்கையில் எழுச்சி பெற்றுவிட விட முடியுமா என்ன?

(RajH Selvapathi)