விஜேவீரவின் இறுதிக் கணங்கள் –

(என்.சரவணன்)

இம் மாதம் நவம்பர் 13ஆம் திகதியன்று ஜே.வி.பி, மாவீரர் தினத்தை நினைவு கூரியது. இன்று இலங்கையில் சக்தி வாய்ந்த இடதுசாரி இயக்கமாக முதன்மை நிலையில் இருப்பது ஜே.வி.பி.யே. 1971, 1988 ஆகிய இருமுறையும் புரட்சி செய்யவெனப் புறப்பட்டு தோல்வி கண்டு, மீண்டும் புறப்பட்டுள்ள ஜே.வி.பி.யானது இன்றும், இடதுசாரி இயக்கங்களிலேயே பெருமளவு உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாகும். நிறுவனக் கட்டமைப்பு, ஒழுங்கு விதிகள், போன்ற இறுக்கமான ஒழுங்குக்குட்பட்டு இயங்கி வரும் ஜே.வி.பி, இன்றும் அதிகாரத் தரப்பினருக்கு பெரும் தலையிடியைக் கொடுத்து வரும் இயக்கமாகவும் எதற்கும் விலை போகாத கட்சியாகவும் இருந்து வருகிறது என்றால் மிகையில்லை. 1989ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் திகதி அதன் ஸ்தாபகரும் தலைவருமான றோகண விஜேவீர, ஆளும் அதிகார வெறியர்களால் கைது செய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, இறுதியில் ரகசியமாக சுடப்பட்டு, எரிக்கப்பட்டார். அத்தினத்தை வருடா வருடம் ஜே.வி.யினர் கொல்லப்பட்ட தங்களது தோழர்களின் நினைவாக அனுஷ்டித்து வருகின்றனர்.

முழுமையாக கட்டுரையை வாசிக்க….

https://www.namathumalayagam.com/2017/11/blog-post_67.html?fbclid=IwAR3NX_-JCagHtTSH5mB6lfg4yEs49N5U9dmiRMNhBy9wj0uc0MMEgVUh7lQ