1977 இனக்கலவரம்

யாழ்ப்பாணம் சென் பற்றிக் கல்லூரியில் நடந்த களியாட்டம் விழாவின் இறுதிநாளன்று அங்கே போடப்பட்ட சுபாஸ் கபே இல் சாப்பிட்ட பொலிஸ்கார்ர்கள் பணம் கொடுக்கவில்லை .இதனால் சுபாஸ் கபே உரிமையாளர் பொலிஸ்கார்ர்களை திட்டிக்கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த நகர அடிதடிக் குழுவொன்று என்ன பிரச்சினை என வினாவ அவர்களும் பொலிஸ்கார்ர்களைக் காட்டி விபரத்தைக் கூறினர்.அதில் இரு பொலிஸ்கார்ர்களை தனியான ஒதுக்குப் புறத்தில் வைத்து அந்த குழு தாக்கியது.அந்த குழுவினரை பொலிசாருக்கு நன்கு தெரியும்.

மறநாள் அவரகளுத் தேடி பொலிசார் யாழ் பஸ்நிலையத்தில் காத்து நின்றனர்.அவரகள் கலகம் விளைவிக்க விரும்பி இருந்தால் அன்றிரவே சென் பற்றிக் கல்லூரியில் தாக்கி இருக்க முடியும்.அதை தவிர்க்கவே அடுத்த நாள் அங்கே காவல் நின்றனர்.அவரகளை காணாது போகவே அவர்களுக்கு நெருக்கமான பழ வியாபாரிகளை விட்டிக் கேட்டனர்.இது ஆஸ்பத்திரி வீதியில் நடந்தது.

இதனால் ஆத்திரமுற்ற வியாபாரிகள் சிலர் பொலிசார்மீது கற்களை வீசினர்.பொலிசார் பின்வாங்கவே இது இன்னும் மோசமானது.அப்போது பொலிசார் தாக்கத் தொடங்கினர்.பின்னர் அடங்கி பஸ் நிலையம் முன்பாக நின்றனர்.

அப்போது சில ரவுடிகள் சாந்தி தியேட்டர் ஒழுங்கையிலிருந்து பழைய ரயர்களைக் கொண்டுவந்து பூபாலசிங்கம் புத்தகசாலை அருகில் போட்டுக் கொழுத்திவிட்டு மீண்டும் கற்களை வீச தொடங்கினர்.இதனிடையே சிலர் யோகேஸ்வரன் வீட்டுக்கு சென்றனர். அங்கே வண்ணை ஆனந்தன் நின்றிருக்கிறார்.அவரும் வீராவேசத்துடன் வரவே அங்கே நிலைமை மோசமாகிவிட்டது.

பொலிசார் எரியும் ரயர்களை அப்புறப்படுத்த ஒருபகுதி பூபாலசிங்கம் புத்தகசாலையை எரித்தது. பறக்குது சிங்கள பேக்கரியான சிற்றிதழ் பேக்கரியை எரித்தது.

கலக்க்கார்ர்களின் பொலிசார் விரட்ட அவர்கள் யோகேஸ்வரன் வீட்டை நோக்கி ஓடிவந்தனர்.அங்கிருந்து கல்வீச்சுத் தொடர யோகேஸ்வரன் வீடும் எரிக்கப்பட்டது.
( இதில் பங்கேற்ற ஒருவர் சொன்ன தகவல்)

2:-அன்று மதியம் கொழும்பு நோக்கி புறப்பட்ட ரயில் புங்கன்குளத்தில் வைத்து அரியாலை ரவுடிகளால் கன்ரீன் கொள்ளையடிக்கப்பட்டு அங்கு பணிபுரிந்த சிங்கள ஊழியர்களும் தாக்கப்பட்டனர்.அப்போது அங்கே அந்த ரயிலில் விடுமுறைக்காக வீடு செல்லும் சிங்களப் பொலிசாரும் இருந்தனர்.இதே கன்ரீன் மீண்டும் கொடிகாமத்தில் தாக்கப்பட்டது .பணம் ஏதும் இல்லாத்தால் மிக மோசமாக தாக்கப்பட்டனர்.

இதை அங்கே இருந்து அவதானித்த பொலிசாரே திட்டமிட்டு யாழ்,மன்னார், கொழும்புரயில்கள் ஒன்றாக வரும்வரை பொறுத்திருந்து அனுராதபுரத்தில் வைத்து தாக்கினர்.இதன் பின்னரே இனக் கலவரமானது.
இக் கலவரத்தில் என்சகோதர்ர் குடும்பமும் பாதிக்கப்பட்டது.

சிலரின் கோழைத்தனமான செயற்பாடுகள் ஒரு நாட்டையே நிர்மூலமாக்கிவிட்டது.பொலிசாரின் லஞ்சம்,ரவடிகளின் சின்னத்தனமான சேட்டைகள்.

(Vijaya Baskaran)