The Frozen Fire – உறைந்த நெருப்பு

1971 புரட்சியின் காரணமாக , அன்றைய சிறிமாவின் ஆட்சியில் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தோழர் ரோஹண விஜேவீரவும் , அவர் தம் சக தோழர்களும் 1977 இல் எந்த முன்னறிவிப்புமின்றி திடீரென சிறையிலிருந்து விடுவிக்கப்படும் காட்சியுடன் இப்படம் தொடங்குகிறது. 1989 இல் தலைமறைவாக இருந்த நிலையில் இலங்கைப் படையினரால் கைது செய்யப்படும் காலம் வரையான கிட்டத்தட்ட 13 வருட ஜேவிபி தலைமையினதும் , அது நடாத்திய அரசியலினதும் வரலாற்றை பதிவு செய்வதே இப்படத்தின் நோக்கம் எனலாம்.