இதற்கான வாய்ப்புகள் உள்ளுர் ஆட்சி சபைகளிடம் இருந்தாலும் அதிகாரம் என்ற வகையில் அவர்களுக்கு சாத்தியமான உயர் அடுக்கு அதிகார சபை மகாண சபையே.
சிறுபான்மை மக்களின் பிரதிநிதிகளுக்கு பெரும்பான்மையாக நின்று குரல் கொடுக்கும் வாய்ப்புகள் பாராளுமன்றத்தில் நிச்சயம் இல்லை என்பது புரிந்து கொள்ளப்படக் கூடியது.
பெரும்பான்மை சமூகத்தின் எதிர் கட்சிகளும் தமிழர், முஸலீம், மலையகத்தவர் என்றாக பலரும் ஆளும் அரசிற்கு எதிராக ஓரணியில் நின்று அரசை எதிர்கின்றார்கள் என்ற பொதுப் போக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதை தேசிய மக்கள் சக்தி அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
இதற்கான தெளிவு படுத்தல்களை தேசிய மக்கள் சக்தியும் சிறப்பாக தமிழ் பேசும் தரப்பினரும் சந்தித்து உரையாடல்களை நடாத்துவதன் மூலம் செய்தாக வேண்டும்.
இதற்கான அணுகு முறைகளை இருதரப்பும் இணைந்து செயற்படுதல் முன்பு இலங்கையை ஆண்ட அரசுகளை விட இநத அரசுடன் அதிகம் செய்தாக வேண்டும்.
சிறப்பாக ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசு இதற்கான கதவுகளை அகலத் திறந்தாக வேண்டும்.
தெற்கில் அதிகம் பாதாளக் குழுக்கள், போதைவஸ்து ஒழிப்பு, கடந்த ஆட்சிக்காலங்களில் நடைபெற்ற ஊழல் மோசடி பற்றிய விசாரணைகள் என்றான செயற்பாடுகளில் அரசியல்வாதிகளின் கவனம் அதிகம் ஈர்க்கப்பட்டிருக்கின்றது.
வடக்கு கிழக்கு என்றான தமிழ் பேசும் சிறுபான்மை மக்கள் அதிகம் வாழும் பிரதேசங்களில் அரசியல்வாதிகளின் கவனம் மாகாணசபைத் தேர்தல் என்றாக கவனம் அதிகம் திரும்பியுள்ளது.
ஆனால் ஆளும் தேசிய மக்கள் சக்தி ஊழல் ஒழிப்பு பாதாளக் குழவை கட்டிற்குள் கொண்டு வந்து அதனை இல்லாமல் செய்தல் கூடவே போதைவஸ்தை நாட்டில் இருந்து முழுமையாக இல்லாமல் செய்தல் என்றாக தனது கவனத்தை செலுத்த வேண்டிய நிலையிற்கும் தள்ளப்பட்டும் இருக்கின்றது.
நாட்டின் பொருளாதாராத்தை கட்டியமைத்தல் அது சார்ந்த உற்பத்தி வருமானப் பெருக்கம் என்றாக தனது கவனத்தை அதிகம் செலுத்த முடியாது அது தள்ளப்பட்டும் இருக்கின்றது.
அல்லது இவற்றிற்கு அரசு எடுக்கும் முயற்சிகளை அதிகம் முன்னிலைக்கு கொண்டு வந்து மக்கள் மத்தியில் இதனை தகவல்களாகவோ அல்லது விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதாகவே செய்ய முடியாமல் தத்தளிக்கின்றது.
கூடவே கடன் வழங்கும் நாடுகளின் வட்டியைச் செலுத்துதல் கடனைத் திருப்பிச் செலுத்துதல் அதற்கான நிதியினை ஐஎம்எவ் இடம் இருந்து தொடர்ந்து பெறுதல் என்றாக தன்னை அமைத்துக் கொள்ளல் என்ற பொறியிற்குள்ளும் அகப்பட்டும் இருக்கின்றது.
சிங்கள அரசியல்வாதிகளும் தமிழ் அரசியல்வாதிகளும் தமது அரசியல் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தியிடம் இழுந்து தமக்கான அடையாளங்கள் அதிகாரங்களை சலுகைகளை இழந்து வாழும் வாழ்கையிற்குள் அதிகம் தள்ளப்பட்டும் இருக்கின்றனர்.
கடந்த 75 ஆண்டகளுக்கு மேலாக மக்கள் பிரிதிநிதிகள் என்றாக தமக்கான சௌகரியங்களை அனுபவித்து வந்த அரசியல் வாழ்வு கேள்விக்குறியாகி உள்ள நிலமை என்பது அந்த பதவிகள் அதிகாரம் என்றாக இருந்தவர்கள் அவற்றில் இருந்து அறுத்து எறியப்பட்ட சூழலில் வாழுதல் என்பது அவர்களுக்கு மிகவும் கஸ்டமான நிலமைதான்…?
இதுவரை வகித்த பதவிகளால் கிடைத்து தொடர் சலுகைகளையும் புதிய அரசு நீக்கி அல்லது மட்டுப்படுத்திய நிலையில் உழைத்து வாழவேண்டி நிலை என்பது அரசியலில் வாழ்வைத் தொடர்ந்தவர்களுக்கு மிகவும் கடினமான சூழலை ஏற்படுத்தித்தான் உள்ளது.
கூடவே கடந்த கால அரசியல் வாழ்வில் அதிகார வாழ்வில் சம்மந்தப்பட்ட ஊழல் நிதி மோசடி அதிகார துஸ்பிரயோகம் என்றான மக்கள் விரோத செயற்பாடுகளின் அடிப்படையில் விசாரணைக்கும்… நீதி மன்ற அழைப்பாணைக்கும் கைதிற்குள் உள்ளாகலாம் என்ற பயப் பிராந்தியும் தமிழ் பேசும் அரசியல் வாதிகள் சிங்களம் பேசும் அரசியல்வாதிகள் என்றாக கடந்த காலங்களில் அதிகாரத்தில் கோலோச்சிய பலரையும் துரத்திக் கொண்டும் இருக்கின்றது.
இதற்குள் பாதாள உலகத்தினர் போதைவஸ்துக் கடத்தல் காரர்கள் பலரும் ஏதோ ஒரு வகையில் சில அரசியலவாதிகளுடனான தொடர்பில் இருந்தார்கள் என்று வரும் ஆதாரங்கள் பல அரசியல்வாதிகளின் நித்திரையைக் குழப்பியும் உள்ளது.
எமக்கும் விசாணையிற்காக அழைப்பாணை வரலாம் என்ற பதட்டம் இந்த அரசியல்வாதிகள் பலரிடமும் ஏற்பட்டும் இருக்கின்றது.
இதில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வருதல் ஓரளவிற்கு உதவிகரமாக இருக்கலாம் என்பதாக அவர்களின் நகர்ச்சிகளும் தொடங்கிவிட்டன.
இதற்காக அவர்கள் கட்சி பேதமற்று இணையவும் தயாராகி வருகின்றனர்.
அடுத்த பாராளுமன்றத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் என்பன நடைபெறுவதற்கு இன்னும் வருடங்கள் எடுக்கும் என்ற சூழலில் உள்ளுர் ஆட்சி சபைகளில் அவர்களுக்கு கிடைத்து சற்று மேம்பட்ட வெற்றி மகாணசபையிலும் ஏற்படுத்த வேண்டும் என்றான லல எண்ணங்களை அவர்கள் மத்தியல் ஏற்படுத்தியும் இருக்கின்றது.
பாராளுமன்றம் என்பதற்கு அடுத்த நிலையில் அதிக அதிகாரம் கொண்ட நிர்வாக ஆட்சி அதிகாரமாக மாகாண சபை காணப்படும் நிலையில் இச்சபைகளில் நடைபெறும் தேர்தல்களில் தம்மை தக்க வைத்துக் கொள்ளலாம் என்றான அவர்களின் சிந்தனை அதிகம் மேலோங்கியும் காணப்படுவது இயல்புதான்.
இலங்கை அரசியல் அமைப்பு யாப்பில் இருக்கும் மகாண சபை முறமையும் அது சார்ந்த தேர்தல்களும் ஒரு ஜனநாயக பண்பிற்கான உரிமையிற்கான விடயம்தான்.
இதற்கூடாக மக்களுக்கான சேவைகளைச் செய்யலாம் என்பதும் சரியானதுதான்
ஆனால் கடந்த கால மகாணசபை அனுபவங்கள் கடந்த கால மத்திய அரசு அதிகாரங்கள் போலவே வீணடிக்கப்பட்ட நிலையில் மகாணசபைத் தேர்தல்கள் தேவைதானா என்ற நம்பிக்கையீனங்கள் மக்கள் மத்தியல் அதிகம் தற்போது உள்ளது.
இது அதிகம் வடக்கு கிழக்கு என்றான மாகாணங்களின் மக்கள் மத்தியல் அதீதமாக காணப்படுகின்றது.
ஆதனை கடந்த ஜனாதிபதித் பாராளுமன்றத தேர்தல்கள் வெளிப்படுத்தியும் இருந்தன.
உள்ளுர ஆட்சி சபை தேர்தலிலும் சற்று குறைவாக இருந்தாலும் அது வெளிப்பட்டுத்தான் இருந்தது
இந் நிலையில் நாட்டில் உள்ள பொருளாதார சிக்கல் நிலையில் தேர்தல் என்று பெரும் தொகையான நிதியை செலவிட வேண்டுமா…? என்ற எண்ணப் போக்கும் நிலவுகின்றது.
ஆனால் இலங்கை போன்ற ஒரு நாட்டில் அதிகாரப் பரவலாக்கம் என்றான ஆளுமையான மாகாண சபைகளின் இயக்கம்தான் மொத்த நாட்டையும் இன்னும் வேகமாக முன்னோக்கி நகர்த்தும் என்பது உணரப்பட வேண்டும்.
அந்த வகையில் மாகாணசபைத் தேர்தல் அவசியமானது.
அதுதான் ஜனநாயக மாண்பும் கூட.
ஆனால் அதனை உடன் நடத்துவதில் என்ன பிரச்சனை உள்ளது என்பதை பார்ப்போம் ஆயின்…
ஆளும் தேசிய மக்கள் சக்தியில் பிரதான பங்கு வகிக்கும் ஜேவிபி இந்த மாகாணசரபயில் நம்பிக்கையற்றவர்கள் என்பதான அவர்களின் கடந்த கால அரசியல் அடிப்படையில் சந்தேகத்துடன் அவர்களை தற்போதும் பார்ப்பது எவ்வளவு தூரம் உண்மை என்பது 2026 ம் ஆண்டில் மாகாணசபைத் தேர்தலை அவர்கள் அரசியல் அமைப்புச் சட்டதிற்கு மதிபளித்து செயற்படுவதை வைத்தே நாம் உறுதியான கருத்தை தெரிக்க முடியும்.
ஆனால் உள்ளக புற நிலை அழுத்தங்கள் அவர்கள் 2026 இல் தேர்தலை நடாத்த விருப்பம் உள்ளதாகவே காட்டி வருகின்றனர்.
ஆனால் உடனடியாக மாகாணசபைத் தேர்தலை நடத்துவதில் என்ன பிரச்சனைகள் உள்ளன என்று பார்த்தால்….
அது தற்போதைய நிலையில் மாகாண சபைத் தேர்தலை எவ்வாறு நடாத்துவது என்று மதில் மேல் நிற்கும் இரு வகையான மாகாண சபைத் தேர்தல் சட்டத்தைத் திருத்த வேண்டும்.
முன்னர் 100% விகிதாசார முறையில் அமைந்த தேர்தல் முறைமையை கலப்பு முறையில் (விகிதாசாரம் + தொகுதி) நடாத்த பாராளுமன்றில் இணக்கம் காணப்பட்டாலும் அதற்கு தொகுதிகளை மீள்வரைபு செய்வதற்கு நியமிக்கப்பட்ட எல்லை மீள் நிர்ணய (Delimitation) குழு வின் அறிக்கை பாராளுமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டதால் இப்போது எந்த முறையில் தேர்தல் நடாத்துவது எனும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
அதேநேரம், இரண்டு முறைகளில் ஏதேனும் ஒன்றை பாராளுமன்றில் நிறைவேற்ற ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசால் முடியும்.
ஆதற்கு அவர்களிடம் 2/3 பெரும்பான்மை பாராளுமன்றத்தில் உண்டு.
கூடவே தமிழரசு கட்சி சார்பில் விகிதாசார(ஏற்கனவே இருந்தது போல்) முறையில் தேர்தலை நடாத்துமாறு கோரி தனிநபர் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள போதும் அது இன்னும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
தேசிய மக்கள் சக்தி தேர்தல் முறமையை மாற்றி அமைத்தால் அது தமக்கான தேர்தல் வெற்றி அளவை மாற்றி அமைக்கும் என்ற உணர்வுகளில் இருந்து தேர்தல் முறமையை மாற்றி அமைப்பதில் தயக்கம் காட்டுவதாக குற்றச் சாட்டிற்குள் உள்ளாகியும் இருக்கின்றது.
மாகாண சபை ஊடான அதிகார பகிர்வு அதன் உரையாடல்கள் எல்லாம் தமிழர் தரப்பில் மாத்திரமே…? என்றாக உணரப்பட்டாலும் தென்னிலங்கை சிங்களப் பகுதியிலும் தேசிய மக்கள் சக்தியின் பிரிதிநிதித்துவம் விகிதாசார அடிப்படையில் பகிரப்பட்டு குறைவடையலாம் என்ற எச்சரிக்கை உணர்வு அரசிடம் உண்டு.
மாகாண சபைத தேர்தல் சிங்கள மக்களை விட தமிழ் மக்களுக்கு அதிகம் முக்கியமானது.
இன்னும் சொல்லப் போனால் பாராளுமன்றத்தில் பலத்தின் அடிப்படையில் மக்கள் தொகைப் பரம்பலில் அதிகம் ஆளுமை பெறமுடியாத சமூகங்களான தமிழ் மக்கள், முஸ்லீம் மக்கள், மலயக மக்கள் தமது ஆளுமைகளை தேர்தல் பிரநிதித்துவம் மூலம் பலமாக நின்று செயற்படும் தளமாக இருக்கும் அதிகார அடுக்குளில் உயர் அடுக்காக உள்ளது மாகாண சபைதான்.
அதனால் அவர்களின் குரலை அதிகம் உயர்த்திப் பிடிக்கும் வாய்ப்புகள் உள்ள சபையான மாகாண சபையை அந்த ஆட்சியை அவர்கள் பிரதானப்படுத்திப் பார்க்கின்றனர்.
இதில் உள்ள யதார்த்த நியாயத் தன்மை இங்கு முக்கியமானது.
இது தமிழ், முஸ்லீம், மலைய மக்கள் என்றான தமிழ் பேசும் சிறுபான்மை மக்கள் அனைவருக்கும் சற்று மேன்மையான உணர்வுகளை அவர்களிடம் ஏற்படுத்துவதும் இயல்பானது.
இதில் சிங்கள மக்களை விட அவர்கள் சற்று மேம்பட்ட உணர்வுடன் எதிர்பார்ப்புடன் மாகாணசபைத் தேர்தல்களை எதிர்பார்த்துள்ளனர்.
இதன் அடிப்படையிலும் தேர்தலை உடன் நடாத்துமாறு சிறுபான்மை மக்கள் கோருவதை தேசிய மக்கள் சக்கி அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
‘குரல் அற்றவர்’களின் குரலாக ஒலிக்க உயர்ந்த அதிகார அடுக்காக அவர்களிடம் உள்ளது மாகாண சபைகள்தான்.
அதனால் மகாணசபைத் தேர்தல்களை நடாத்து என்று கோசம் தமிழ் பேசும் மக்கள் தரப்பில் இருந்து சற்று அழுத்தமாக வெளிவருவது நியாமானது… அது உணரப்பட வேண்டியதும் கூட.
முழு இலங்கையிற்கும்தான் 13 திருத்தச் சட்டத்தால் கிடைக்கப் பெற்ற மகாணசபை ஆட்சி முறை என்றாலும்,
இந்த 13 வது திருத்தத் சட்டத்திற்கு தமிழ் பேசும் மக்கள் தமது உரிமையை நிலைநாட்ட நடாத்திய போராட்டங்கள் அது அகிம்சை ஆயுதப் போராட்டம் என்ற இரண்டும் முக்கிய காரணங்கள் என்பது இங்கு முழு இலங்கை மக்களாலும் உணரப்பட வேண்டும். சிறப்பாக சிங்கள மக்களால்.
அதனால்தான் மாகாண அரசு என்பது தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு என்பதாகவும் பலராலும் பார்க்கப்படுதற்கான முக்கிய காரணமும் ஆகும்.
இலங்கையில் நடைபெற்ற ஆயுதப் போராட்டம் உண்மையில் முழு இலங்கையிற்குமான அதிகாரப் பரவலாக்கம் என்றான மகாண சபை என்றான ஒரு முன்னோககிய நகர்வை ஏற்படுத்தி இருக்கின்றது.
அந்த வகையில் தமிழ் பேசும் மக்களுக்கான போராட்டங்களும் முழு இலங்கையருக்குமான வெற்றிகளை தேடித் தந்திருக்கின்றது என்பதை அதிகாரப் பரவலாக்கம் என்பதை உண்மையான அர்த்தத்துடன் பார்க்கும் முழு இலங்கை மக்களும் சிறப்பாக சிங்கள மக்கள் உணர்ந்தாக வேண்டும்.
கடைக் கோடி சிங்கள மகனும் அதிகாரத்தில் பங்கு பற்றுவதற்கு பாராளுமன்றத்திற்கு அடுத்த நிலையில் உள்ள ஒரு அதிகார அலகில் பங்கு பற்றும் வாய்பை ஏற்படுத்திய சட்டத் திருத்த்திற்கு தமிழ் பேசும் மக்களின் போராட்டம் ஒரு பிரதான பங்கை வகித்து இருகின்றது.
இந்த வகையில் முழு இலங்கை மக்களுக்கும், தமிழ் பேசும் மக்களின் உயர்நிலை அதிகார அலகில் பலமாக நின்று உரிமைகளை தொடர்ந்தும் பெறுவதற்கும் மாகாணபை ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியும் இருக்கின்றது.
இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்தை ஏற்று சத்தியப் பிரமாணம் செய்த ஜனாதிபதி, அமைச்சரவை, பாராளுமன்றம் என்றாக யாவரும் அரசியல் யாப்பில் உள்ள மாகாண சபையை சட்டத்தின் அடிப்படையில் இயங்க வைப்பதற்கு தேர்தல்களை உடனடியாக நடாத்துவதற்குரிய சாத்தியப்பாடுகளை உருவாக்கி மக்கள் மனதில் நம்பிக்கை மேலும் உறுதியாக்க வேண்டும்.