முன்னாள் பாதுகாப்பு செயலாளர் நாராயணன் மீதான தாக்குதல் மோசமானது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

கள்ளமௌனங்கள் கலையட்டும்
“இந்தியாவின் இலங்கை அகதிகள் எதிர்காலம”; எனும் தலைப்பில் 4.11.15 அன்று அரசியல் மற்றும் பொது கொள்கைகளுக்கான தி இந்து மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கு சென்னை ஆழ்வார்பேட்டை மியூசிக் அக்கடமியில் நடைபெற்றது.இதில் இந்த நிகழ்வானது இந்து குழுமத் தலைவர் ராம் அவர்கள் தரைமையில் நடைபெற்றது.இதில் ஈழ ஏதியிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் பொருளாளர் சந்திரஹாசன் ஐயா,”பிரண்ட் லைன”; பத்திரிகை மூத்த துணை ஆசிரியர் ஆர்.கே.ராதாகிரு~;ணன் முன்னாள் தேசிய பாதுககாப்பு ஆலோசகர் நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.


நாராயணன் அவர்கள் தனது உரையை முடித்துவிட்டு மேடையில் இருந்து இறங்கிச் செல்கையில் நபர் ஒருவர் அவரை செருப்பால் அடித்தாhக செய்திகள் வெளிவந்துள்ளது.தாக்கிய நபர் அறந்தாங்கியைச் சேர்ந்த பிரபாகரன் என்றும் தெரியவந்துள்ளது.
இவர் சிறிது காலம் மலேசியாவில் வேலைபார்த்ததாகவும் அவ்வப்போது இலங்கை தமிழர்களுக்கான போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளதாகவும் கைதான அந்த நபர் விசாரனையில் கூறியுள்ளாh
கூட்டத்தில் கலந்துகொள்பவர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்யும் படி அறிவிக்கபட்டடிருந்தது. சிலர் போலிப்பெயர்களை பதிவு செய்து உள்ளே நுழைந்துள்ளனர் அப்படி சென்றவர்களில் ஒருவர்தான் இந்த பிரபாகரன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இப்படி தாக்குதல் நடத்துபவர்கள் எதை மையமாக வைத்துச் செயல்படுகிறார்கள் என்றால் அது ஈழத் தமிழர் பிரச்சினையாகவே உள்ளது.இவர்களின் வன்முறை ஆட்டம் ஈழத் தமிழர்களை இதுவரை வாழவைத்துள்ளதா? ஏன்பதை ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்கவேண்டியுள்ளது.இவர்கள் ஈழத் தமிழ் இனத்துக்கு கிடைக்கவேண்டியதை இல்லாமல் செய்த வரலாறுகளே நம் கண்முன் நிற்கிறது.குறிப்பாக இந்தய-இலங்கை ஒப்பந்தம் அதன் பின்னர் ராஜீவ் காந்தி படுகொலையை கூறமுடியும்.

தற்போது இலங்கையில் சுமுகமான சூழல நிலவுவதால் இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் தொடர்பாக அவர்கள் வாழ்வாதாரம் அகதிக்குழங்தைகளின் எதிர்காலம் அவர்களது கல்வி தொடர்பாக ஆராய வேண்டியது அவசியமாக உள்ளது.

அவர்களது விரும்பம் எதுவோ அதனை கண்டறிந்து அதற்கான வழிமுறைகளைத் தேடுவது அவசியமாக உள்ளது.இதனை ஆராய்ந்து அதற்கான வழிமுறைகளைத் தேடுவதில் ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் பொருளாளர் சந்திரஹாசன் ஐயா அவர்களின் பங்கும்,பணியும் அளப்பரியது,உலகறிந்தது.
அப்படியான ஒரு கருந்தரங்கில் நடைபெற்ற தாக்குதல் சம்பவமானது இலங்கைத் தமிழர்களாகிய எமக்கே பாதிப்பகளை ஏற்படுத்தும் எமக்காக நேர்மையான சாத்தியமான வழிமுறைகளைத்தேடும் சக்திகளிடையே அச்சத்தை ஏற்படுத்தும்.

இந்த வன்முறையாளர்களை கண்டு நாம் அஞ்சத்தேவையில்லை ஆனால் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியமாக உள்ளது.இந்தச் சம்பவம் மேலும் எமது எச்சரிக்கை உணர்வை அதிகப்படுத்த வேண்டும்.

உலகம் பூராகவும் பரவிக்கிடக்கும் நம்மிடையே இப்படியான சிந்தனை உள்ளவர்கள் சிலர் காளானகள் போல் முளைத்துள்ளார்கள் இவர்கள் தங்களது கருத்துக்களை திணிப்பதில் குறியாக இருக்கிறார்கள் இருந்துவிட்டுபோகட்டும் ஆனால் மாற்றுச் சிந்தனை உள்ளவர்களையும் எமக்காக நேர்மையான சாத்தியமான வழிகள் பற்றி சிந்திப்பவர்களையும் தாக்க நினைப்பது எப்படி நியாயமாகும்
இப்படியான வன்முறை நிழழ்வகளை நாம் பாராமுகமாக இருந்து கள்ளமௌனம் காப்பதும் ஆபத்தானது இவர்களை கண்டிக்க வேண்டும்.
(அருள்.விஜயன்)