தோழர்.தா.பாண்டியன் ஒருநாள் என்னை நடிகர் ராஜேஷ் அவர்களிடம் அறிமுகம் செய்துவைத்தார்.
தோழர்.தா.பா.வின் வேண்டுகோளின்படி தி.நகர் நடேசன் பார்க் அருகே இருந்த அவர் இல்லத்திற்கு சென்று சந்தித்திருக்கிறேன் !
என்னுடன் மிகவும் பாசத்துடன் பழகுவார்.
கவிஞர்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சிலைத்திறப்பு மற்றும் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மலர்( கவிஞர் கே.ஜீவபாரதி பொறுப்பு ) வெளியிட்டு விழாவிற்கு முன்னாள் அமைச்சர் திரு. எஸ்.டி. சோமசுந்தரம்,தா.பாண்டியன் நடிகர்.ராஜேஷ்,ஆகியோருடன் 4பேர் மட்டும் பயணிக்கும் தனி பெட்டியில் இவர்களுடன் நானும் ரயிலில் பயணித்தேன்!
அன்று இரவு முழுவதும் சுவாரஸ்யமான அரசியல் விவாதங்கள் நடைப்பெற்று வந்ததை இன்னும் பசுமையான நினைவுகளாக
இருக்கின்றன.!
ஜனசக்தி கிரியேஷன் தயாரிப்பில் உருவான சங்கநாதம் திரைப்பட சூட்டிங்கிற்கு சென்னை செங்குன்றத்திற்கு பல முறை திரு.ராஜேஷ் அவர்களை அழைத்து சென்றுள்ளேன். !
சென்னை நந்தனம் சேமியர்ஸ் சாலையில் தன்னுடைய ரியல்ஸ்டேட் அலுவலகம் முதல் மாடியில் வைத்திருந்தார் ! சென்னை இருங்காட்டுகோட்டையில் வீட்டுமனைகள் லே அவுட்கள் விற்பனைக்காக போட்டிருந்தார்! தன்னுடன் இருக்கும்படி வலியுறுத்த நான் மறுத்துவிட்டேன். !
சென்னை,டெல்லி,பாம்பே போன்ற இடங்களில் நடைப்பெற்ற EPRLF செயல் நாயகம் தோழர்.க.பத்மநாபாவுக்கும் , EPRLF அமைப்புக்கும் ஆதரவான கருத்தரங்குகளில் தொடர்ந்து கலந்துகொண்டார்.
இதில் தோழர்.தா.பாண்டியன், தோழர்.மொகித்சென், துக்களக் ஆசிரியர் சோ.ராமசாமி, காங்கிரஸ் தலைவர். வாழப்பாடி கூ. ராமமூர்த்தி, சுப்பிரமணிய சுவாமி, ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை இந்து மாக்கடல் அமைதிக்கான சர்வதேச அமைப்பு(INTER NATIONAL MOVMENT FOR PEACE IN INDIAN OCEAN (IMPIO) )சார்பில் அமைப்பின் செயலாளராக இருந்த நானும் , தோழர்.தலித் கே.சண்முகம்,தோழர். S.பாஸ்கரன், இணைந்து ஏற்ப்பாடுகள் செய்து வந்தோம்.!
பலமுறை ஆந்திரா மாநிலத்தின் புரட்சி நடிகர். மாதல.ரங்க ராவ் அவர்களுடன் அரசியல் விவாதங்கள் சென்னை டிரைவிங் உட்லண்ட்ஸ் ஒட்டலில் நடைப்பெற்ற நிகழ்வுகளில் நானும் இருந்தேன் என்பது மறக்க முடியாதது !
தோழர்.மாதல.ரங்க ராவ் அவர்களின் நினைவேந்தல் கூட்டத்திற்கு தோழர்கள் ஜா.பூபாலன், திருப்போருர் வே.ஜெகதீசன், மோ.ஜேம்ஸ், மு.மணிமுடி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தோம்!
அதில் தோழர்கள் தா.பாண்டியன்,நடிகர்.ராஜேஷ்,மாதலாவின் மகனும் நடிகரும் தயாரிப்பாளருமான Dr.மாதலா . ரவி ஆகியோர் கலந்துகொண்டனர் !
நடிகர். ராஜேஷ் அவர்களின் துணைவியார் மாரடைப்பால் காலமானார்.
நானும் தோழர்.தா.பாண்டியனும் கலந்துகொண்டோம் .
குழந்தையைப்போல அவர் அழுதது நடிகர்.ராஜேஷ் மனைவின் மீது வைத்த அன்பு வெளிப்பட்டது.
தி.நகரில் இருக்கும்வரை நாள்தோரும் சென்னை கடற்கரையில் நடைபயிற்சி செய்வார். சில நேரங்களில் திரு.ராஜேஷ் அவர்களுடன் நானும் இணைந்துகொள்வேன்
இன்னும் எவ்வளவோ இருக்கு !
திரு. நடிகர்.ராஜேஷ் அவர்களின் இழப்பு அனைவருக்குமானது .!
கீழே உள்ள படம் !
தோழர்.மாதல.ரங்கா ராவ் அவர்களின் நினைவேந்தல் கூட்டத்தில் …
வழக்கறிஞர். தோழியர்.கே.சாந்தகுமாரி, ஐ.உசேன், மாதலாவின் மகன் மாதலா ரவி , நடிகர்.ராஜேஷ், தோழர்.ஜா.பூபாலன் ,தோழர்.தா.பாண்டியன் .