பறவைகளின் எச்சத்தால் வாழ்ந்த தேசம் இன்று?

மக்கள் மீன் பிடியை நம்பி வாழ்ந்தார்கள்.காலப்போக்கில் போஸ்பேற் என்னும் மூலப்பொருட்கள் மூலம் செல்வ வளம் கொட்டியது.எப்படி அங்கே இந்த வளம் உருவானது? கடல் சூழ்ந்த இந்த தீவில் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் இருந்து நீண்ட தூரம் பறந்து செல்லும் பறவைகள், மற்றும் கடலில் மீன் வேட்டையாடும் பறவைகளின் ஒரு இளைப்பாறும் இடைத்தங்கல் நிலையமாக இந்த தீவு காணப்பட்டது.

பெருமளவான இந்த பறவைகளின் எச்சம் பாறை இடுக்குகளில் சென்றடைந்துநுண்ணுயிர் தாக்கத்தால் காலப்போக்கில் பொஸ்பேற் மூலப்பொருளாக மாற்றம் அடைந்தது.இந்த நாடு மீன் பிடியை கை விட்டு. பொஸ்பேற் மூலப்பொருளை தொன் கணக்காக ஏற்றுமதி செய்ய தொடங்கியது.பெரிய பிரித்தானியா ஒரு ஒப்பந்தத்தின் மூலம் முழு வளத்தையும் எடுத்து கொண்டது அல்லது சுரண்டி கொண்டது.

ஆனால் இந்த நாடு செல்வந்த நாடாக முன்னேறியது. மீன் பிடி, விவசாயம் முற்றிலும் இல்லாமல் போனது.காரணம் பொஸ்பேற் மூலப்பொருள் காரணமாக குறிப்பிட்டளவு தூரம் கடல் வாழ் உயிரினங்கள் இல்லாமல் போய் விட்டது. அதிகளவு பொஸ்பேற் தாக்கத்தால் மண் வளம் தன்மை இழந்து போய்விட்டது.இங்கு வாழும் மக்கள் உணவுக்காக வேறு நாடுகளில் இருந்து உறை நிலை உணவு இறக்குமதியை நம்பி வாழ்கின்றனர்.

இங்கே வாழும் மக்கள் ஐம்பது வயதை தாண்டி வாழ்வதில்லை காரணம் இவர்கள் உட்கொள்ளும் இந்த உறை நிலை உணவு பழக்க வழக்கங்கள் காரணமாக உடற் பருமன் ஏனைய நோய்கள் காரணமாகவும் இந்த பொஸ்பேற் நிலம் கடந்து வரும் காற்று காரணமாக இறந்து போகிறார்கள். இப்போது இந்த நாட்டை அவுஸ்திரேலியா தனது கைப்பாவையாக பயன்படுத்துகிறது ஒப்பந்தம் மூலம்.அதாவது புலம்பெயர்வாளர்களை தடுத்து வைக்கும் இடைத்தங்கல் முகாமாக பயன்படுத்துகிறது.

இந்த நாடு திவாலாகி விட்டது செல்வத்தில் மிதந்த நாடு நாடு திவாலாவதை தடுப்பதற்காக Paas port விற்பனை. கறுப்பு பணத்தை தூய்மையாக்குதல் போன்ற செயல்களில் இறங்கியும் மீள முடியவில்லை.

இப்போது அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் எடு பிடி நாடாக உள்ளது. அதுதான் நாங்கள் அடிக்கடி செய்திகளில் அறிந்து கொள்ளும் நவ்ரு தீவு