மாகாணசபை தேர்தல்கள்

முதலாவதும் இறுதியுமான இணைந்த வடகிழக்கு மாகாணசபை தேர்தல் 1988 நவம்பர் 19 ,ல் இலங்கையில் புதிதாக உருவாக்கப்பட்ட வடகிழக்கு மாகாணசபைக்காக தேர்தல் நடைபெற்றது.இந்ததேர்தலை தமிழீழவிடுதலைப்புலிகள், ஏற்கவில்லை முழுமையாக பகிஷ்கரிக்குமாறு கட்டளையிட்டனர் அதனால் தமிழர் விடுதலைக்கூட்டணி, ரெலோ, புளட்,என்பன தேர்தலில் போட்டியிடவில்லை.தமிழ் கட்சிகளில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலைமுன்னணி(EPRLF) ஈழம் தேசிய ஜனநாய விடுதலை முன்னணி(ENDLF) மற்றும் ஶ்ரீலங்கா முஷ்லிம் காங்கிரஷ், ஐக்கியதேசிய கட்சி ஆகிய நான்கு கட்சிகள் மட்டுமே இந்திய இராணுவத்தினரின் பாதுகாப்பு துணையுடன் போட்டியிட்டன. அந்த தேர்தல் இந்தியப்பெயினரின் தலையீட்டுடன் இடம்பெற்றது.இதில் வடமாகாணத்தில் ஈழமக்கள் விடுதலை முன்னணி பல இடங்களிலும், ஈழம் தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி குறிப்பிட ஒரிரு இடங்களிலும் மனுதாக்கல் செய்தபோதும் போட்டியின்றி உறுப்பினர்கள் தெரிவானார்கள்.அங்கு தெரிவான 36, உறுப்பினர்களில் 12, உறுப்பினர்கள் ஈழம் தேசிய ஜனநாயக விடுதலை முன்னணிக்கு வழங்கப்பட்டது. ஏனைய 24, ஆசனங்களையும் ஈபிஆர்எல்எவ் பங்கிட்டு பெற்றுக்கொண்டனர்.*யாழ்ப்பாண மாவட்டம்போட்டி எதுவும் இல்லாததால் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அனைத்து 19 இடங்களையும் கைப்பற்றியது.*கிளிநொச்சி மாவட்டம்போட்டி எதுவும் இல்லாததால் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அனைத்து 3 இடங்களையும் கைப்பற்றியது.*மன்னார் மாவட்டம்போட்டி எதுவும் இல்லாததால் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அனைத்து 5 இடங்களையும் கைப்பற்றியது.*முல்லைத்தீவு மாவட்டம்போட்டி எதுவும் இல்லாததால் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அனைத்து 5 இடங்களையும் கைப்பற்றியது.*வவுனியா மாவட்டம்போட்டி எதுவும் இல்லாததால் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அனைத்து 4 இடங்களையும் கைப்பற்றியது.

தேர்ததல் வாக்கெடுப்பு போட்டி கிழக்கு மாகாணத்தில் மட்டுமே இந்தியப்படையினரின் துணையுடன் நடந்தன.அதில்..*மட்டக்களப்பு மாவட்டம்:ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி 126,946, வாக்குகளை பெற்று 08, ஆசனங்களும்,ஶ்ரீலங்கா முஷ்லிம் காங்கிரஷ் 42,100, வாக்குகளை பெற்று 03, ஆசனங்களையும்,ஐக்கியதேசிய கட்சி 756, வாக்குகள் கிடைத்தும் ஆசனங்கள் இல்லை.*திருகோணமலை மாவட்டம்:ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி 42,530, வாக்குகளை பெற்று 05, ஆசனங்களும்,ஶ்ரீலங்கா முஷ்லிம் காங்கிரஷ் 35,502, வாக்குகளை பெற்று 05, ஆசனங்களும்,*அம்பாறை மாவட்டம்:ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி 90,436 வாக்குகளை பெற்று 09, ஆசனங்களும்ஶ்ரீலங்கா முஷ்லிம் காங்கிரஷ் 45,754, வாக்குகளை பெற்று 04, ஆசனங்களும் ஐக்கியதேசிய்கட்சி 7,300, வாக்குகளை பெற்று 01, ஆசனமும் கிடைத்தன.கிழக்கில் 35, ஆசனங்களும், வடக்கில் 36, ஆசனங்களுமாக 71, ஆசனங்களுடன் திருகோணமலையில் முதலாவது மாகாணசபை இடம்பெற்றது.1988 டிசம்பர் 10 இல் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் அ. வரதராசப் பெருமாள் வடகிழக்கு மாகாணசபையின் முதலாவது முதலமைச்சரானார்.தொடர்ந்து மாகாணசபை இந்தியப்படை இன்றி இயங்க முடியவில்லை இதனால்1990, மார்ச்சு 01 அன்று, இந்திய அமைதி காக்கும் படையினர் இலங்கையை விட்டுப் புறப்படும் தறுவாயில், வடகிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் அ. வரதராஜப் பெருமாள் திருகோணமலை மாகாணசபைக் கூட்டத்தில் அவச அவசர மாக தமிழீழத்தைப்பிரகடனப்படுத்தி விட்டு இந்தியஅமைதிப் படையினருடன் சேர்ந்து இந்தியா சென்றார். இணைந்த வடகிழக்கு மாகாணசபையின் ஆயுள்காலம் 01, வருடமும்,04.மாதங்கங்களும், 12, நாட்கள் மட்டுமே செயல்பட்டது.இதனை அடுத்து அப்போதைய ஜனாதிபதி ஆர். பிரேமதாசா மாகாணசபையைக் கலைத்து, மத்திய அரசின் நேரடி கண்காணிப்பில் ஆட்சியைக் கொண்டு வந்தார்.2006, யூலை,14,ல், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்புக்கு எதிராக சிங்களத் தேசியவாத அரசியல் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி,(JVP) தற்போதய தேசிய மக்கள் சக்தி வட, (NPP) கிழக்கு மாகாணங்களைப் பிரிக்க உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. அந்த வழக்கின் தீர்ப்பு 2006 அக்டோபர் 16,ல் வடகிழக்கு இணைப்பு செல்லுபடியாகாதென உச்சநீதிமன்ற நீதியரசர் சரத் என்.சில்வா தீர்ப்பளித்ததார். இதனை அடுத்து 2007,ஜனவரி,01,ல் இரு மாகாணங்களும் மீண்டும் பிரிக்கப்பட்டன.என வர்தமானி அறிவிப்பு வெளிவந்தது.பிரித்தபின்னர் அதனை உறுதிப்படுத்த அவசர அவசரமாக கிழக்கு மாகாணசபை தேர்தல் 2008, ல் இடம்பெற்றது..அதுதொடர்பான வரலாற்று விபரத்தை மீண்டும் ஒரு எனது பதிவில் எதிர்பாருங்கள்.வரலாறுகள் அறியப்படவேண்டியவை.-பா.அரியநேத்திரன்-23/05/2024